Advertise

Featured Post 5

Welcome Guys

history

Featured Post 4

குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலாவி

Written By mayuran on Sunday, May 13, 2012 | 7:18 PM


இணையத்தை சகலரும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் தற்பொழுது 18 வயதுக்கு குறைந்தவர்களும் இணையத்தில்  வலம் வர ஆரம்பித்து விட்டார்கள்  இவர்கள் இணையங்களுக்கு புதியவர்கள் எனவே இணையத்தில் எதிர் நோக்க வேண்டியிருக்கும் பிரச்சனைகளுக்கு பெற்றோர்தான் கூடிய அளவில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது 
குழந்தைகளின் இணையப்பாவனை தொடர்பான புள்ளிவிபரங்கள் இதோ 
5 % மான பெற்றோர்களுக்கு தமது குழந்தைகள் இணையத்தில் என்ன செய்கிறார்கள் என்று புரிவதில்லை
17 % ஆன குழந்தைகள்  தமது பெற்றோருக்கு  நாம் இணையத்தில்  என்ன செய்கின்றோம் என்பது விளங்குவதில்லை என்று நம்புகிறார்கள் 
73 % ஆன பெற்றோர்  இணையத்தை பயன்படுத்துவதற்கு தமது குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் 
இணையத்தை பயன்படுத்தும் 10 இல் ஒரு சிறுவன் வயது வந்தோருக்கான தளத்தை பார்வையிடுகின்றான் 

குழந்தைகளின் அறிவாற்றலைப் பெருக்குவதற்கு இணையம் உதவினாலும் வன்முறைகள் ,தேவையற்ற கலந்துரையாடல்கள் 
ஆபசத்தளங்கள் போன்றவற்றிற்கு சென்றுவிடக்கூடாது என்பதில் பெற்றோர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர் ..ஆனால் எந்நேரமும் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை அவதானித்துக்கொண்டிருக்க முடியாது எனவே அவர்களின் பாதுகாப்பான இணைய பாவனைக்கு குழந்தைகளுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உலாவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது இதன் பெயர் kidzui

இத்தளத்தை உருவாக்கியவர்கள் பல மில்லியன் கணக்கான வீடியோக்கள் தகவல்கள் படங்கள் போன்றவற்றை பலமுறை சோதனை செய்து பாதுகாப்பானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே இதில் இணைத்திருக்கிறார்கள் அத்துடன் இதில் குழந்தைகளுக்கான பல விளையாட்டுக்களும் உள்ளன ..பெற்றோரால் இணைய உலாவுதலைக் கட்டுப்படுத்தக்கூடிய parental controls இருக்கின்றது இதனை நிறுவிக்கொண்டால் குழந்தைகள் இவ்வுலாவியை மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக செய்துவிடலாம் ..இதை தரவிறக்கம் செய்ய click




7:18 PM | 0 comments | Read More

விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-02

[இதன் முன்னைய பதிப்பிற்கு விடுதலை வீரர் சுபாஷ் சந்திரபோஸ்-01 ]
வெளிநாட்டு பயணம் 

முன்னைய பதிப்பில் குறிப்பிட்டது  போல் நேதாஜியும் அவரின் தோழர்களும் 2 ஆண்டு காலம் தங்கள் கல்வியை தொடரமுடியாதவாறு இடைநிறுத்தப் பட்டனர். இதனால் தன் கல்வியை ஓராண்டு காலம் தொடர முடியாதிருந்த நேதாஜி சி .ஆர் .தாஸ் சி ஆர் தாஸ் என்று அறியப்பட்ட இவர் சித்தரஞ்சன் தாஸ் ஆவார் பின்னாளில் நேதாஜி இவரின் கீழ் தான் தன் தேசத் தொண்டை ஆரம்பித்து ஆற்றினார். வழக்கறிஞரான சி ஆர் தாஸ் தன் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை தாங்கி   தேசப் பணியாற்றியவராவார். தான் சம்பாதித்த சொத்துகளை எல்லாம் மகளுக்கே கொடுத்தவர். ]     மற்றும் சிலரின் உதவியுடன் 1917 ஆம் ஆண்டு ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்தார் அங்கு   நேதாஜி 1919 ஆம் ஆண்டு B .A  பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன் மாணவர்களுக்குரிய ராணுவப் பயிட்சியிலும் சிறப்பாக தேறினார். அக்காலத்தில் நாட்டுச் சூழ்நிலை பற்றி அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட நேதாஜியை பார்த்த அவரது தந்தையார் இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது அவரை லண்டனுக்கு ஐ.சி.எஸ் தேர்வுக்கு படிக்க   அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு போயும் மேலைத்தேய மோகங்களில் நாட்டம் செலுத்தாத சந்திரபோஸ் எதிலும் பற்றற்று இருந்ததால் நண்பர்களால் பகிடியாக சாமியார் போஸ் என்றழைக்கப்பட்டார்.   மேலும் அங்கு நேதாஜி "ஏழரைக்கோடி மக்களை கொண்ட இங்கிலாந்து எப்படி முப்பது கோடி மக்களை கொண்ட இந்தியாவை ஆட்சி செய்துவருவதுடன் இவ்வளவுகாலமும் எவ்வாறு தாக்கு பிடிக்க முடிந்தது" என்று குழப்பமுற்றார்.இவ்வாறு தன் படிப்பை தொடர்ந்த போஸ் லண்டனில் நடந்த "இந்தியன் சிவில் சர்வீஸ்" எனப்படும் ஐசிஎஸ் தேர்வில் 1920 ஆம் ஆண்டு ஆடி மாதம் 4 ஆவதாக தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால் தன் நாட்டை அடிமைப்படுத்தி  வைத்திருக்கும் ஆங்கிலேயனிடம் தன் தாய் நாட்டில் வேலை செய்வதா என்று கோபமுற்ற நேதாஜி கஷ்டப்பட்டு படித்து பெற்ற   தன் ஐசிஎஸ் பதவியை லண்டனிலேயே ராஜினாமா செய்தார். மேலும் கடிதம் மூலம் சி.ஆர்.தாஸ் இடம் தான் தாய் நாடு திரும்பியதும் இந்திய சுதந்திரதிட்காக தன்னை  எப்பணியிலும்  ஏவலாம் என ஆலோசனை கேட்டிருந்தார்  . அதை ஏற்ற சிஆர் தாஸும் நேதாஜி வரும் பட்சத்தில் தான் ஏற்றுகொள்வதாகவும் நேதாஜி பதவி துறந்ததை இட்டு பாராட்டுக்களையும் கூறி மறுகடிதம் அனுப்பினார்.   இக்காலகட்டத்தில் தான் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியிருந்த காந்திஜியும் இந்திய அரசியலில் ஈடுபட்டதுடன் இந்திய மக்களும் காங்கிரசின் தலைமையின் கீழ் சுதந்திர எழுச்சி பெற்றிருந்தனர். 1921 ஆம் ஆண்டு ஆடிமாதம்   16 ஆம்  திகதியன்று பம்பாய் துறைமுகத்தில் வந்திறங்கிய   சந்திரபோஸ் பம்பாயில் அப்போது தங்கியிருந்த காந்திஜியையும் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். அப்போது "ஒரே ஆண்டில் இந்திய சுதந்திரத்தை பெற ஏதாவது வழி உண்டா...???? " என கேட்ட நேதாஜியின் கேள்விக்கு பதில் கூறாமல் தட்டி கழித்துவிட்டார் காந்திஜி இதானால் தான் பின்னாளில் நேதாஜி காந்திஜி பற்றி குறிப்பிடும் போது காந்திஜி முதல் சந்திப்பிலேயே தன்னை கவரவில்லை என குறிப்பிட்டிருந்தார்.  ஆனால் நேதாஜி சித்தரஞ்சன்தாஸின் கீழ் தொண்டாற்றவே விரும்பியிருந்ததுடன் ஒரு மரியாதைக்காகவே காந்திஜியை சந்தித்திருந்தார். நேதாஜியை ஏற்று கொண்ட சி.ஆர்.தாஸும் நேதாஜியின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன் திறமைமிக்க அவரது குடும்ப பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ் தான் நிறுவிய "தேசியக் கல்லூரி" அதிபராக 25 வயது வாலிபனான போஸை நியமித்திருந்தார்.  லண்டனில் கேம்பிறிட்சில் படிக்கும் போது மேல்நாட்டு விடுதலை போர் வரலாறுகளையும் பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ் தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம் சொற்பொழிவு ஆற்றியதுடன் பாடமும் கற்பித்தார். 
அரசியல் நுழைவு  


