Advertise

Featured Post 5

சோழர்களும் அவர்களின் வரலாறும்-04

Written By mayuran on Tuesday, April 3, 2012 | 8:53 PM

சோழநாடும் சோழவம்சமும்  
[இதன் முதற் பகுதிக்கு சோழர்களும் அவர்களின் வரலாறும்-03]
                   
பழந்தமிழ் நாட்டை  ஆண்ட  மூன்று   மாபெரும் அரசர்களில்  அவரவர்கள் ஆண்ட நாடு அவர்களின் பெயரைக்கொண்டு மண்டலம் என்று  சிறப்புற அழைக்கப்பட்டது. அந்த வகையில் சோழ மண்டலம் கிழக்கே உள்ள நாடு என்று பொருள் படும் வகையில் குணபுலம் என்றும் அழைக்கப்பட்டது   என்பது கல்வெட்டு மற்றும் சங்க இலக்கியங்களில் இருந்து அறிய வருகின்றது. சோழ நாடு காவிரியாற்றையும் அதன் கிளையாறுகளான  கொள்ளிடம்,அரசிலாறு, முடிகொண்டான் ஆறு,வடவாறு,வெண்ணாறு,வெட்டாறு போன்ற ஆறுகளையும் தன்னகத்தே கொண்டு அமைந்ததால் நீர் வளத்திலும், விவசாயத்திலும் சோழநாடே மற்ற நாடுகளை காட்டிலும் முன்னிலையில் நின்றது எனலாம். ".........சோழவளநாடு சோறுடைத்து..........",மற்றும் "தண்ணீரும் காவிரியே தார் வேந்தன் சோழனே மண்ணாவதும் சோழ மண்டலமே " போன்ற பழந்தமிழ் பாடல்களில் இருந்து சோழநாட்டின் செல்வச்செழிப்பு அறியத்தகும். சோழ நாடு வளமான நாடு மற்றும் நீர் வளம் கூடிய நாடு என்பதால் தான் வளநாடு,புனல் நாடு என்றும் சோழர்கள் வளவர்கள் ,நீர்நாடன் என்றும் அழைக்கப்பட்டதுடன் சென்னி,கிள்ளி எனவும் அழைக்கப்பட்டனர்.
                                           சோழமன்னனும்   புலிக்கொடியும்

சூரியனை குல முதலாக கொண்ட சோழர்கள் சூரிய வம்சத்தினராய் சங்க கால இலக்கியங்கள் முதல் கல்வெட்டுக்கள் வரை உள்ள தகவல்கள் மூலமும்     "செங்கதிர்ச்செல்வன்  திருக்குலம்............"  எனும் வரிகளின் மூலமும்    இனம் காணப்படுகின்றனர். மேலும் சில சோழர் வரலாறு கூறும் புத்தகங்கள் வைவச்சுதமனு வம்சத்தில் தோன்றிய சூரிய வம்சதினனான இகஷ்வாகுவும் அவன் வழித்தோன்றலான  முசுகுந்தனும் இவன் மகனான வல்லபனும் அவன் வழியில் சிபியும் இவன் வம்சாவழியும் சூரிய வம்சத்தினரே என்பதால் சோழர்களும் சூரிய மரபினராகின்றனர் என்கின்றன. பிற சில புத்தகங்கள் சோழர்கள் திருமால் ,பிரம்மா  வழியில் சூரியனையும் குலமுதலாய் கொண்டனர் என்கின்றது.
                              மேலும் முற்காலச்சோழர் பற்றிநாம் பார்ப்பதானால் அவர்களை சங்க காலத்திற்கு முந்திய சோழர் என்றும் சங்ககாலச் சோழர் என்றும் பகுத்தல் தகும்.
சங்க காலத்திற்கு முந்திய சோழர்கள்    
இவர்களை பற்றி நிச்சயமாக வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறிய முடியாது. ஆனால் சங்க இலக்கியங்களும் பனுவல்களும் ,கல்வெட்டுக்களும் பல சோழ வேந்தர்களின் பெயர்களை செப்பனிடுகின்றன. அவர்கள் எல்லோரின்   பெயரையும் இங்கு தர முடியாவிட்டாலும் சிலரின் பெயரையும் அவர் கொண்ட வரலாற்றையும் தர முயல்கின்றேன்.  மனுச்சோழனை முனிட்டு தந்தை வழி தனயன் மரபாய் தொடரும் சோழர் குலத்தில் இட்சுவாகு,விகுக்சி,ககுத்தன்,காக்சீவதன்,சூரியமன்,அநலப்பிரதாபன், வேனன்,பிரீது,துந்துமாறன்,யுவனாசுவன்,மாந்தாதா,முசுகுந்தன், வல்லபன், பிரிதுலாக்கன்,பார்த்திபசூடாமணி, தீர்க்கபாகு,சந்திரசித்தன், சங்கிருதி, பஞ்சபன்,சகரன்,சத்தியவிரதன்,உசீநரன்,சிபி, என்று அறியலாம். [பிற சிலர் சிபியைத்தொடந்து மருத்தன் தொடக்கி இராம லட்சுமணர் வரை இனம் காண்பர், கவனிக்க  இராமனும் சூரிய குலத்தவனே] இச்சிபியை அடுத்து வந்த மன்னர்களாக சோழன்,இராஜகேசரி,பரகேசரி,இராஜேந்திரஜித்து போன்றோரும் சொல்லப்படுகின்றனர்.


