Advertise

Featured Post 5

Tom and Jerry

Written By mayuran on Friday, May 4, 2012 | 7:47 PM

இது ஒரு அனிமேஷன் குறும் தொடர் எலி ,பூனை இரண்டும் ஒன்றை ஒன்று படுத்தும் பாட்டில் அவற்றை சுற்றி உள்ள இடமே களோபரப்படும் ..இது சிறுவர்களுக்கான அனிமேஷன் தொடராக இருந்தாலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வேறுபாடின்றி இவற்றை ரசிப்பார்கள் ....இன்றும் பிரபலமாக காணப்படும் டோம் அண்ட் ஜெர்ரி எப்பொழுது உருவாக்கப்பட்டது தெரியுமா 1940 ளில் தான் உருவாக்கப்பட்டது 70 ஆண்டுகளுக்கு மேலேஆகி விட்டாலும் வயிற்றை புண்ணாக்கும் தமது வேலையை தொடரந்து செய்து வருகின்றன டோம் அண்ட் ஜெர்ரி ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது சிறந்த குறும்படங்களுக்கான கார்ட்டூன்  அக்கடமி விருதுகள் 7 பெற்றுள்ளது பல வருட வர வேற்புக்காரணமாக டோம் அண்ட் ஜெர்ரி பற்றிய ஆய்வு ஒன்றை நடத்தினார்கள் ..ஆய்வின் முடிவு ஆச்சரியமாக இருந்தது ...குழந்தைகள் சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட இத்தொடரின் 50% இற்கும் அதிகமான ரசிகர்கள் வயது வந்தோர் என்பதுதான் அந்த முடிவு 



டோம் அண்ட் ஜெர்ரி  யை உருவாக்கியவர்கள் William Hanna ,Joseph Barbera ...
இவர்கள் 1940 முதல் 1957 வரை கலிபோர்னியாவில் MGM ஸ்டுடியோவில் 114 டோம் அண்ட் ஜெர்ரி கார்டூன்களை இயக்கி வெளியிட்டுள்ளனர் ....இதன் உருமை MGM நிறுவனத்திடமிருந்து டைம் வார்னர் நிறுவனத்திற்கு கை மாறி  உள்ளது
டோம் அண்ட் ஜெர்ரி ஐப்பற்றி குறிப்பிட்டு கூற வேண்டுமானால் ..இது வாங்கிய அவார்ட்களுடன் 4 தலை முறை இயக்குனர்கள் இயக்கியது என்ற பெருமையையும் தன வசம் கொண்டது
வில்லியம் ஹன்னா ஜோசெப்பெரேரா,ஜென்னி டச் 1960-1962 வரை 26 தொடர்கள் ,சக் ஜோனிஸ் 1963-1964 வரை 34 தொடர்கள்
Hanna-Barbera Years 1940-1958
Gene Deitch Years 1961-1962
Chuck Jones Years 1963-1967
Later Hanna-Barbera 1975
Filmation Associates 1980
Hanna-Barbera Studios 1990-1993
Warner Brothers 1993-PRESENT
Kids' WB 2006-2008

வில்லியம் ஹன்னா வும் ஜோசெப்பெரேரா வும் மீண்டும் 70 களில்  இணைந்து டோம் அண்ட் ஜெர்ரி திரைப்படத்தை வெளியிட்டனர் தமது 90,95 வயதுகளிலும் டோம் அண்ட் ஜெர்ரிக்காக அசராது உழைத்தவர்கள் இவர்கள் தான் ......வில்லியம் ஹன்னா 2001 லும் பார்பெரா 2005 இலும் மரணமடைந்தனர் ......
இதுவரை மொத்தமாக 162 திரையரங்கு ரீதியான தொடர்கள் வெளி வந்துள்ளன 
டோம் அண்ட் ஜெர்ரியின் கதைக்களம் எப்படி என்று உங்களுக்கே தெரியும் 
ஒவ்வொரு காட்சியிலும் ஜெர்ரியை டோம் பிடிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கும் இதற்கு டோம்மிடமிருந்து காரணம் இருக்கின்றது தனது எஜமான் டோம்மின் பொறுப்பில் விட்டு சென்ற பாதுகாக்குமாறு பணித்து சென்ற விடயங்கள் ஜெர்ரி ஆல் குழப்பப்படுதல் ...
இதை விட டோம்மிற்கு கடுப்பேற்றும் முக்கிய விடயம் டோம்மின்  விருப்பமான உணவுகளான மீன் பறவைகள் வாத்து போன்றவற்றை ஜெர்ரி தனது நண்பர்களாக்கிக் கொண்டு டோம்மிற்கு எதிராக கொடிபிடித்தல்