இவ்வாறு நேதாஜியின் பேச்சால் கவரப்பட்ட பல மாணவர்கள் நேதாஜிக்காக எதையும் செய்ய தாயாராய் இருந்தனர். இது இவ்வாறு தொடர வேல்ஸ் எனும் இளவரசரை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டிஷ் அரசு தீர்மானித்து இருந்தது இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் ஆதிக்ககாரர்களும் வேல்ஸ் இளவரசரை வரவேற்க நாடுபூராயும்  பாரிய ஏற்பாடு மேட்கொண்டிருந்தனர் ஆனால் சுயாட்சி அதிகாரத்தை தரமறுத்த பிரிட்டிஷின் ஒரு கூறான இளவரசரின் வருகையை இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். இதன்படிதான் கார்த்திகை மாதம் 17 ஆம் திகதி பம்பாய் துறைமுகத்தை வேல்ஸ் இளவரசர் வந்தடையும் போது நாடு முழுதும் பூரண ஹர்த்தாலுக்கு காந்திஜி அழைப்பு விடுத்தார். அதன்படி கல்கத்தா நகரில் ஹர்த்தாலை நடத்தும் பொறுப்பை சி.ஆர்.தாஸும் சந்திரபோஸிடம் அளித்திருந்தார் அதை ஏற்றிருந்த  நேதாஜி கல்கத்தா நகரில்   17 ஆம் திகதி பரிபூரண ஹர்த்தாலை நடத்தியிருந்தார். அதுவரை  காங்கிரசின்  பிரச்சார பிரிவில் தொண்டாற்றி வந்த சுபாஷ் அரசியல் போராட்டத்திற்கு முதல் முறை தலைமை தாங்கியபோதும் தான் பேச்சில் மட்டுமல்ல செயலிலும் வீரர் தான் என நிருபித்திருந்தார். நாடுமுழுதும்  பொதுவாக  அனுட்டிக்கப்பட்ட ஹர்த்தாலை விட கல்கத்தாவில் நேதாஜி தலைமையில் ஹர்த்தால் பரிபூரணமாக அரங்கேறியிருந்தது. இதனால்  கடுப்படைந்திருந்த அரசாங்கம் பொதுக்கூட்டம் ,ஆர்ப்பாட்டம் ,ஊர்வலம் போன்றவற்றிற்க்கு தடை விதித்திருந்தது.
                                                                                    .............. தொடரும் ....................
 அடுத்தபதிவில் நேதாஜியின் சிறை வாசம் பற்றி பார்க்கலாம் 
ஏதாவது தவறுகள் இருப்பின் அறியத்தரவும்    
8:30 AM | 0 comments | Read More

வீடியோ எடுத்தவன்தான் உண்மையில் வேற்றுக்கிரக ஜந்து

ஒரு வீடியோ பரவலாக இப்பொழுது facebook இல் ஷேர் பண்ணிக்கொள்ளப் பட்டு வருகின்றது ..ஒரு தாய் தனது குழந்தையை அடிப்பது போன்ற வீடியோதான் அது ...வீடியோவின் தலையங்கம் "நாசமப்போறவள் என்ன கொடுமையை செய்கிறாள் ?" ..வீடியோவில் காட்டப்பட்டிருக்கும் பெண்ணுக்கு மன நிலை சரியில்லை என்று தெளிவாகவே தெரிகிறது ...பின்னால் ஒரு சிறுவன் அதை சாதாரண நிகழ்ச்சி போல் பார்த்துகொண்டு இருக்கிறான் ..இதிலிருந்து இந்த நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறுவதாக தெரிகிறது ...அந்தப் பெண்ணை நாம் நொந்து கொண்டு ஒரு பயனும் இல்லை இவளவும் நடக்கும் போது அந்தக் குழந்தையைக் காப்பாற்றாமல் ...சர்வசாதரணமாக வீடியோ எடுத்த அந்தப் பன்னாடையை தான் நாங்கள் உண்மையில் திட்ட வேண்டும் ..வீடியோ எடுத்த வெங்காயம் தான் உண்மையில் வலது குறைந்த வேற்றுக்கிரக ஜந்து ..என்ன சொல்கிறீர்கள் ? (இது ஏதோ வெங்காயத்தை பிரபலப் படுத்த போடப்பட்டதல்ல ...உண்மையில் எனது கோபத்தின் வெளிப்பாடு இது ....) 
8:18 AM | 0 comments | Read More

சாபம் விட்ட நித்தியானந்தா

Written By mayuran on Saturday, May 12, 2012 | 8:06 PM

என்னது சாபம் விட்டாரா ?அவர் cd விட்டவர் என்னுதான் கேள்விப்பட்டன் இப்ப சாபம் வேற விட்டிருக்கார ? ஆமாங்க அவருக்கு ரொம்ப ரோசம் வந்திட்டுதாம் ...நித்தியானந்தா ரஞ்சிதாவுடன் சேர்ந்து அடித்த கூத்தை சன் டிவி இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்று விளம்பரம் செய்யாத குறையாகப் போட்டுக்காட்டியது உங்களுக்கு நினைவிருக்கும் ..ஏதோ வழக்கமான செய்தி தானே என்றுஅதில் என்ன செய்தி வரப்போகின்றது என்று தெரியாமல் குடும்பம் குழந்த குட்டிகளோடு சேர்ந்து அதைப்பார்க்கும் போது முகம் சுழித்ததும் நினைவிருக்கும் ....அதோடு உலக அளவில் பிரபலமாகி விட்டார் நித்தி ..நல்ல வேளையாக அவரது வீடியோ youtube இல் கோடிக்கணக்கானோரால் பார்க்கப்பட வில்லை ..அப்படி நடந்திருந்தால் மன்மோகன்சிங்கு...தேநீர் விருந்துக்கு அழைத்தாலும் அழைத்திருப்பார் ... அன்றிலிருந்து நித்தியனந்தவிற்கு  facebook 
ஊடகங்களில் அப்படி ஒரு வரவேற்பு ..நித்தியை பிழிந்து காயப்போட்டு விட்டார்கள் .... facebook இல் தனிக்கட்சி ஆரம்பித்து கிழித்தார்கள் என்பது வேறு விடயம் ..இது போக youtube இல் நித்தியனந்தவின் சொற்பொழிவிற்கு அண்ணன் கவுண்டமணி இடையில் புகுந்து தனது பாணியில் குதறி விட்டார் ..பின் தொடர்ச்சியாக இப்படி பல வீடியோக்கள் இல் வலம் வந்தன ..இவைகள் நித்தியனந்தவின் காதுக்கு எட்டாமல் போய் இருக்குமா என்ன ?
பின்னர் தனது அண்மைய சொற்பொழிவில்இந்த வீடியோவை பழித்துக்கூறுபவர்கள் யாராக இருந்தாலும் நான் அவர்களை அழித்து விடுவேன் நான்தான் கால பைரவன் என்று சாபமிட்டிருக்கிறார் நித்தி ....அதுவும் ஆங்கிலத்தில் தான் சாபமிட்டார் என்பதை குறிப்பிட விரும்புகிறேன் ..


