இணைந்துள்ள இரட்டயர்களைப்பற்றி நம் ஓரளவுக்கு அறிந்திருக்கிறோம் இருவரது உடல்களும் இவர்களின் உடலின் எந்தப்பகத்தின்னூடகவோ இணைந்திருக்கும் இவர்களின் உடல்கள் கருப்பிலே இணைந்து விடுகின்றது இவ்வாறு நடைபெறுவது மிகவும் அரிய நிகழ்வாகும் இது நடைபெறுவதற்கான நிகழ்தகவு 1 :100 ,000 இல் இருந்து 1 : 200 ,000 வரையாகும் அதாவது 200 ,000 பிறப்புக்களில் ஒரு பிறப்பு இப்படி அமையும் ..இது போன்ற இணைந்த இரட்டையர்களின் பிறப்புக்கள் தென் மேற்கு ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் கூடுதலாக காணப்படுகின்றது இப்படிப்பிறப்போரில் 40 -60 % இனர் கருப்பையிலேயே இறந்துவிடுகின்றனர் இதனை மீறிப் பிறப்பவர்கள் இயற்கைக்கு மாறான உடல் அமைப்புடன் பிறக்கின்றார்கள் 5-25 % ஆனவர்கள் மட்டுமே இவரில் இருந்து தப்புகிறார்கள் இவ்வாறு பிறக்கும் குழந்தைகளில் ஆண் பெண் விகிதம் 1 :3 ஆகும் பெண்களே அதிக அளவில் இணைந்துள்ள இரட்டையர்களாக பிறக்கின்றார்கள் இவ்வாறு தோன்றும் இரட்டையர்கள் ஒரே முட்டையில் இருந்து தோன்றுவதால் இருவரும் ஒரே பாலினத்தவர்களாக காணப்படுகின்றார்கள்
உலகில் மிகவும் பிரபலமாக இருந்த இரட்டையர்கள் "chang and engbunker"
இணைந்துள்ள இரட்டையர்களின் வகைகள்
Thora copayus -

உலகில் மிகவும் பிரபலமாக இருந்த இரட்டையர்கள் "chang and engbunker"
இணைந்துள்ள இரட்டையர்களின் வகைகள்
Thora copayus -
இவர்கள் மேல் கீழ் நெஞ்சுகளின் மூலம் இணைக்கப்பட்டு இருப்பார்கள் இவர்கள் இதயத்தைப் பங்கிடுகிறார்கள் (இருவருக்கும் ஒரு இதயம் )சில சமயங்களில் ஈரல் சமிபாட்டுத்தொகுதிகளும் பங்கிடப்படுகின்றன இவர்களில் 32 % காணப்படுகின்றார்கள்
Omphalopagus-
இவர்கள் நெஞ்சின் மூலம் இணைக்கப்படுகின்ரர்கள் இதயம் பங்கிடப்படாது ஈரல் சமிபாட்டுத் தொகுதிகள் பங்கிடப்படும் இவர்களில் 33 % ஆனவர்கள் காணப்படுகின்றார்கள்
Xophopagus -
இவர்கள் வலிமையான தசைகளால் மட்டும் இணைக்கப்பட்டிருப்பர்கள் இவர்கள் பொதுவாக தமக்குள் எந்த பாகங்களையும் பகிர்ந்து கொள்வதில்லை இவர்களில் 3 % ஆனவர்கள் காணப்படுகின்றார்கள்
Ischio pagus -
இவர்கள் இடுப்பு எலும்புகளால் இணைக்கப்பட்டவர்கள் .இருவரது முதுகு எலும்புகளும் (spine ) இணைந்து காணப்படும் .இருவரது முதுகு எலும்புகளும் ஒன்றுக்கொன்று 180 டிகிரியில் இருக்கும் .இவ்வாறு பிறக்கும் இரட்டையர்களில் 70 % ஆனவர்கள் நன்கு கால்களுடன் பிறக்கின்றார்கள் இவர்களில் 14 % காணப்படுகின்றார்கள்
Ischio-omphalopagus
இவர்களின் முதுகு எலும்பு "Y " வடிவில் காணப்படும் .பொதுவாக மூன்று கால்கள் காணப்படும்
Dicephalus-