இவ்வாறான காரணங்களால் டோம் பல தடவை முயற்சி செய்தும் ஜெர்ரி தனது புத்தி சாலித்தனமான காரியங்களால் தப்பி விடும் ஏதோ ஒரு சில சந்தர்ப்பங்களில் அகப்பட்டால் தான் உண்டு ...
இவர்களது இந்த அக்கப்போரில் இவர்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களும் நொந்ததுண்டு..முக்கியமாக குறிப்பிட வேண்டியது ஒரு நாய அதன் பெயர் ஸ்பைக் ...


இவை எப்பொழுதுமே சண்டை பிடித்துக்கொண்டும் இருப்பதில்லை ஒரு சில வித்தியாசமான காட்சிகளும் நடைபெற்றுள்ளன ....இவர்களுக்கென  ஒரு பொதுவான எதிரி உருவாக்கி விட்டால் இருவரும் சமாதான உடன் படிக்கை செய்து கொள்வார்கள் ..அந்த எதிரியை துரத்தியடித்த பின் மீண்டும் தமது வேலையை தொடங்கிவிடுவார்கள்
டோம் அண்ட் ஜெர்ரி யில் வழக்கமாக தோன்றும் கதாப்பாத்திரங்கள் 

ஸ்பைக்,டைக் -இது ஒரு புல் டாக் 
புட்ச்-இது ஒரு தெருப் பூனை
மாமிடு சீஸ் -வீட்டு பணிப்பெண் (இவரது முகம் பெரும்பாலும் காட்டப்படுவதே இல்லை )

டோம்அண்ட் ஜெர்ரி அரசியல் ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்தி உள்ளன (என்னது அரசியலா ?)
டோம் அண்ட் ஜெர்ரி யில் எலி பூனையை விட பலசாலி இல்லை எனினும் எலி தனது புத்திசாலித்தனத்தால் வென்றுவிடும் இதனால் டோம் அண்ட் ஜெர்ரி எனக்கு மிகவும் பிடிக்கும் இதை கூறியவர் யார் தெரியுமா ?பாலஸ்தீன அதிபர் யாசீர் அரபாத் ..  
he Tom and Jerry series won more Academy Awards than any other animated series, most directed by the legendary team of Bill Hanna and Joe Barbera.
Oscar
Oscar Winners
YearTitle
1943"The Yankee Doodle Mouse"More info
1944"Mouse Trouble"More info
1945"Quiet Please"More info
1946"The Cat Concerto"More info
1949"The Little Orphan"More info
1952"The Two Mouseketeers"More info
1953"Johann Mouse"More info

Oscar Nominations
YearTitle
1940"Puss Gets the Boot"More info
1941"The Night Before Christmas"More info
1947"Dr. Jekyll and Mr. Mouse"More info
1949"Hatch Up Your Troubles"More info
1951"Jerry's Cousin"More info
1954"Touché, Pussy Cat!"More info

கதாப்பத்திரங்கள்

Butch




Character Name 
Nibbles/Tuffy
First Appearance
"The Milky Waif" 1946
Character Name 
The Canary
First Appearance
"Kitty Foiled", 1948


Character Name 
Spike
First Appearance
"Dog Trouble" 1942






















for more info
tomandjerryonline

டாம் அண்ட் ஜெர்ரி

0 comments:

Post a Comment