மனு - நீதிதவறாத மன்னனாக இலக்கியங்களிலும் பனுவல்களிலும்
  காட்டப்படுகின்றான்.
சிபி-புறாவிட்காக தன்தசையை அறுத்துகொடுத்தவன் என்றும்                  
 நீதிவளுவாதவன் என்றும் தெரியப்படுகின்றான். இவன் மக்களும்
 சந்தாதியினரும் செம்பியன்கள் எனப்பட்டனர்.
இராஜேந்திரன்- "முதுமக்கட்சாடி" வழக்கத்தினை ஊக்குவித்தவன் எனலாம்.
கவேரன்-காவிரியின் பாய்ச்சலை   சோழ நாட்டிற்க்கு  உருவாக்கி
   கொடுத்தவன். 
 புட்பகேது- இவன் வானவூர்தி கொண்டவன் எனபடுகின்றான்.
சமுத்திரஜித்-பாக்குநீரினைப்பை உருவாக்கியதன் சான்று வணிகத்திற்கும்              
  கப்பல்   போக்கிற்கும்  உந்துதல் அளித்தவன்.  
 தொடித்தோட் செம்பியன்-பறக்கும் அசுரகோட்டைகளை அழித்தவன்.
வசு- இவனும் வானவூர்தி தொடர்புள்ளவன் எனபடுகின்றான்.
பெருநட்கிள்ளி-பொறியியல் மருத்துவ கலைகளில் தேர்ந்தவன்.
இளஞ்சேட்சென்னி-அதிவேகமான தேர்களை செலுத்தும் திறமை   உடையவன்.  
             இங்கு சோழர் பற்றிய நூல்களும் குறிப்புக்களும் வானூர்தி பற்றி குறிபிடுகின்றன ஆனால் இதுபற்றி என்னால் விளக்கமாக அறிய இயலவில்லை. அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும் இல்லாவிடில் நான் தேடி அறிந்தால் வரும் பதிப்புகளில் கூறுகின்றேன். அடுத்த பதிவு சங்ககால்த்திட்கு முந்திய  கரிகாலனை பற்றியதாய் இருக்கும். கரிகாலன் இருவாறு அறியபடுகின்றான் சங்ககாலத்திட்கு முந்தியவன் என்றும் சங்க காலத்தவன் என்றும்  இரு கரிகாலர்கள் இனம்காணப்படுகின்றனர்.. விரிவாக பார்க்கலாம் வரும் பதிப்புக்களில்.
                                தொடரும்............

0 comments:

Post a Comment