கழுத்துக்கு மேலான பகுதியை அல்லது நெஞ்சுக்கு மேலான பகுதியை பங்கிடுகிறார்கள் இவர்களுக்கு 2 கால்களே காணப்படும் அனால் இரண்டு தொடக்கம் நன்கு கைகள் காணப்படும் இவர்களால் நீண்ட காலம் வாழ முடியும்
Crani opagus-
இவர்கள் தலை ஓட்டின் மூலம் இணைக்கப் படுகின்றார்கள் .இவர்களுக்கு தனித் தனி உடல்கள் கழுத்துக்கள் உண்டு ..இவர்கள் தமக்குள் மூளையை பங்கிட்டால் இவர்களைப்பிரிப்பது மிகவும் கடினம்
Cephalo pagus-
இவர்களது தலையும் கழுத்தும் இணைந்திருக்கும் அனால் இருவருக்கும் தனித் தனி உடல்கள் காணப்படும் ..இவர்கள் இறந்து பிறப்பதில்லை ..பிறந்து சிலமணி நேரங்களில் இறந்துவிடுவார்கள்
Cephalothoracopagus-
இவர்களுக்கு தலை கழுத்து நெஞ்சு மூளை என்பன இணைந்து காணப்படும் ..இதயத்தை பங்கிட்டு இருப்பார்கள்
Pygopagus-
இரட்டையர்கள் இருவரும் பின்புறம் பின்புறமாக இணைக்கப்பட்டிருப்பர்கள் ..
இவர்களது முதுகு எலும்பின் கீழ்பகுதி இணைக்கப்பட்டிருக்கும் ..இப்படியான இரட்டையர்கள் அனைவரும் பெண்களாகவே இருப்பார்கள் .ஆண் இரட்டையர்கள் கருவிலேயே இறந்து விடுவார்கள்
Rachipagus-
இவர்களும் பின்புறம் பின்புறமாக இணைக்கப் பட்டிருப்பார்கள் ..இடுப்பு நரம்புகள் பல இணைந்து இருக்கும் ..இதுவரையும் இப்படியான ஒரே ஒரு இரட்டையர் மட்டுமே இருப்பதாக பதிவுகள் உள்ளது (1960 )
இப்படி இணைந்துள்ள இரட்டையர்களை சத்திர சிகிச்சை மூலம் தனித்தனியாகப் பிரிப்பது கடினமாகும் இதற்கு கரணம் இவர்கள் தமது பகுதிகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதாலகும் பெரும்பாலான சத்திர சிகிச்சைகளில் இரட்டையர்களில் ஒருவர் இறந்துவிடுவர் அல்லது இருவரும் இறந்துவிடுவார்கள்
2001 இல் "ganga & jamuna shreshta" என்பவர்களுக்கு தனித்தனி ஆக்கும் சத்திர சிகிச்சை 97 மணித்தியாலங்கள் நடை பெற்றது இவர்கள் தனித்தனி ஆக்கப்பட்டாலும் இதில் "ganga " இறந்துவிட்டார் ..
தலை ஒட்டிப்பிறந்தவர்களை உலகில் முதல் முதலாக வெற்றிகரமாக வேறாக்கியவர் Dr.bencarson இது 1987 இல் நடைபெற்றது இதற்கு 70 பேர் கொண்ட சத்திர சிகிச்சைக்குழு 22 மணித்தியாலங்கள் நடை பெற்றது
2003 இல் "ladan & laleh bijani" என்ற தலை ஒட்டிப்பிறந்த ஈரானிய இரட்டையர்கள் சத்திர சிகிச்சையின் பொது இறந்தார்கள் ...
உலகில் உள்ள ஒரு சில இணைந்துள்ள இரட்டையர்கள் ....
வரலாற்றில் பல இணைந்திருக்கும் இரட்டையர்கள் இருந்திருக்கிறார்கள் இதில் மிகவும் பழமையான ஆதரமாக இருப்பது கி.மு 300 ஆம் நுற்றாண்டை சேர்ந்த மரச்சிலைகள் "moche " நாகரீகத்தை சேர்ந்தது "peru " மியூசியத்தில் உள்ளது
சில முந்தய கல இணைந்துள்ள இரட்டையர்கள்

0 comments:
Post a Comment