Advertise

Featured Post 5

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் - 01

Written By mayuran on Thursday, March 15, 2012 | 6:38 PM

    உலகை பெரும் வியப்பில் ஆழ்த்திய ஒப்பற்ற பெரும் கணிதமேதை இவர் . 1914 முதல் 1918 வரை உள்ள சில வருடங்களில் 3000 இற்கும் அதிகமான புதிய கணிதத் தேற்றங்களைக் கண்டு பிடித்தவர் . இங்கிலாந்தின் F.R.S { Fellow of Royal Society } விருதையும் , இங்கிலாந்து Trinity கல்லூரியின் Fellow of Trinity College விருதையும் ஒருங்கே பெற்ற முதல் இந்தியன் . தமிழ்நாட்டில் பிறந்த ஒரு தமிழரான இவரை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? இவரது வாழ்க்கை வரலாற்றை அலசுவதே இத் தொடர்

 

   ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 டிசம்பர் 22 இல் தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார் . வளர்ந்ததும் படித்ததும் கும்பகோணத்தில் . தந்தையார் பெயர் கும்பகோணம் ஸ்ரீனிவாசயங்க்கார் , தாயார் ஈரோடு கோமளத்தம்மாள் . மிகவும் வறுமையான பிராமணக் குடும்பம் .
   இவரது அபாரக் கணிதத்திறன் சிறு வயதிலேயே வெளிப்பட்டது . சிறுவயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார் . 7 வது வயதில் உதவி நிதி பெற்று கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார் ராமனுஜன் .
   10 வது வயதில் அவருக்கு S.L.Loney ஆல் எழுதப்பட்ட advanced trigonometry நூல் வழங்கப்பட்டது . அவற்றைத் தானே சுயமாகக் கற்றுத் தேர்ச்சி அடைந்தார் . 12 ம் வயதில் Sum and Products of Infinity Sequences பற்றிய விளக்கத்தை அறிந்தார் . இது அவரது பிற்காலக் கண்டுபிடிப்புகளுக்கு பெரிதும் பயன்பட்டது . அத்துடன் அப்போதே பல தேற்றங்களையும் கண்டுபிடிக்கத் தொடங்கினார் . இதில் Euler identity தொடர்பான மறு கண்டுபிடிப்பு முக்கியமானது . இதன் மூலம் தனது அசாதாரண கணித ஆற்றலை பாடசாலையில் நிரூபித்து பல விருதுகளும் வென்றார் .
    தனது 15 வது வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கணித வல்லுநர் G.S.Carr தொகுத்த " Synopsis of Elementary Results in Pure Mathematics " என்னும் நூலை இரவல் வாங்கி சுமார் 6000 கணித தேற்றங்களை ஆழ்ந்து கற்றுக் கொண்டார் . இங்கு குறிப்பிடப்பட்ட S.L.Loney ஆல் எழுதப்பட்ட , மற்றும் G.S.Carr இனால் தொகுக்கப்பட்ட இரண்டு நூல்களும் தான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டவை .
    இதன் பின் 1903 இல் தனது 16 ம் வயதில் பெற்றுக்கொண்ட புலமைப்பரிசில் மூலம் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் சேர்க்கப்பட்டார் . பின் 17 வது வயதில் Bernoulli numbers மற்றும் Euler-Mascheroni constant தொடர்பாக தனது சொந்த கணித ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் . ஆனாலும் அவர் மனது கணிதத்திலேயே மூழ்கிவிட்டதால் எஞ்சிய பாடங்களில் கவனம் செலுத்த முடியவில்லை . விளைவு ; கல்லூரித் தேர்வில் கோட்டை விட்டார் . பின் நான்கு வருடம் கழித்து சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் தேர்வில் தோல்வியடைந்தார் !
பின் 1909 இல் திருமணம் செய்து கொண்ட ராமானுஜன் வறுமையின் கோரப்பிடியினால் தன் கணிதப் பித்தை தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டு சென்னையில் வேலை தேடத் தொடங்கினார் . கணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தரான ஆர். ராமச்சந்திரராவ் ; கணித வல்லுநர் பலரது சிபார்சினால் 1910 இல் ராமானுஜனுக்கு கணிதத் துறையில் பணிபுரிய , ஓரளவு தொகையை உபசாரச் சம்பளமாக மாதாமாதம் அளிக்க முன்வந்தார் . 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுமத்தின் வெளியீட்டில் [ Journal of tha Indian Mathematical Society ] வெளிவந்தன . மேலும் தனியாக வேலை செய்ய விரும்பி சென்னைத் துறைமுக நிறுவனத்தில் 1912 இல் ராமானுஜம் 'கிளார்க்' வேலையில் சேர்ந்த்தார் . அதன் பின் தான் அவர் வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது .

 { அது என்ன திருப்புமுனை என்பதை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள் .... }
கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் - 02 ஐ படிக்க  இங்கே கிளிக் செய்யவும்

{ தொடரில் எதாவது பிழைகள் இருந்ததால் தயவு செய்து குறிப்பிடவும் }

0 comments:

Post a Comment