Advertise

Featured Post 5

சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-01

Written By mayuran on Saturday, March 10, 2012 | 10:35 PM

 சேகுவேரா


உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர்கள் என்று  கூறப்படுபவர்களில் சேகுவேராவும் ஒருவர். சே அல்லது எல் சே என்று அறியப்பட்ட இவரை    மருத்துவன், சோசலிய புரட்சியாளன் , அரசிசல்வாதி, மார்கிசவாதி, தாழ்த்தப்பட்டவர்களின் தலைவன்   என்று  எத்தனையோ பரிமாணங்களில் சொல்லிக்கொண்டே  போகலாம். சேகுவேராவின் வாழ்க்கையை ஒருமுறை திரும்பி பார்ப்பதே இத்தொடர் கட்டுரையை வரைவதன்   நோக்கம்.
பிறப்பும் வளர்வும்
அர்ஜென்டினாவிலுள்ள ரோசாரியோவில் 12 தலைமுறையாக வாழும் பின்னணியை  கொண்ட  ஸ்பானிய, ஐரிய மரபில்வந்த எர்னஸ்டோ குவேரா லிஞ்ச், செலியா டி லா செர்னா   ஒய் லோசா  என்பவர்களுக்கு மூத்த மகனாக 1928 ஆனி மாதம் 14 ஆம் திகதி பிறந்தார்  எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா.  
                                        எர்னஸ்டோ குவேரா டி லா செர்னா


எல் சேவின் தந்தையின் கொள்ளு தாத்தா அர்ஜென்டினாவில் ஆளுநராக 18 ஆம் நூற்றாண்டு இருந்தபடியால் சே அரசமரபில் வந்தவர் என்றும் கூறலாம். எல் சேவின் தாய் ,தந்தையர்கள் 14 வருடங்கள் கம்யுனிஸ் கட்சியில் அதிகாரபூர்வமான உறுபினர்களாக இருந்தவர்கள். இருவரும் சோசலிச ஈடுபாடுடையவர்கள் என்பதால் அதுவும் சேயின்  சோசலிச ஈடுபாட்டில் மிகுந்த செல்வாக்கு செலுத்தியதாக  கருதப்படுகிறது. சேவின் தாயே  1955 இல் பிடல்காஸ்ற்றோவை  சே சந்திப்பதில் உணர்சிகரமான மற்றும் அறிவுசார்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். சே பிறந்து சிலகாலங்களின் பின்னர் சமூக உணர்வும்,ஜனநாயக பண்புமுடைய 'இரிகோயன்' ஆட்சியை இராணுவப்புரட்சி மூலம் இராணுவம் கவிழ்த்து தாம் ஆட்சிக்கு வந்தபடியால் சேவின் குடும்பம் ஸான் இருந்தோ எனும் இடத்திற்க்கு இடம் பெயர்ந்தது. சேவின்  தந்தை பிளேட் நதிக்கு அருகிலுள்ள ஒர்கப்பல் கம்பனியில் வேலைக்கு சேர்ந்ததால் சே வை அடிகடி அங்கு அழைத்து செல்லும் பழக்கம் இருந்தது சேவின்  ஆஸ்துமா நோய்க்கு இதுவும் ஒரு காரணமாக கருதபடுவதுடன் சேவின் தாயாரும்  ஒரு  ஆஸ்துமா நோயாளி என்பதால் மரபுவழியாக  பரவியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.1930 ஆம் ஆண்டு மே மாதம்  2  ஆம் திகதி  எல்சே வை ஆஸ்துமா முதன்முதலில்தாக்கியது. இதனால் சேவின் மீது மற்ற பிள்ளைகளை  விட பெற்றோருக்கு அதிக அக்கறை ஏற்பட்டது எனலாம்.சே வை பாதிக்காத சுற்று சூழலுடன் கூடிய வீட்டை தேடி அலைந்த குடும்பம் 5 வருடங்களின் பின்னர் கிறேசியாவில் உள்ள ஓர் இடத்தில குடியேறினர்.
                                                   சிறு  வயதில் சேகுவேரா
 
சே தன சிறு வயது   வாழ்க்கையை இங்குதான் கழித்தார். எர்னஸ்டோ குவேரா தன வாழ்நாளில் பயணங்களை இலகுவாகவும் விருப்புடனும் முகம் கொடுத்ததற்கு சிறு வயது முதலே ஏற்பட்ட இடமாற்றமும் அலைச்சலுமே காரணம் எனலாம். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட பிள்ளை மனம் தளர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே சேவின் பெற்றோர் அவருக்கு மருந்துகளை மட்டும் குடுப்பதுடன்   நிறுத்தி விடாது வீர விளையாட்டுகளிலும்   குதிரை ஏற்றம், நீச்சல்,மலையேற்றம் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வத்தை ஈடுபடுத்தினர்.  மேலும் புத்தகங்களையும் வீரசாகச நாவல்களையும் படிப்பதில் சேவிட்க்கு இயற்கையாகவே ஆர்வம் இருந்ததனால் அவர் தேடல் மிக்க அறிவாளியாக மாறியும் இருந்தார்.ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டுப்போரும்  சேவின் அரசியல் ஆர்வ ஈடுபாடிட்கு முக்கிய காரணாமாகும். சேவின் பெரியப்பா ஓர் பத்திரிகையாளர் என்பதால் யுத்தகளத்தில் நடைபெறும் விபரங்களை கடிதங்கள் மூலம் சே வாசிக்க கூடியதாய் இருந்தது. ஸ்பெயினிலிருந்து வெளியேறிய அகதிகள் சேவின் வீட்டிற்கு அருகில் குடியேறியதாலும்    அவர்களின் நட்புமூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களும் சேவின் அரசியல் வாழ்விற்கு அவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஸ்பானிய இலட்சிய வாதிகளின் தோல்வி சேவின்   மனதளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. 1937 ஆம் ஆண்டு   9 வயது சிறுவனான சே தன் வீட்டிலிருந்த ஸ்பானிய வரைபடத்தை பார்த்து தன் வீட்டு தோட்டத்தில் பதுங்கு குழிகளும் மலைகளும் நிறைந்த ஓர் நுணுக்கமான போர்க்களத்தை அமைத்திருந்தது சேவின் திறமைக்கும் அரசியல் ஈடுபாட்டிட்க்கும் தக்க உதாரணங்கள் ஆகும்.
                                               22  வயதில் சேகுவேரா


சேவின் தந்தை  ஆக்க்ஷன் ஆர்ஜென்டினா   என்னும் அமைப்பின் நகரக் கிளையை அமைத்து   சேகுவேராவை இளைஞர்   அமைப்பில் சேர்த்ததன் மூலம் சேவின் பெற்றோரும் அவரது வாழ்கையில் அரசியல் தொடக்கப் புள்ளியை இட்டனர்.

தொடரும்........................
        [இதன்  அடுத்த பதிவுக்கு சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-02]

0 comments:

Post a Comment