Advertise

Featured Post 5

ஹாய் மதன்......

Written By mayuran on Thursday, May 3, 2012 | 1:16 AM

மதன் இவர் ஒரு பிரபல கார்டூனிஸ்ட் .....இவரை பற்றி சுருக்கமாக ஒரு வரியில் கூறினால் இவர் ஒரு நடமாடும் என்சைகிலோ பிடியா விகடனில் தனது 23 வது வயதில் சேர்ந்தார் ..இரண்டு வருடங்களில் இணையாசிரியர் ஆகிவிட்டார் ..விகடனில் இவரது ஹாய் மதன்  கேள்வி பதில்கள்  மிகவும் பிரபலமானவை வந்தார்கள் வென்றார்கள் மனிதனுக்குள் ஒரு மிருகம் போன்றவை ஜூனியர் விகடனில் தொடர்ச்சியாக வெளி வந்த தொடர்கள் ஸ்டார் விஜய்யில் மதன் திரைப்பார்வை என்ற நிகழ்ச்சியை வழங்கியுள்ளார்  ..இவர் நீண்டகாலம்(25 வருடங்கள் ) விகடனில் பணியாற்றியதன் பின்பு விகடனில் இருந்து வெளியேறிவிட்டார் ..பின்பு குமுதத்தில் கி.மு கி .பி என்ற தொடர்களை எழுதினார்...விகடனில் இருந்து வெளியேறினாலும்  இன்றும் இவர் கார்டூன்ஸ் ,ஹாய் மதன்போன்றவற்றை  தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்   எப்படியோ இவருக்கு வாசகர்களுக்குமிடையே யான தொடர்பு எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது ....'அன்பே சிவம்'  என்னும் திரைப்படத்தின் வசனகர்தாவாகவும் இருந்திருக்கிறார்

மதனுடன் ஆர்னிகா  நாசரின் சந்திப்பின்போது ...

இவரது இயற்பெயர் -மாடபூசி கோவிந்தகுமார் ,
பிறப்பிடம் சென்னை ,
படித்தது BSC பிசிக்ஸ் 
மனைவியின் பெயர் ஜெயந்தி 
இரண்டு மகள்களும் உள்ளனர் ,
பெற்றோர் -கிறிஸ்ன சாமி,ராதா
பிடித்த கார்டூனிஸ்ட் -மாலி டேவிட் லோ ,கோபுலு R.K லட்சுமணன் ,கைல்ஸ் 
பலமும் பலவீனமும் -எனது பலம்தான் பலவீனம் பலவீனம் தான் பலம்

விகடனில் இருந்து மதன் விலகியதற்கு கமல்ஹாசன் தான் காரணம் என்று பலரால் கூறப்பட்டது ...மருதநாயகம் திரைப்படத்தை மதனின் வரலாற்று அறிவை முற்றுமுழுதாக நம்பியே எடுக்கப்படுவதாகவும்  கமல்பொய் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார் ...என்று நீள்கிறது அக்கதை ...இதைப்பற்றி மதன் குறிப்பிடுகையில் ...
"விகடனில் இருந்து நான் விலக கமல் காரணமல்ல இது என் சொந்த  முடிவு  
25 வருடங்கள் தொடர்ந்து பணி புரிந்தபிறகு ஒரு ஒரு stagnation வந்து விடுமோ என்று உணர்ந்தேன் விகடன் என் ஒருவனை சார்ந்து 
நிற்க வில்லை நிறைய திறமைசாலி இளைஞர்கள் வந்திருக்கிறார்கள் 
விகடனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை பூரணமாக செய்துவிட்டதாக ஒரு உணர்வும் இருந்தது 
வெளி உலகம் பார்க்க ஆர்வம் புதியவற்றை கற்றுக்கொள்ள ஆசை பணியிடம் என்பது 
சிறிய கூடு கூட்டிலிருந்து வெளியே பறந்தேன் சுதந்திரம் என்ற  பெண்ணை அடைந்ததாக உணர்கிறேன் 

கமலுக்கும் எனக்கும் இடாயில் உள்ள தொடர்பு இரண்டு இளைஞர்களுக்கு இடையில் காணப்படும் நட்பு....
மருதநாயகத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது ..க்யின் எலிசபத் மருதநாயகத்தின் 
பூஜைக்கு வருகை தந்த பொழுது  நானும் கலந்து கொண்டேன் அவ்வளவு  தான் 

ஆர்னிகா நாசரின் அடுத்த கேள்வி -"ஹாய் மதனில் இடம்பெறும் நிறைய கேள்விகள் நீங்களே தயாரிக்கின்றவை 
நீங்கள் படிக்கும் கடலளவு விடயங்களை செட்டப் கேள்விகளின் மூலம் வெளிப்படுத்துகின்றீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு
உள்ளதே "(மதனுக்கு கோபம் வருகிறதா என்று பார்த்தேன் மனிதர் அசரவில்லை) ஒரு கூடை கடிதங்களை என் முன்னால் காட்டி
சாம்பிளுக்கு ஒரு சில கேள்விகளை வாசித்துக்காட்டினார்  
"கடவுள் ஆணா பெண்ணா ?",telekinesis பற்றி கூறுங்கள் ,ஹிட்லரிடம் இருந்த நல்ல குணம் என்ன ? தலை இல்லாமல் 
கரப்பான் பூச்சி எத்தனை நாள் உயிர்வாளும்? நான் கப்சிப்ஆனேன் சரண்டர் என்பதுபோல் கையைதூக்கினேன்...

