Advertise

Featured Post 5

face book இல் பிரபலமான சில போஸ்ட்கள்

Written By mayuran on Thursday, May 3, 2012 | 9:54 PM









இந்த FACE BOOK விசித்திரம் நிறைந்த பல STATUS UPDATE-களைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களின் தத்து பித்துவங்களை கண்டிருக்கிறது. புரியாத சில கவிதைகளை படிக்காமலே லைக் போட்டுக்கொண்டிருக்கிறது.. ஆகவே இங்கே இந்த STATUS UPDATE-ம் விசித்திரமல்ல, போட்டோ டேக்-கும் புதுமையானது அல்ல… என் பெயரோ கவிதைக்காரன்.. மங்களகரமான பெயர். நானொன்றூம் புதுமையான மனிதனுமல்ல.FACE BOOK பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய சராசை ஜீவன்தான் நானும். கவிதைகளை எழுதிக்கொண்டு திரிந்தவனுக்கு கம்மெண்ட் எழுதுவதோடு நிறுத்திக்கொண்டு இருக்கலாம் தான் .ஆனால் இன்று FACEBOOK நீதிமன்ற வாயிலில் நிர்கதியாய் நிற்கிறேன் ஏன்? GROUP- பிலே குழப்பம் விளைவித்தேன் என்றார்கள் . ADMIN-ஐ ஈவு இரக்கமில்லாமல் கலாய்த்தேன் என்றார்கள் . FAKE ID – கேர்ள்ஸோடு ஃப்ரெண்ட்ஸிப் வைத்திருக்கிறேன் என்றார்கள் . கவிதை எழுதி சாகடிக்கிறேன் என்றார்கள். இதையெல்லாம் தாண்டி இந்த STATUS UPDATE-ஐ காப்பி பெஸ்ட் தான் செய்தேன் என்றார்கள் . குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் நீங்கள் நினைக்கலாம் இதை நான் ஒத்துக்கொள்ளப்போவதுமில்லை… என நிச்சயமாக இல்லை… [தபோவனத்தில் தயக்கமே இல்லாமல் சுட்டதன் கட்டிங் ஒட்டிங்- கலந்த கற்பனை தான் இது ஹாஹா ] . GROUP-பிலே குழப்பம் விளைவித்தேன். எதற்காக? GROUP கூடாது என்பதற்காக அல்ல. போஸ்ட் போடுகிறேன் பேர்வழி என்று காந்தி சுடப்பட்டார் என்ற அதரப் பழசான செய்தியை ஐந்தாறு முறை போஸ்ட் செய்கிறீர்களே ஏன்? இரெண்டு வார்த்தை அறிக்கை விட்ட அரசியல் வாதிரை 200 பக்கம் கம்மெண்டில் வறுத்தெடுக்கிறீர்களே ஏன் ? என்று கேட்பதற்காக…! ADMIN-ஐத் கம்மெண்டில் ஈவு இரக்கமில்லாமல் கலாய்த்தேன் ஏன் . அவர் போஸ்ட் செய்த அசின் போட்டோ பிடிக்காமல் அமலா பால் போட்டோ போட சொல்லியா?? இல்லை . அசின் போட்டோ போடுகிறேன் பேர்வழி என்று க்ரூப்பில் இருந்த அத்தனை பிகர்களையும் அசின் ரேஞ்சுக்கு வர்ணித்தான் என்பதற்காக… FAKE ID கேர்ள்ஸோடு நட்பு வைத்திருக்கிறேன் என்கிறார்கள்.. FAKE ID- தான் என்று தெரியாமலா இல்லை … என் பெயர் யாரெல்லாம் ஃபேக் ஐடி என நண்பனுக்கு இருபது தடவை சொன்னாலும் புரியமாட்டேங்குதே… நல்லா பார்ரா அவ. ஃப்ராடு என எடுத்துச்சொல்ல ஆதாரம் வேண்டும் என்பதற்காக… கவிதை எழுதிக் கொல்லப்பார்த்தேன் ஏன் கவிஞர்கள் கூடாதென்பதாலா? இல்லை கவிதை என்ற பெயரில் “ காற்றடைத்த பலூன் நீ உன் கூந்தல் முடியை வெட்ட நினைக்கும் சலூன் நான்” – என மொக்கை போடுபவரையும் கவிஞன் என்று கவிதைக்கான மரியாதையையே கெடுக்கிறார்களே அவர்களை கடுப்பேற்றுவதற்காக… உனக்கேன் இவ்வளவு அக்கறை, FACEBOOK -ல் யாருக்கும் இல்லாத பொல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பாட்டேன் ,, சுனாமி பற்றி உடனுக்குடன் சூடான செய்திகள் என்றார்கள் தேடித் தேடிப்படித்தேன். 