இவரது பேச்சுக்கு கைதட்டி ஆரவாரித்து கொடி பிடிப்பதற்கென ஒரு கூட்டம் இன்னமும் இவர் பின்னால் இருக்கின்றது என்பதுதான் கவலைக்குரிய விடயம் ..
இவரது வீடியோ வெளியிடலுக்கு ஒரு வெங்காய விளக்கம்வேறு கொடுத்திருந்தார்...(ரஞ்சிதாவுடனான வீடியோ காட்சி கிராபிக்ஸ் என்றும் மார்பிங் என்றும் நித்தியானந்தா சொன்னாலும், அந்த வீடியோக் காட்சிகளை துல்லியமாக ஆராய்ந்த ஹைதராபாத், டெல்லியில் இருக்கும் மத்திய அரசின் தடயவியல் ஆய்வகங்கள், அவை உண்மையான வீடியோ காட்சிகள் தான் என்றும், படுக்கையறைக் காட்சிகளில் இருப்பது நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும்தான் என்றும் அறிக்கை கொடுத்துள்ளது. அது பெங்களூர் கோர்ட்டில் சிஐடி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது )
 வடிவேல் விஜயகாந்தால் அல்லோலப்பட்ட மதுரை இன்று ஆதினத்தல் அல்லோலப்பட்டுக்கொண்டிருக்கிறது ... ஏப்ரல் 11-ம் தேதி, நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா மதுரை ஆதினத்திற்கு சென்றிருந்தார் ... அப்போதே பலரும் சங்கடப்பட்டார்கள்.


'புனிதமான மதுரை ஆதீனத்துக்குள், சர்ச்சையில் சிக்கிய ஒருவர் 

நடிகையுடன்வரலாமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள் இன்று 

நித்தியானந்தா  மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் நித்தியானந்தாவுக்கு கிரீடம் சூட்டி தனது அடுத்த வாரிசாக நித்தியானந்தாவை அறிவித்து நித்தியானந்தா முடி சூட்டப்பட்டர் ...இதனால் இவரை இனி ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சஸ்ரீ நித்தியானந்த ஸ்ரீ 

ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என அழைக்கப்படுவாரம் 

பாவம் ரஞ்சிதா 

எப்படித்தான் அழைக்கப்போகிறாவோ?
  







இவர் ஆதீனமாக தெரிவு செய்யப்பட்டது தொடர்பில் ஜூனியர் விகடனில் வெளியாகிய கட்டுரை 

தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தின் தலைவர் கணபதி சந்தானத்திடம் இதுகுறித்துப்
பேசினோம். ''திருஞானசம்​பந்தரால் உருவாக்கப்பட்டது மதுரை ஆதீன மடம். சிறந்த
முறையில் சைவத் தொண்டாற்றி மக்களைப் பண்புள்ள மனிதர்களாக உருவாக்கிய ஒரு
பாரம்​பரியமான மடத்துக்கு, செக்ஸ் வழக்கில் சிறை சென்று வந்த ஒருவரை, இன்னும்
வழக்கில் இருந்து விடுபடாத ஒருவரை, அடுத்த மடாதிபதியாக ஆதீனகர்த்தர் நியமித்து
இருப்பது கண்டிக்​கத்தக்கது. வருந்தத்தக்கது.
சைவப் பாரம்​பரியத்தில்
வந்தவர்​களுக்கும் ஆன்மிகத்​துக்கு சிறந்த தொண்டாற்றி பல்வேறு அறிஞர்களை
உருவாக்கிய சைவ சமயத்தாருக்கும் இது மாபெரும் இழுக்கு. இந்தச் செயலை சைவப்
பாரம்பரியத்தில் வந்த எவரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, ஆதீனகர்த்தர்
அவர்கள் தனது அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற்று, சைவ சமயத்துக்கு உண்மையாகத்
தொண்டாற்றும் ஒருவரை நியமிக்க வேண்டும். சைவ வேளாளர் பிரிவில் உள்ள 13
சாதிக்காரர்கள்தான் மதுரை ஆதீனமாக வர முடியும். ஆனால், மரபுகளை மீறி,
முதலியார் சாதியைச் சேர்ந்த நித்யானந்தாவை அடுத்த வாரிசாக அறிவித்திருக்கிறார்
ஆதீனம். ஆதீனத்தின் செயல்பாடுகள் எல்லாமே முரண்பாடாகவே இருக்கிறது.
தருமபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்கள், கல்லூரி​களைத் தொடங்கித் தமிழை
வளர்க்கிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் பழைய தமிழ் நூல்களை எல்லாம்
புதுப்பித்து வெளியிட்டு சேவை செய்கிறார்கள். மதுரை ஆதீனம் இதுவரை தமிழுக்காக
என்ன செய்திருக்கிறார்? நித்தியானந்தா ஒரு கோடி கொடுத்தால், மடத்தை
விக்கிறதுக்கு இது என்ன மாநகராட்சி டெண்டரா? அப்படியானால் நாளைக்கு இன்னொருவர்
இரண்டு கோடி கொடுத்தால், அவருக்குப் பட்டம் சூட்டுவாரா? ஆதீனம் தன்
இஷ்டத்துக்குச் செயல்படுவதற்கு மடம் ஒண்ணும் அவங்க பாட்டன் சொத்து இல்லை.
நித்யானந்தா சைவ வேளாளரே அல்ல. அவருக்குப் பட்டம் சூட்டியது செல்லாது என்று
கோர்ட்டுக்குப் போகப்போகிறோம். அரசாங்​கமும் இந்த விஷயத்தைக் கவனிக்க
வேண்டும்'' என்றார்.

பெங்களூருவில் இருந்த மதுரை ஆதீனத்தைத் தொடர்புகொண்டு பேசி​னோம். ''எங்களைப்
போல அனைத்துத் திறமைகளும் தகுதிகளும்கொண்ட ஒரு துணிச்சலான மாவீரனைத்
தேடிக்கொண்டு இருந்தோம். பார்வதி தேவியும் சிவபெருமானும் நித்தியானந்தாவை
அடையாளம் காட்டினார்கள்
அவர்களது உத்தரவை ஸ்டே பண்ணி வைக்கக் கூடாது. அதனால்,
அவசர அவசரமாக நித்தியானந்தாவுக்குப் பட்டம் சூட்டிவிட்டோம்'' என்றார்.

