Advertise

Featured Post 5

IRAN vs UNITED STATES OF AMERICA & ISRAEL

Written By mayuran on Sunday, March 11, 2012 | 3:30 AM


  அமெரிக்கா , இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளினதும் தற்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கடந்தகால அரசியல் நடவடிக்கைகள் என்பனவற்றை அலசுவதே இத் தொடரின் நோக்கமாகும் . இந் நாடுகளின் அரசியலைத் தீர்மானிப்பதே அவற்றின் உளவுத்துறைகள்  தான் என்பதால் குறித்த நாடுகளின் உளவுத்துறைகள் சம்பந்தமான விவகாரங்களையும்  இத் தொடர் உள்வாங்கிக் கொள்கிறது .

   நீண்ட கால அடிப்படையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன ஒரே பொது நோக்கிலேயே { அதுதான்  மத்திய  கிழக்கில குட்டையை குழப்புவது பாஸ்.... }  செயற்படுகின்ற போதிலும் தற்கால சூழலில் பொருளாதார நெருக்கடி , மற்றும் சீனாவின்  அதி வேக  பொருளாதார வளர்ச்சி என்பவற்றின்  பின்னணியில்  அமெரிக்க - இஸ்ரேலிய  நலன்கள் வேறுபட்டுள்ளன . [ இஸ்ரேலுக்கு  உடனடியாக  ஈரான்  மீது  போர்  தொடங்க வேண்டும் ,  அமெரிக்காவிற்கோ  ஈரான்  மீதான  போர் , கச்சா எண்ணெய் விலையை  பெருமளவு  உயர  வைத்து  மீண்டும்  தன்  பொருளாதாரம்  படுத்த படுக்கை  ஆகி விடுமோ  என்கிற  பயம் ]   அதை  ஈரானும்  வகையாகப் பயன்படுத்திக்  கொண்டிருக்கிறது அதுவே  தற்போதைய  மத்திய கிழக்கு யுத்தப்  பதற்றத்துக்கும்  காரணமாக  அமைந்துள்ளது

   உந்தப்  பதற்றத்தைப்  பற்றி  எல்லாம்  பிறகு பார்க்கலாம் , முதலில்
ஈரானைப் பற்றி  பார்த்து  விடலாம் .

  1935  வரை  பெர்சியா  என்றே  ஈரான்  அழைக்கப்பட்டு  வந்தது .  { நம்ம  prince of persia  படத்தில  வாற  persia  தானுங்க ....}





 1953  இல்  ஈரானிய  மன்னரான  முகமது  மொசாதே  தனது  நாட்டின்
எண்ணைத்  தொழிலை தேசிய மயமாக்கினார் . அப்போதே அமெரிக்காவுக்கு மூக்கு வியர்த்து விட்டது அதன்  பின்  CIA  இனால்  இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையினால் மன்னர் மொசாதே முன்னாள் மன்னரானார் . இதன் பின்  அமெரிக்கா - ஈரானுக்கிடையே மிக நெருக்கமான உறவு இருந்து வந்தது . எல்லாம் கொஞ்ச காலம் தான் . அதன் பின் 1979 இல் முன்னெடுக்கப்பட்ட ஈரானியப் புரட்சி மூலம் முடியாட்சி முறை தூக்கி எறியப்பட்டு இஸ்லாமியக் குடியரசு ஆனது அதன்பின் ஈரானிய - அமெரிக்க உறவுகள் சீர்குலைந்தன . 1980 - 1988 வரை ஈராக்குடன் ஒரு முடிவுறாத இரத்தம் தோய்ந்த போரை நிகழ்த்தியது ஈரான் .  [  இதன் போது அமெரிக்கா ;  ஈராக் இற்கு ஆதரவளித்து வந்தது அப்போதைய ஈராக் ஜனாதிபதி யார் தெரியுமா ? சதாம் உசேன் !! { அது சதாமும் அமெரிக்காவும் தேன்நிலவு கொண்டாடிய காலப்பகுதி . அவர்களின் விவாகரத்துக்கான காரணம் பற்றி பிறிதொரு தொடரில் ஆராயலாம் ....} ] 
                                ஈரான் - ஈராக் யுத்தத்தின் போது

இறுதியில்  அந்தப் போர் persian வளைகுடா வரை விரிவடைந்து 1987 மற்றும் 1988இல் அமெரிக்க கடற்படைக்கும் ஈரானிய இராணுவத்துக்கும் இடையேயான மோதல்களுக்கு வழிவகுத்தது .  

இன்று உலகில் 18 ஆவது பெரிய நாடான , 2 ஆவது பெரிய எண்ணை 
வளமுள்ள நாடான , ஏழரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஈரான் என்ன செய்து கொண்டிருக்கிறது ? வேறென்ன அணு ஆயுதம் தயாரிப்பதில் busy ஆக இருக்கிறது !     
 ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் யாரை முதலில் தாக்கும் ? வேறு
யாரை நம்ம இஸ்ரேலைத் தான் ... !  
அதனால் தான் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முன்பே ஈரானிய அணு
உலைகளைத் தாக்கி அழித்து விட வேண்டும் என்று இஸ்ரேல் துடித்துக்
கொண்டிருக்கிறது .

    {   இஸ்ரேல் துடித்துக் கொண்டிருப்பது இருக்கட்டும் ; முதலில் இஸ்ரேலால் ஈரானிய அணு உலைகளைத் தாக்க முடியுமா என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம் ....   }

IRAN vs UNITED STATES OF AMERICA & ISRAEL - 02 ஐ  படிக்க இங்கே கிளிக் செய்யவும் 

 { தொடரில் ஏதாவது பிழைகள் இருந்தால் தயவுசெய்து குறிப்பிடவும் }

0 comments:

Post a Comment