Advertise

Featured Post 5

Evil Serial Killers

Written By mayuran on Friday, March 16, 2012 | 4:24 AM

இப்பகுதி வரலாற்றில் மிக கொடூரமான மிருகங்களாக கருதப்பட்ட தொடர்கொலைகாரர்கள் பற்றியது பலவீனமானவர்கள் தவிர்க்கவும்
இவ்வாறான கொலைகாரர்கள் சீரியல் கொலைகாரர்கள் என அழைக்கப்படக்காரணம் இவர்கள் சட்டத்தின் பிடியில் அகப்ப்படும்முன் 30  40 என்று கொலைகளை சர்வசாதரணமாக செய்ததுதான் இவர்களது பாதிப்பு  Hollywood திரைப்படம் வரை சென்று இருக்கிறது Hallowenen ,friday 13 போன்ற  திரைப்படங்கள்

இவ்வாறான சீரியல் கொலைகாரர்களை வைத்து எடுக்கப்பட்டதுதான் இதுவரை இப்படியான 456 திரைப்படங்கள் வந்துள்ளன சீரியல் கொலைகாரர்களின் லிஸ்டில் சில பெண்களும் இருக்கிறார்கள் இவர்களுக்குள்ளே இருக்கும் கொலைமிருகம் சிறுவர்கள் சிறுமிகள் பெண்கள் முதியவர்கள் என பலரையும் விழுங்கி இருக்கிறது கொலை செய்வதற்கு முன் தம்மிடம் அகப்பட்டவர்களை பாலியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கொடூரமாக சித்திரவதை செய்த பின்பே கொன்றிருக்கிறார்கள்

 கொலைகாரன் என்றவுடன்   நாம் ஒரு கொலைகாரனை  கற்பனைசெய்து வைத்திருப்போம்
கொடூர கண்கள் பற்கள் தலைமுடி உடல் வாகு என்று பலவற்றை கற்பனை செய்திருப்போம் அனால் கொலையாளிகள் நாம் நினைக்கும் கற்பனை உருவங்களுக்கு முற்றிலும் மாறுபட்டவர்களாக இருப்பார்கள் 30 கொலை செய்த ஒருவனை உங்கள் முன் நிறுத்தினால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள் இவனா கொலை செய்தான் என்று

இவர் 7 கொலைகளை செய்தவர்  என்றால் நம்ப முடிகிறதா ?

 இவ்வாறு அடையாளப்படுத்த   முடியாமல் போவது உங்கள் தவறல்ல உளவியல் மருத்துவம் கற்கும் மாணவர்களுக்கு செயமுரைப்பரிசோதனையாக கொலையாளிகளை அடையாளப்படுத்துமாறு கேட்பார்கள் அம்மாணவர்களில் மிகவும் அதிகமானோர் தவறானவர்களையே    அடையாளம் காட்டிஇருக்கிறார்கள் ..

சீரியல் கொலைகாரர்களில்    சிலருக்கு நன்றாக  நகைச்சுவை உணர்வு வேறு இருந்திருக்கிறது வெளித்தோற்றத்திற்கு மிகவும் நல்லவர்களாகவும் உயர்ந்தபதவிகளை வகித்தவர்களாகவும் தொடர்கொலைகளை ஏதோ அன்றாட கடமைபோல் தினமும் செய்துவிட்டு   மனிதரோடு மனிதராக சமூகத்தில் உலாவிக்கொண்டிருந்தார்கள்     இதனால்தான் இவர்களை கண்டுபிடித்து கைதுசெய்ய போலீஸ் அதிகாரிகளுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது  ஒருவர் கொலைகாரனவதற்கு   பலகாரணங்கள் இருக்கின்றது

சாதரணமானவர்களாகிய எங்களுக்கும் அதே கொலைவெறி இருக்கிறது ஆனால் எல்லாம் எமது மனதுடன் முடிந்துவிடும் கொலைகாரர்கள் இதை தாண்டிவிடுகிரர்கள்   அவளவுதான்....... சாதாரன உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்பவர்களில் இருந்து  தொடர்கொலைகாரர்கள்   கொஞ்சம் வித்தியாசமான ரகம் இப்படியான தொடர்கொலைகாரர்கள் உருவாதற்கு அவர்களது இளமைப்பருவத்தில் ஏற்படும் மிகவும் கசப்பான அனுபவங்களும் முக்கிய காரணமாக அமைகின்றது

  சிறிய வயதில் வன்முறைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுதல் போதிய அன்பின்மை சித்திரவதைகள் போன்றன அவர்களுக்குள் இருக்கும் மிருகத்தை கொஞ்சம் கொஞ்சமாக சீண்டிவிடுகின்றன இவ்வாறான கொலையாளிகளை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என முழுவதுமாக கூற முடியாது இவர்களில் 97 சதவீதமானவர்கள் தங்கள் என்ன செய்கின்றோம் என்பதை தெரிந்தே செய்துள்ளார்கள் ஆனால் கொலைகளை செயும்போது தங்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறி இருக்கிறார்கள் சில மனநிலை பாதிககப்பட்ட கொலைகாரர்களுக்கு அவர்களுக்கு மட்டும் கேட்கும்  ஒரு குரல் அவர்களை ஆட்சி செய்யும் இதை செய் செய்யாதே என்று கட்டளை இடும் அவர்களால் அதன் கட்டளையை மீற முடியாது சிலர் கொலை செய்தபின் பிணங்களுடன் உடலுறவு வைத்துக்கொள்வார்கள் இதை Necrophilia என்று அழைப்பார்கள்


வன்முறைகள் தொடர்பாக சில புள்ளிவிபரங்கள் உண்டு  கடந்த 20 ஆண்டுகளில் 4 கோடி அமெரிக்கர்கள் வன்முறைகளுக்கு இரையாகி உள்ளார்கள் 35 நிமிடங்களுக்கு  ஒரு முறை ஒரு அமெரிக்கர் கத்தியால் குத்தப்பட்டோ ,துப்பாக்கியால் சுடப்பட்டோ இறக்கிறார் FBI இன் தகவலின் படி 500 சீரியல் கொலைகாரர்கள் அமெரிக்காவில் மட்டும் இருக்கிறார்கள் அனால் அவர்களில் 160 பேரைத்தான் கைதுசெய்து இருக்கிறார்கள்

இதைவாசித்துவிட்டு எம்போன்ற நாடுகள் எவ்வளவோ பறுவாயில்லை என்று நினைத்தால் அது நம் முட்டாள்தனம் அமெரிக்காவை புள்ளிவிபர  நாடு என்று அழைப்பார்கள் அங்கு சகலதுக்கும் கணிப்புமேற்கொண்டு புள்ளிவிபரம் வைத்திருக்கிறார்கள் 18 வயதுக்கு குறைந்த எத்தனை   பேர் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பதுவரை  நமது நாட்டைப்பற்றி சொல்லவே வேண்டாம் ஒருவேளை கணிப்புமேற்கொண்டால் அமெரிக்காவைவிட 2 /3 மடங்காக வருமோ தெரியல ....


சரி இப்பொழுது ஒவ்வொரு சீரியல் கொலைகாரர்களையும் அவர்களது பின்னணி ,எவ்வாறு எத்தனை பேரை கொலைசெய்தார்கள் என்று பார்ப்போம் ...


தொடரும் ..........

0 comments:

Post a Comment