செக்ஸ் புகாரில் சிக்கிய ஒருவரைத்தான் ஆதீனமாக தெரிவு செய்ய 

வேண்டுமா என்று கேட்டதற்கு ஆதீனத்தின் பதில் 

இது ஒரு பெரிய பிரச்னையா? செக்ஸ் குற்றச்சாட்டு யார் மீதுதான் இல்லை. புகார்
கொடுக்கணும்னா, திருமணமாகி பிள்ளை பெற்ற அத்தனை பேர் மீதும் செக்ஸ் புகார்
குடுக்கலாம். ஒரு பொம்பளைப் பிள்ளைகிட்டப் பேசுறது தப்பா? நாமெல்லாம் பெண்ணில்
இருந்துதானே வந்தோம். மதுரை ஆதீனத்திலும், 'வைஷ்ணவி, கஸ்தூரி, மாதவி,
கோபிகா’னு நிறையவே பெண்கள் பணிவிடை செய்கிறார்கள். அதற்காக எங்கள் மீதும்
ஏதாவது பழி போடுவதா? மதுரையை ஆண்ட கூன்பாண்டியனின் மனைவி மங்கையர்க்கரசிதானே
திருஞானசம்பந்தரை அழைத்து வந்து மதுரை ஆதீன மடத்தையே தொடங்கினார். பெண்களின்
சிறப்புகளை மதித்து அவர்களின் மாண்புகளைக் காக்கிற மடம், மதுரை ஆதீன மடம். அதே
நிலைப்​பாட்டில்தான் நித்தியானந்தர் பீடமும் இருக்​கிறது. சைவ வேளாளர்
சங்கத்தினர் ஆதீனம் எடுத்திருக்கும் இந்த முடிவைப் பாராட்டி வரவேற்காமல், பழி
போடுவது வேதனையாக இருக்கிறது''

அடுத்து நித்தியானந்தாவிடம் பேசினோம் ''ஸ்வாமி அவர்கள் என்னை மதுரை ஆதீனத்தின்
அடுத்த குருமகா சந்நிதானமாக அறிவித்​திருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக
இருக்கிறது. முதலில் தயக்கமாக இருந்தாலும், இப்போது தைரியம் வந்துவிட்டது.
இந்த வாய்ப்பை முழுமையாக ஏற்று இன்னும் மூன்று ஆண்டுகளில் மதுரை ஆதீனத்தை அகில
உலக ஆன்மிக இயக்கமாக மாற்றிக்​காட்டுவோம். நித்தியானந்தர் தியான பீடத்துக்கு
151 நாடுகளில் மையமும் 40 நாடுகளில் கிளைகளும் இருக்கின்றன. உலகம் முழுவதும்
1.20 கோடி சீடர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு நாங்கள் நினைத்ததை
முடிப்போம்
. பிடதி ஆசிரமப் பணிகள் இருப்பதால், மதுரை ஆதீனத்தில் என்னால்
முழுமையாகத் தங்கி இருக்க முடியாது என்றாலும், அடிக்கடி மதுரைக்கு வருவேன்''
என்கிறார் பூரிப்புடன்.

'ஒரு கோடிக்கும் தங்க சிம்மாச​னத்துக்கும் உங்களது சுயநலத்​துக்​காகவும்

மதுரை ஆதீனத்தை நித்தி​யானந்தாவிடம் அடகு வைத்து​விட்ட​தாகச்

சொல்கிறார்களே...''

இந்தக் கேள்விக்கு அருகில் இருந்த நித்தியானந்தாவே பதில் சொன்னார். ''நானும்,
நித்தியானந்தர் பீடத்தின் சீடர்களும் பீடத்தின் அசையும் அசையா சொத்துக்களும்
குரு மகா சந்நிதானத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். இனி நாங்கள் வேறு,
அவர்கள் வேறு அல்ல. எங்களது அன்பின் அடையாளமாகத்தான் சந்நிதானம் அவர்களின்
சமுதாயப் பணிகளுக்காக இந்தச் சிறிய தொகையை பாத காணிக்கையாகத் தந்திருக்கிறோம்.
வேறு எதுவும் சொல்லி இதைக் கொச்சைப்படுத்த வேண்டாம். இந்தத் தொகையை இப்போது
ஐந்து கோடியாகக் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.


நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தை வீழ்த்தி​விட்டாரா?''

''ஆதீனத்தை யாரும் வீழ்த்த முடியாது. அவருக்கு ஏராளமாய் சொத்துக்கள் இருக்கு.
அதனால் எங்களை வீழ்த்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. சிவபெருமான் - பார்வதி
தேவியின் அஸ்திரம்கொண்டு நாங்கள்தான் அவரை வீழ்த்தி இருக்கிறோம்.''

முடி சூட்டப்பட்ட அன்று நடைபெற்றவை 

சரியாக 9.05 மணிக்கு மதுரை ஆதீனமான அருணகிரி, நித்தியானந்தாவை மதுரையின்
293-வது ஆதீனமாக அறிவித்தார். கூடவே வெள்ளைப் பேப்பரில் மேடையில் வைத்து
கையெழுத்து போடப்பட்டது. இதனால் அகம் மகிழ்ந்துபோன நித்தி, ஒரு கோடி
ரூபாய்க்கான செக்கை மதுரை ஆதீனத்திடம் வழங்கினார். கூடவே, ஆறு அடி உயர தங்கச்
செங்கோல் வழங்கி, தங்கக் கிரீடத்தையும் அணிவித்தார். மதுரை ஆதீனமும்
நித்தியானந்தாவுக்குத் தங்கக்கிரீடம் அணிவித்தார். நித்தியானந்தா மற்றும்
மதுரை ஆதீனத்தின் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்ட பக்தர்கள், சத்தமாக
ஒலித்த சினிமா பாடலுக்கு ஏற்ப ஆட்டம் போட ஆரம்பித்தனர். மதுரை ஆதீனமும்
ஆடலுக்கு ஏற்ப தலையை ஆட்டி ரசித்தபடி, ஆடுபவர்களை உற்சாகப்படுத்தினார். இதை,
முன்வரிசையில் இருந்து பார்த்த ரஞ்சிதா, அமைதியான சிரிப்போடு ரசித்தார்.

விழாவில் பேசிய மதுரை ஆதீனம்

, ''திருஞான சம்பந்தரால் 1,500 ஆண்டுகளுக்கு முன்
தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனத்தை, எனக்குப் பிறகு யார் கண்ணியமாகக்
கண்காணிக்கப் போகிறார்கள் என்ற கவலையில் பல நாட்கள் தூக்கமின்றித் தவித்தேன்.
அப்படி சிந்தனையுடன் ஒரு நாள் இரவு தூங்கியபோது, சிவபெருமான் என் கனவில்
தோன்றி, 'நித்தியானந்தாதான் உனக்கு சரியான வாரிசு’ என்று சொன்னார்
.
அதன்பிற‌கு, பெங்களூரு ஆசிரமத்துக்கு வந்து நித்தியானந்தாவோடு
பழகிப்பார்த்தேன். அவரும் என்னை மதுரையில் வந்து பார்த்தார். அவருடைய
ஆசிரமத்தில் ஆண்கள், பெண்கள் அனைவரும் தங்களை மறந்து ஆடிப்பாடி
மகிழ்கிறார்கள். நானும் நேற்று அவர்களோடு சேர்ந்து ஆடினேன்.அப்போது பல
பெண்கள், 'அடடா... ஆதீனமே ஆடுது’ என ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.
இப்படித்தான்
எல்லோரும் ஜாலியாக இருக்க வேண்டும். நித்தியானந்தாவின் இந்த அணுகுமுறையை நான்
ரொம்ப லைக் பண்றேன். நித்தியானந்தா மிகவும் இளமையாக இருக்கிறார். அதனால்
என்னைவிட அவரால் நன்றாக ஆன்மிகப் பணியில் ஈடுபட முடியும். இந்து மதத்தை அவரால்
மட்டுமே சரியான திசையில் வளர்க்க முடியும். கூடவே, ஆதீனத்தின் கொள்கையான சைவ
சித்தாந்தத்தில் நித்தியானந்தாவும் ஆழமாக இருப்பதால், எனக்கு ரொம்பப் பிடித்து
விட்டது. நித்தியானந்தா மாதிரி புனிதமானவரைப் பார்க்கவே முடியாது. எனவே, மதுரை
ஆதீனத்துக்குச் சொந்தமான இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களையும்,
1250 ஏக்கர் நிலத்தையும், கோயில்களையும் நித்தியானந்தாவே நிர்வகிப்பார். எனவே
நீங்கள் அனைவரும் 293-வது மதுரை ஆதீனமான நித்தியானந்தாவை, 'ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ
பரஹம்ச நித்தியானந்த ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள்’ என்று
பயபக்தியோடு அழைக்க வேண்டும்'' என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசி
முடித்தார்.