4 வருடம் முந்தி வந்த சுனாமி பற்றிய செய்தி அது…கடுப்பாகி ஓடினேன்… ADMIN- ஆக இருந்தவன் அசின் ரேஞ்சுக்கு வர்ணித்த பெண்ணை தேவதை ரேஞ்சுக்கு நானும் வர்ணித்து கவிதை எழுதினேன் . பின்னர் தான் தெரிந்தது அது செம மொக்கை பிகர் என்று …வெறி பிடித்து ஓடினேன் 20 ரூபாய்க்கு ஏர்டெல் ஈஸி வேண்டுமென்று போர்வைக்குள் இருந்து மெஸேஜ் அனுப்பினாள் , மறுத்தேன் பெயர் கேட்டேன் பெண் ஒருத்தி பெயர் சொன்னான் .. நண்பனிடம் இவள் FAKE என்றேன் , ஏளனமாய்ப்பார்த்தான் . நம்பவில்லை நட்பு கடுப்பேற்ற போடா என்றே ஒடினேன் … ஓடினேன் ஓடினேன் முகநூலின் ஒவ்வொரு க்ரூப்பிக்கும் ஓடினேன் எல்லா இடங்களிலும் காந்தி சுடப்பட்ட செய்தியும்,. கவிதை எழுதிக்கொண்டிருப்பவனும் . FAKE id – எனத்தெரியாமல் வழிந்து கொண்டிருப்பவனையும் கண்டேன்.,.. பொங்கி எழுந்தேன் நானும் புரட்சிக்காரனாக மாறி கொடியவன் வேஷம் போட்டேன் இதனை சுயநலம் என்பீர்கள் … என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருக்கிறது… ஆகாரத்திற்காக தடாகத்தின் அழுக்குகளை சுத்தப்படுத்தும் மீன் போல என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் FACE BOOK வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள கணவான்களின் கடுப்பேற்றும் பதிவுகள் எத்தன எத்தனை என்று கணக்கு பார்க்க முடியும். ORIGINAL ID-வைத்திருக்கும் FIGURE-கள் எல்லாம் சுமாராய்த்தான் இருந்தார்கள்.. என் பாதையில், FAKE ID-வைத்திருப்பவர்களே ஏகமாய் வழிந்தார்கள் நெளிந்திருக்கின்றன.. மொக்கை பிகர் மொக்கை பிகர் என வெளியே கிண்டலடித்து இன்பாக்ஸில் ஹாய் செல்லம் என ஹார்ட்டின் அனுப்பும் எத்தனை பேரை உங்களுக்குத் தெரியும்! அரசு வக்கீல் : குற்றவாளி கவிதைக்காரன் யார் யார் வழக்குக்கெல்லாம் வாதாடிக்கொண்டிருக்கிறார்… கவிதைக்காரன் : இல்லை அதுவும் என் வழக்குதான். என்முன்னாள் பிகரின் வழக்கு. பின் அது டம்மி பீஸ் எனத் தெரிந்ததும் கழட்டி விட்டு விட்டேன். அதே பிகரை என் நண்பன் FACE BOOK -ல் உஷார் செய்ததை கண்டு கூட நான் கலங்க வில்லை , அவளை வர்ணித்து என்னையே கவிதை எழுதித்தரச்சொன்னான் அதைத்தான் என்னால் மன்னிக்கவே முடியவில்லை … அதனாலே க்ரூப்பில் கலகம், அட்மினை கலாய்த்தது, ஃபேக் ஐடி வைத்தவனை கூட்டு சேர்த்தது…கர்ண கொடூரமாய் கவிதை எழுதிச்சாகடித்தது… இந்த போஸ்ட்டை காப்பி அடித்து கட்டிங் ஒட்டிங்க் செய்தது எல்லாமும் இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கவிதை எழுதிக்கொண்டிருந்தவனை கடுப்பேற்றி அலையவிட்டது யார் குற்றம்? மொக்கை ஸ்டேட்டஸுக்கு 300 கம்மெண்ட் போட்டவர் குற்றமா? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லிஇன்பாக்ஸில் வறுகடலையை கருக கருக வறுக்கும் வீணர்கள் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை நானும் கவிதை எழுதி உங்களைக் கொல்லப்பார்ப்பதை நிறுத்தப்போவதே இல்லை… கவிதைக்காரன்களும் . பேஜ் ஒப்பன் செய்து “லைக் திஸ் பேஜ் ப்ளீஸ்” என மெஸேஜ் அனுப்புபவர்களும் குறையப்போவதே இல்லை இதுதான் எங்கள் முகநூல் சுவரில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், [ பின் குறிப்பு இந்த மரண மொக்கையான போஸ்ட் முற்றிலும் கற்பனையே.... ஆனால் நிஜத்தில் நடக்காதவை அல்ல..! யார் மனதும் புண் பட்டிருந்தால் என்னை கம்மெண்டில் திட்டி தீர்த்துக்கொள்ளுங்கள் ____________________________________________________ மற்றுமோர் குறிப்பு : என்னைய திட்டுனா... உங்களுக்கு அப்போ ஏதோ இதுல ஒன்னு நடந்திருக்குன்னு ஊரு தப்பா நினைச்சுக்கும் ஹாஹா
(இதற்கு யார் சொந்தக்காரர் என்று தெரிய வில்லை )








0 comments:

Post a Comment