ஹாய் மதனில் நீங்கள் மனைவிக்கு பயப்படுகின்றவர் போலவும் ..பெண்களால் பிரச்சனைக்கு உள்ளாகின்றவர் போலவும் 
வெளிப்படுகின்றீர்களே ..இதெல்லாம் தமாஸ்ஸுக்குதானே?

இப்படி கேள்வி கேட்டால் இந்தப்பதிலைக் கூறவேண்டும் என்றுதான் என் மனைவி சொல்லி இருக்கிறார் "ஆமாம் "


பொதுவாகவே எழுத்தாளர்களின் திருமண வாழ்க்கை திருப்திகரமாக இருப்பதில்லையாமே ?
பல எழுத்தாளர்கள் தங்கள் மனைவி மார் மீது புகார் தெரிவிக்கின்றார்களே ?
கிரியேட்டிவ் பீப்பிள்இற்கு ஜிப்ஸி வாழ்க்கை  முறைதான் பொருந்துமா ?
செக்ஸ் அனுபவிக்காமல் ஒரு படைப்பாளி பூரணமடைய முடியாதா ?

(சற்று சீரியஸ் ஆகின்றார் ) பெண் துணை இல்லாமல் படைப்பாளிகள் மட்டுமல்ல 
எந்த ஆணும் வாழ  முடியாது  சுயநலம் மிக்கவர்கள் தான் பெண்களை குறை கூறுவார்கள் 
எல்லோருக்கும் செக்ஸ் தேவை முக மூடியை கழற்றி வைத்து விட்டு குடும்பம் நடத்தினால் 
படைப்பாளிகளின் குடும்ப வாழ்க்கை ருசிக்கும் ஜெயிக்கும் 

உங்களின் சினிமா கிளாமர் கூடிய அறிவு ஜீவி இமேஜ் சுகமா சுமையா ?

:எதேன்ஸ் oracle delphi கோயிலில் இருந்து அதன் தெய்வம் "கிரேக்க நாட்டின் முதல் அறிவாளி 
சக்கிரட்டீஸ்" என அறிவித்தது மக்கள் குழுமி  இது பற்றி சக்கிரட்டீசிடம் கேட்ட போது "கிரேக்க நாட்டின் முதல் 
முட்டாள் என்பதை நான் புரிந்துகொண்டேன் அதனால்தான் தெய்வம் அப்படிக்கூறியிருக்கக்
கூடும் என்றார் ..அறிவு ஜீவி இமேஜ்
ஒரு மாயை அதில் நான் சிக்க மாட்டேன் ...இவ்வாறு மதனுடனான  பேட்டி முடிகின்றது ...
மதன் தற்பொழுது ஜெயா டிவியில்  Madan Talkies  என்ற சினிமா விமர்சனத் தொகுப்பை வழங்கி வருகின்றார் ...இந்நிகழ்ச்சியில் உலக சினிமாக்கள்  தற்பொழுது வந்த புதிய ஹாலிவுட் திரைப்படங்கள் அனைத்தும் பிரித்து மேயப்படும் ...
மதன் கலைஞர் டிவியில் நாளைய இயக்குனர்  நிகழ்ச்சியில் பிரதாப்புடன்  

சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் ...மதன் நிகழ்ச்சியை விட்டு 

நீங்கியதும் அந்த நிகழ்ச்சியை பார்க்க எனக்கு பவர்ஸ்டாரின் படம் பார்ப்பது

போல் இருந்தது .... புதிய தலைமுறை இயக்குனர்கள் இந்த  நிகழ்ச்சியில் 

தமது திறமைகளை வெளிக்காட்டுகின்றனர் ..அனால் அதைப்புரிந்து 

கொள்வதற்கு ...இப்பொழுது அந்த நிகழ்ச்சியை வழங்கிக்கொண்டிருக்கும் 

சுந்தர் சி ,பாக்கிய ராஜ் போன்றோரால் ஈடுகொடுக்க முடியாமல் இருப்பது 

நேரடியகத் தெரிகிறது ...

ஒரு நிகழ்ச்சியில்  வெர்ச்சுவல் ஹோலோக்ரம் தொழில் நுட்பத்தை 

பயன்படுத்தி interview ஒன்றை நடத்துவதாக ஒரு இளைஞர்  தனது சோர்ட் 

பில்மை  வெளியிட்டார் பக்கியரஜ்ஜிற்கு அது என்ன இலவேன்றே புரிய 

வில்லை ...சுந்தர்சி கொஞ்சம் சமாளித்து விஷயத்தை முடித்து விட்டார்கள் ..  


மதனது சில கார்டூன்ஸ் ..........





























0 comments:

Post a Comment