எப்படி மதுரையைப் பிடித்தார் நித்தியானந்தா? சில கதைகளைச்

சொல்கிறார்கள்

கதை ஒன்று:

சி.டி. மேட்டரில் சிக்கியதில் இருந்தே, நித்தியானந்தாவின் இமேஜ் ஈடு செய்ய
முடியாத அளவுக்கு டேமேஜ் ஆகியிருந்தது. அதை எப்படியாவது மீட்டுக்கொள்ளத்
துடித்தார். கர்நாடகத்தில் எந்த மடாதிபதியும் இவரை அருகில் சேர்க்கவே இல்லை.
அதனால், தமிழகத்தில் தன்னுடைய செல்வந்த பக்தர்கள் மூலமாக காய் நகர்த்த
ஆரம்பித்தார்.

மதுரையில் இருக்கும் பிரபல பிசினஸ் புள்ளிஒருவர் ஹீலிங் டச் மூலமாக
நித்தியானந்தாவால் கடந்த ஆண்டு குணப்படுத்தப்பட்டார். அவர் மூலமாக
ஆதீனத்​துக்கு அறிமுகமாகி, அவரை பெங்களூருவுக்கு லவட்டிக் கொண்டு​வந்து மூன்று
மாதங்களுக்கு மேலாகத் தன் சேவையில் ஆதீனத்தை வைத்துப் பராமரித்தாராம்.
ஆதீனத்​தை ஹாங்காங் கூட்டிச் சென்றும் ஆன்மீக சேவையை அரங்கேற்றி​னாராம்
நித்தி. அங்கே நடந்தவை குறித்தும் பல்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன!

கதை இரண்டு:

மதுரை ஆதீனத்துக்குப் பணச் சிக்கல் இருந்தது. நித்தியிடம் எக்கச்சக்கமாகப்
பணம் இருந்தது, ஆனால், போதிய மதிப்பு இல்லை. அதனால், இருவரும் ஒருவரை ஒருவர்
சந்தித்துப் பேசி தேவைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். வேறு எந்தக் காரணமும்
இல்லை.

கதை மூன்று:

ஆதீனத்துக்கும் நித்தியானந்தாவுக்கும் நீண்ட காலமாகவே நல்ல தொடர்பும் உறவும்
உண்டு. இருவரும் பல்​வேறு ஊர்களுக்கும் நாடுகளுக்கும் ஒன்றாகவே போய்
வந்திருக்கிறார்கள். அந்த நேரங்களில் மதுரை ஆதீனத்தின் ஆர்வங்களை மிகத்தெளிவாக
அறிந்துகொண்ட நித்தியானந்தா, சரியான நேரத்தில் காரியத்தைச்
சாதித்துக்கொண்டார். மதுரையில் வைத்து பதவியேற்பு விழாவை நடத்தினால் பிரச்னை
வரும் என்றுதான் பெங்களூருவில் நடத்தினார்.

ஆட்சிக்கு ஐஸ் வைத்த ஆதீனம் 
உலகத்திலேயே இப்படிப்பட்ட முதலமைச்சரை நான் பார்த்தது இல்லை. புரட்சித்
தலைவி என்றால், புரட்சித் தலைவிதான். தமிழ் மக்களை, தமிழ்நாட்டை
முன்னேற்றுவதற்காக உழைக்கும் புரட்சித் தலைவி அவர்களின் ஆட்சியைப் பாராட்டி
ஆசீர்வதிக்கின்றோம்'' என்று அம்மாவுக்கு திடீர்ப் புகழாராம் சூட்டினார்

முடியை எடுக்க வேண்டாம் என்று கூறி விட்டார் ஆதீனம்

மதுரை ஆதீனமாக பொறுப்பேற்பவர்கள் தலைமுடி வைத்திருக்கக் கூடாது என்கிறார்கள். இந்து மதத்தில் தலைபோகக் கூடிய விஷயங்கள் அதிகம் உள்ளன. இந்த முடிக்கான பிரச்சினை இப்போது தேவை தானா? இது குறித்து நான் ஆதீனத்திடம் கூறினேன். அதற்கு அவர் நீங்கள் தலைமுடியுடன் பிரபலம் ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு அந்த முடிதான் டிரேட்மார்க். அதனை எடுக்க வேண்டாம் என்றார்.


 காஞ்சி சங்கர மடாதிபதி ஜெயேந்திரரின் கருத்து 

கிருஷ்ணகிரியில் நிருபர்களை சந்தித்த அவர் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

மதுரை ஆதீனமாக நித்யானந்தா மகுடம் சூட்டி கொண்டதை ஏற்று கொள்ளமுடியாது. இதை எதிர்பதாக மூன்று நாட்களுக்கு முன்பே சங்கர மடத்தில் இருந்து தெரிவித்தோம்.
மரை ஆதீனம் என்பது ஞானசம்மந்தர் பரம்பரையில் வந்தது. ஆதீனமாக பட்டம் சூட்டி கொள்பவர்கள் மொட்டை அடித்து தலையில் ருத்ராட்ச மாலை அணிய வேண்டும் என்ற ஆன்மிக விதிமுறைகள் உள்ளன. ஆனால் நித்யானந்தா இந்த விதிமுறைகளை மீறி பட்டம் சூட்டி கொண்டுள்ளார். இதை ஆன்மிகவாதிகள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். ரஞ்சிதா என்ற பெண் எப்போதும் நித்தியானந்தாவுடன் உள்ளார். இதுவும் ஆன்மிகத்திற்கு எதிரானது. அந்தப் பொறுப்பிற்கு வருபவர்கள் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்கவேண்டும். ஆன்மிகவாதிகள் நித்தியானந்தாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதை நான் ஆதரிக்கிறேன்.
திருஞான சம்பந்தர் வழியில் வந்த பெருமைவாய்ந்த மடத்திற்கு நித்தியானந்தா, ரஞ்சிதாவுடன் வருவது பெருத்த அவமானம். ரூ.1 கோடி லஞ்சமாக கொடுத்தே நித்தியானந்தா முடி சூட்டிக்கொண்டார். எனவே ஆதின மடத்தில் இருந்து நித்தியானந்தாவை உடனே வெளியேற்ற வேண்டும் என தெரிவித்தார். (சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் ஜெயேந்திரர். தற்போது இவர் ஜாமீனில் வெளியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.)

கடுப்பாகிய நித்தி 
“யாரோ சொல்வதைக் கேட்டு ஜெயேந்திரர் கருத்து கூறியிருக்கிறார். ரஞ்சிதா குறித்து தெரிவித்த கருத்துக்களை அவர் 10 நாட்களுக்குள் வாபஸ் பெற வேண்டும். என்னைப் புரிந்து கொண்டவர்கள் என்னை ஆதரிக்கிறார்கள்; காசு கொடுத்து ஆதரவாளர்களைத் திரட்டும் அவசியம் எனக்கில்லை” என்றார்.
இளைய ஆதீனத்தினால் வக்காலத்து வாங்கப்பட்ட ரஞ்சிதா அம்மையார் குறித்து ஜெயேந்திரர் தெரிவித்த கருத்துக்களை 10 நாட்களுக்குள் வாபஸ் வாங்காவிட்டால், ஜெயேந்திரரின் கதி என்னாகும் என்பதை நித்தியானந்தா சுவாமிகள் தெரிவிக்கவில்லை.
மற்றைய ஆதீனங்கள் விஷயத்தில், “கடும் கோபத்திலுள்ள எனது சீடர்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்தில் நிலைமை கையை மீறிப் போனால் அவர்கள் ஆத்திரத்தில் என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது(உசுப்பேத்துறாராம் விட்டால் ரசிகர் மன்றம் அமைப்பாங்கள் போல )

முடியை எடுக்க வேண்டாம் என்று கூறி விட்டார் ஆதீனம்

மதுரை ஆதீனமாக பொறுப்பேற்பவர்கள் தலைமுடி வைத்திருக்கக் கூடாது என்கிறார்கள். இந்து மதத்தில் தலைபோகக் கூடிய விஷயங்கள் அதிகம் உள்ளன. இந்த முடிக்கான பிரச்சினை இப்போது தேவை தானா? இது குறித்து நான் ஆதீனத்திடம் கூறினேன். அதற்கு அவர் நீங்கள் தலைமுடியுடன் பிரபலம் ஆகிவிட்டீர்கள். உங்களுக்கு அந்த முடிதான் டிரேட்மார்க். அதனை எடுக்க வேண்டாம் என்றார்.
இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 
தருமபுரம் ஆதீனத்தின் மதுரை கிளை மேலாளராக உள்ள குருசாமி தேசிகர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில்,

தமிழகத்தில் மொத்தம் 18 ஆதீன மடங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் மதுரை ஆதீனமும் ஒன்று. நித்தியானந்தா இந்து மதத்தின் பெயரால் தன்னை ஒரு சாமியார் என்று கூறிக்கொண்டு பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் மதுரையின் 292-வது ஆதீனத்தை மிரட்டி, தன்னை 293-வது இளைய ஆதீனமாக அறிவிக்கும்படி கூறி உள்ளார். அவரும் அதன்படி நடந்து கொண்டுள்ளார்.

தற்போது மதுரை ஆதீனம், நித்தியானந்தாவின் கட்டுப்பாட்டில் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளார். நித்தியானந்தாவை அடுத்த ஆதீனமாக அறிவித்தது தற்போதைய ஆதீனம் சுயமாகவே எடுத்த முடிவு அல்ல. அந்த முடிவை எடுக்கும்படி அவரை நிர்ப்பந்தித்து உள்ளனர்.

இளைய ஆதீனத்தை நியமனம் செய்ய தற்போதைய ஆதீனத்துக்கு முழு அதிகாரம் உண்டு என்றாலும் அதற்கு குறிப்பிட்ட சில வழிமுறைகள் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இளைய ஆதீனமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதில் அந்த வழிமுறைகள் எதுவும் முறையாக பின்பற்றப்படவில்லை.

இதனால் நித்தியானந்தாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழகத்தின் பிற ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆலோசனை நடத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அந்த தீர்மானத்தை மதுரை ஆதீனம் செயல்படுத்த விடாமல் நித்தியானந்தா அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்துள்ளார்.

அதன்படி தற்போது மதுரை ஆதீனம் எங்கு உள்ளார் என்பதே மற்றவர்களுக்கு தெரியாமல் உள்ளது. மேலும் எந்த ஒரு நபரும் அவரை சந்திக்க நித்தியானந்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அனுமதிப்பதில்லை. அவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கவும் அவர்கள் தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே மதுரை ஆதீனத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஒரு சில ஆதீனங்களும் சேர்ந்து நித்தி மீதிருந்த பாலியல் வழக்கை பற்றி கூறி எதிர்ப்பைக் கிளப்பவே நித்தி 
“என்மீது குற்றச்சாட்டு வைக்கும் அனைத்து ஆதீனங்களின் அறைகளிலும் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தினால் தெரியும் சேதி” என்று எரிகிற நெருப்பில் எண்ணை வார்த்திருக்கிறார் நித்தியானந்தா. “மற்றைய ஆதீனங்களின் அறைகளுக்குள்ளும் ரகசியமாக எட்டிப் பார்த்தால், எத்தனை பேர் என்னைப்போல பாலியல் புகார்களில் சிக்குகிறார்கள் என்று தெரிந்துவிடும்” என்றும் சவால் விட்டிருக்கிறார்
நம்ம இளைய சுவாமிகள். “எனது உருவபொம்மையை 10 பேர் எரித்துள்ளனர். நான் ‘உம்…’ என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் உருவபொம்மைகளை எனது சீடர்கள் எரித்து விடுவார்கள். சட்டம் ஒழுங்கு கெடக்கூடாது. சண்டையிட்டு, இந்து மதத்திற்கு அழிவை உண்டாக்கக்கூடாது என்பதற்காக பொறுமையாக இருக்கிறேன்” என்றும் கூறியிருக்கிறார்.
அவரின் சீடர்கள் எரிப்பதிலும் வல்லவர்கள் என்பது புதிய தகவல்.

நித்தி சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் 

மதுரை ஆதீனத்தின் இந்தச் செயலுக்கு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மடங்களின் மடாதிபதிகளும், இந்து மதத்தின் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள்.

அவர்கள் எடுக்கப்போகும் சட்ட சடவடிக்கைகள் ஒருபுறமாக நெருக்க, மறுபுறமாக இந்திய சட்டத்துறைக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் சுவாமிகள்.  அவர் என்ன சொல்கிறார் என்றால், நித்தியானந்தா தமது இளவலாகி விட்டதால், இந்திய குற்றவியல் சட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவராகி விட்டார் என்கிறார்.சாதாரண மனிதர்களுக்குதான் சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நித்தியானந்தா இனி சாதாரண மனிதரல்ல. மதுரை இளைய ஆதீனமாகி விட்டதால், நித்தியானந்தா சட்டத்துக்கு பணிய வேண்டிய தேவை ஏதும் கிடையாது என்பது மூத்த ஆதீனத்தின் நிலைப்பாடு. “இளைய ஆதீனமாக உள்ள நித்தியானந்தா இனிமேல் கோர்ட், போலீஸ் நிலையங்களுக்கு வர மாட்டார். அவர்மீது உள்ள பாலியல் புகார் பற்றி யாரும் பேசக்கூடாது” 


இவளவு கலகங்களின் மத்தியிலும் நித்தி ஒரு தொலைக்காட்சி சனல் ஆரம்பிக்கிறாராம் ...அதன் பெயர் ஆனந்தம் (ஓஹோ )
ஆன்மிக தகவல்கள் அடங்கியதாக அந்த அலைவரிசை அமையவுள்ளது.24 மணி நேர டிவி சேனல் அதற்கான உறுதிப்பத்திரம் பெற்றுள்ள நிலையில் விரைவில் பரீட்சார்த்த ஒளிபரப்பு தொடங்க உள்ளது. 

'
விரைவில்ஆனந்தம் ஒளிபரப்பு தொடங்கும். அதற்கான வேலைகள் நடக்கின்றன. நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்மிக அன்பர்களுக்கு விருந்தாக இருக்கும்" என நித்தியானந்தா தெரிவித்துள்ளார். //வயது வந்தவர்களுக்கு மட்டும் தானே சாமி ....மற்ற மடாதி பதிகளும் நடிக்கிறார்களா சாமி//


தொடரும் முட்டாள்தனங்கள் .....



8:06 PM | 0 comments | Read More

மொஸாட்: உளவாளிகளின் சொர்க்கம்

                        IRAN vs UNITED STATES OF AMERICA & ISRAEL - 04


இந்தக் கட்டுரை IRAN vs UNITED STATES OF AMERICA & ISRAEL தொடரின் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட மொஸாட்(Mossad)இன் வரலாறு பற்றிய தனிக் கட்டுரையாகவும் அமைகின்றது. ஆகவே நீங்கள் இங்கே {Part-03} கிளிக் செய்து படித்துவிட்டும் தொடரலாம், அல்லது படிக்காமலும் தொடரலாம்.
 மொஸாட் ( Mossad ) என்ற பெயரைக் கேட்டாலே இஸ்ரேலைச் சுற்றியிருக்கும் அரேபிய நாட்டு மக்களுக்கு ஒருவித பயமும் வெறுப்பும் ஏற்படும். 2 ம் உலகப் போருக்குப் பின், ஐக்கிய நாடுகள் அவையின் முடிவின் படி{ அமெரிக்கவின் முடிவின் படி } இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. உலகின் பல நாடுகளில் சிதறிக் கிடந்த யூதர்களுக்கு அவர்களது பழைய தாய் நாட்டை மீட்டுக் கொடுக்கத்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது. அரேபியர்கள், எகிப்தியர்கள் ஆகியோர் வசமிருந்து பல நிலப்பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு இஸ்ரேல் உருவானது. உலகின் பல நாடுகளிலிருந்தும் யூதர்கள் பல்லாயிரக் கணக்கில் கிளம்பிவந்து இஸ்ரேலில் குடியேறினர். ஆனால் உருவாக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே இஸ்ரேலுக்கு அமைதி கிட்டவில்லை. அரேபியர்களின் வெறுப்பும், விரோதமும் கடுமையாக இருந்தது. ஆகவே தொடர்ந்து தனி நாடாக இருப்பதற்காகவும், தனது சுதந்திரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும் இஸ்ரேல் எப்போதும் ஒரு போருக்கான ஆயத்த நிலையிலேயே இருக்க வேண்டியிருந்தது. இன்று வரையும் அந் நிலை தொடருகின்றது.

  இஸ்ரேல் உருவாக்கப்படுவதற்கு முன்பே சிறு சிறு குழுக்கள் யூத அமைப்புகளுக்காக உளவு வேலையில் ஈடுபட்டு வந்தன. நாடு ஏற்படுத்தப்பட்ட பிறகு அத்தகைய சிறு குழுக்களால் ஒரு நவீன அறிவியல் பின்னணியில் இயங்கி வரும் பிற நாட்டு உளவு நிறுவனங்களுடன் போட்டி போட்டு இயங்க இயலவில்லை. ஆகவே உள்நாட்டிலும், அயலிலுள்ள அரபு நாடுகளிலும் இயங்கிவந்த உளவு நிறுவனங்களை முறியடிக்க ஒரு வலுவான அமைப்பு இஸ்ரேலுக்குத் தேவைப்பட்டது. அரபு நாடுகள் எந்நேரமும் இஸ்ரேலைக் கைப்பற்ற சதி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தன.


         1948 யூன் மாதத்தில் அன்றைய இஸ்ரேல் பிரதமர் பென்-குரியோன்{David Ben-Gurion }  ஒரு வலுவான உளவு நிறுவனத்தை அமைக்க உத்தரவிட்டார். அந்த நிறுவனம் மூன்று பகுதிகளைத் தன்னுள் அடக்கியிருந்தது. முதல் பகுதிக்கு Bureau of Military Intelligence என்று பெயர். இரண்டாவது பகுதி Political Department of Foreign Affairs என்றழைக்கப்பட்டது. இது வெளிநாட்டு உளவுச் செய்திகளை அறிந்து கொள்வதற்கான பகுதியாகும். மூன்றாவது பகுதி Department of Security என்பதாகும். ஆரம்ப கால கட்டத்தில் இந்த உளவு நிறுவனம் தடுமாறியது. அந்தக் காலகட்ட நவீன கருவிகளோ, வசதிகளோ தன்னிடம் இல்லாததால் திணறியது.

           1951 செப்டெம்பரில் இந்த உளவு நிறுவனம் மாற்றியமைக்கப்பட்டு 'மொஸாட்' என்ற புதுப்பெயர் இடப்பட்டது. பிற நாடுகளில் உளவு பார்ப்பதையும், உள்நாட்டில்; வெளிநாட்டு உளவாளிகள் நுழைந்து விடாமல் கண்காணிப்பதையும் வேறு சில சிறப்பு அலுவல்களையும் மொஸாட் ஏற்று செய்யத் தொடங்கியது. மொஸாட்டின் தலைவர் அந்நாட்டு பிரதமருக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். தனது நடவடிக்கை விபரங்களைப் பிரதமருக்கு மட்டுமே அவர் எடுத்துரைப்பார்.

         யூதர்களைப் பொறுத்தமட்டில் மொஸாட் என்கிற பெயர் அவர்களின் பழைய நினைவுகளைக் கிளறக்கூடியது. 1930 -1947 இற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கில் பிற நாடுகளிலிருந்து யூதர்களை இஸ்ரேலுக்குள் கொண்டுவரும் பணியை இதே பெயருள்ள மற்றொரு இயக்கம் மேற்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றியது. அதன் ஞாபகார்த்தமாகத்தான் 1951 இல் மொஸாட் என்ற பெயர் இந்த உளவு நிறுவனத்துக்கு வைக்கப்பட்டது.

      ஆரம்ப கட்டத்திலிருந்த மொஸாட்டுக்கு சாதகமாக 2 விஷயங்கள் இருந்தன. முதலாவது, அனேகமாக எல்லா நாடுகளிலும் இஸ்ரேலுக்குத் திரும்பாத கணிசமான யூதர்கள் வசித்து வந்தனர். அவர்களிடமிருந்து பலவிதமான உதவிகளை மொஸாட் பெற்றது. அத்துடன் அந் நாடுகளில் மொஸாட்டின் உளவாளிகள் மறைந்து தங்கியிருந்து உளவு வேலைகளில் ஈடுபடுவது எளிதாக இருந்தது. அடுத்தது, இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்தே அண்டை நாடுகளுடன் தொடர்ந்து போரிட வேண்டிய நிலையிலேயே இருந்தது. இதனால் மொஸாட்டின் நடவடிக்கைகள் ஒரு போர்க் கால அடிப்படையிலேயே அமைந்திருந்தது. இதனால் அதன் உளவாளிகள் சோர்ந்துவிட வழியே இல்லைஅத்துடன் அமைதிக்கால நியாயங்கள், தர்மங்கள், சட்டங்கள் ஆகியவை இல்லாததால் மொஸாட் அத்தகைய நியதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியதில்லை.

        இந்த உலகத்திலுள்ள உளவுத்துறைகளுள் கொலைகளைச் செய்வதற்கு சட்டரீதியாக அனுமதி வழங்கப்பட்டுள்ள ஒரேயொரு உளவுத்துறை மொஸாட் தான். இதற்கென்று ஒரு பிரிவையே மொஸாட் வைத்திருக்கின்றது. தனது தேசத்தின் பாது காப்புக்கு எதிரானவர் என்று யாரையேனும் மொஸாட் உளவாளி சந்தேகப் பட்டால் அவரை அலேக்காகப் போட்டுத்தள்ளி விடலாம். அப்புறம் ஆறுதலாக ஒரு அறிக்கை சமர்ப்பித்து விட்டால் போதும், Game Over. ஆரம்பத்தில் இந்தப் பிரிவு அரசியல் கொலைகளைச் செய்வதற்கே பயன்பட்டு வந்தது. தற்போது, ஈரானில் அணு விஞ்ஞானிகளைப் போட்டுத்தள்ளப் பயன்பட்டு வருகின்றது. இது பற்றி அடுத்து வரும் பாகங்களில் விரிவாகப் பார்க்க இருப்பதால்,தற்போது மீண்டும் மொஸாட்டின் கற்கால வரலாற்றுக்கே செல்வோம்....
       மொஸாட்டின் முதல் தலைவராக இருந்தவர் ரூவென் ஷிலோக் {Reuven Shiloah }. இவர் அரசின் பாதுகாப்புத்துறைத் தலைவர் பதவியையும் வகித்தார். ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்காவின் C.I.A ; மொஸாட் உளவாளிகளுக்குப் பயிற்சியளித்தது. விரைவிலேயே உலகத்தரம் வாய்ந்த உளவு நிறுவனமாக மொஸாட் வளர்ந்தது. அது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உளவு அமைப்புகளின் செயற்பாடுகளைப் பின்பற்றியது. அதன் உளவாளிகள் தற்கால நவீன உபகரணங்கள், தொழில்நுட்பங்கள் அனைத்தையும் கரைத்துக்(?) குடித்தவர்கள். வதந்திகளை உலக நாடுகளிடையே பரப்புவதிலும் வல்லவர்கள்.

       ஜெர்மனியின் மியூனிக் நகரில் 1972 இல் நிகழ்ந்த ஒலிம்பிக் போட்டியில் இஸ்ரேலிய வீரர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொலை செய்தார்கள் பலஸ்தீனப் போராளிகள். {பலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலிய சிறையிலிருக்கும் தமது சகாக்களை விடுவிக்கும்படி கோரிக்கை விடுத்தார்கள். இஸ்ரேல் அதை நிராகரித்துவிட்டது} இது மொஸாட்டின் தோல்வியாகவே கருதப்பட்டது. வீரர்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மொஸாட்டின் மீது காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதிலிருந்து பாடம் படித்த மொஸாட்; 1987 இல் இஸ்ரேல் டென்னிஸ் வீரர்கள் 'டேவிஸ் கப்' போட்டியில் விளையாட இந்தியா வந்தபோது கூடவே தனது உளவாளிகளையும் கலந்து அனுப்பியிருந்தது.
இவர்கள் தான் 1972 ஒலிம்பிக்கில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்கள் 

         உலக மக்களை வியக்க வைத்த பல வீர தீரச் சாகசச் செயல்களைக் கனகச்சிதமாக முடித்துக் காட்டுவதிலும் இவர்கள் வல்லவர்கள். உதாரணமாக 1973 இல் 'பெய்ரூட்' நகரில் தலைவர்களை அழித்தது, மற்றும் 1976 இல் உகண்டா நாட்டில் "என்டெப்" விமான நிலையத்தில் கடத்தப்பட்ட  விமானத்தையும், அதில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பல இஸ்ரேலியர்களையும் இரவோடிரவாகப் பத்திரமாக மீட்டு இஸ்ரேலுக்குக் கொண்டுவந்தமை போன்றவை ஹாலிவுட் படங்களையே மிஞ்சிய சாகசங்கள்.
இது தான் கடத்தப்பட்ட விமானம்
அர்ஜென்டினா நாட்டில் மறைந்து வாழ்ந்து வந்த நாஜி வெறியனான அடால்ப் ஜக்மான் என்பவனை இஸ்ரேலுக்கு வெற்றிகரமாகக் கடத்திவந்து அவன் மீது விசாரணை நடத்தி மரண தண்டனையும் வழங்கியமை 1969 இல் எகிப்தில் பணியாற்றி வந்த 5 நாஜி ஆதரவாளர்களான விஞ்ஞானிகளைக் கண்டுபிடித்துக் கொன்றமை என்று உலகம் முழுக்கவும் மொஸாட்டின் அதிரடிகள் அரங்கேறியுள்ளது.
     ஒரு சில தோல்விகளையும் மொஸாட் தாங்கிக் கொள்ள நேர்ந்தது. 1967 இல் கெய்ரோவிலும், அலெக்ஸான்டிரியாவிலும் இருந்த இங்கிலாந்து, அமெரிக்க நாட்டு அதிகாரிகளின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தி, அந்தப் பழியை எகிப்தியர்கள் மீது போடுவதற்குத் திட்டமிட்டது மொஸாட். இதன் மூலம் எகிப்து அதிபர் நாசர் மீது மேற்குலக நாடுகள் வெறுப்புக் கொள்ளும் என இஸ்ரேல் எதிர்பார்த்தது. ஆனால் திட்டம் தோல்வியடைந்து உளவாளிகள் மாட்டிக்கொண்டனர். இருவருக்குத் தூக்குத் தண்டனையும், 6 பேருக்கு நீண்ட கால சிறைத் தண்டனையும் வழங்கியது, எகிப்திய அரசு. பின்னாளில் எகிப்துக்கும் இஸ்ரேலிய ராணுவத்துக்கும் நடந்த ஆறு நாள் யுத்தத்துக்குப் பின், அந்த ஆறு உளவாளிகளையும் எகிப்தியப் போர்க் கைதிகளுக்குப் பதிலாக மாற்றிக் கொண்டது இஸ்ரேல்.
     மொஸாட்டின் மிகப்பெரிய தோல்வியாகக் கருதப்படுவது, 1975 இல் எகிப்தும் சிரியாவும் கூட்டாக இஸ்ரேல் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தியது தான் !! 'ஜாம் கிப்பர் யுத்தம்' என்று அழைக்கப்படும் இந்தத் தாக்குதலை மொஸாட் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.ஆனாலும் கூட இந்த யுத்தத்தையும் வெற்றி கொள்வதற்கு மொஸாட் பெரும் பங்காற்றியிருந்தது. இந்த எதிர் பாராத தாக்குதலால் மொஸாட்டின் செல்வாக்கு பெருமளவில் மங்கினாலும் பின்னர், 1976 உகண்டா விமான நிலையச் சாதனைக்குப் பிறகு,அதன் செல்வாக்கு மீண்டும் அதிகரித்தது.
ஆக மொத்தத்தில், இஸ்ரேலியர்களைப் பொறுத்தவரை மொஸாட் காவல் தெய்வம். மற்றவர்களைப் பொறுத்தவரை அழிக்கும் தெய்வம்.

இந்தப் பதிவோடு சம்பந்தமில்லாவிட்டாலும் இந்தத் தொடரோடு சம்பந்தப்பட்ட, சம்பந்தப்படப் போகின்ற 2 விடயங்கள் கடந்த மாதம் நிகழ்ந்துள்ளன.இப்போது தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள், பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.
1 >> 15 க்கும் மேற்பட்ட மொஸாட் உளவாளிகளை ஈரான் கடந்த 18 -04 -2012 அன்று கைது செய்துள்ளது.
2 >> Part -02 இல் நாம் குறிப்பிட்ட ( ஈரான் கைப்பற்றிய அமெரிக்க உளவு விமானம்) உளவு விமானத்தின் தொழில் நுட்பங்கள் யாவற்றையும் கண்டுபிடித்து விட்டதாகவும், அதே வகை உளவு விமானங்களைத் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 26 -04 -2012 இல் ஈரான் அறிவித்துள்ளது.

{சரி, சென்ற பதிவில் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லையே என்று யோசிக்கிறீர்களா? பதில் அடுத்த பதிவில் தான்!!!}

{தொடரில் ஏதேனும் பிழை இருந்தால் தயவுசெய்து குறிப்பிடவும்}
4:22 AM | 0 comments | Read More