Advertise

Featured Post 5

திருகேதீஸ்வரம் ஒரு பார்வை-03

Written By mayuran on Tuesday, March 13, 2012 | 12:12 PM

பழைய ஆலயசிதைவும் புதிய ஆலயத் தோற்றமும்
கி பி 1545 இல் திடீரென ஏற்பட்ட கடல் பெருக்கால் மாதோட்டத்தின் சில பகுதிகள் கடலோடு மூழ்கியது. இருப்பினும் ஆலயத்திற்க்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் கி பி 1585 இல் இக்கோவிலுக்குள்  நுழைந்த போத்துக்கேயர்கள் இங்கிருந்த பொன்னாபரணங்கள்   உட்பட பல பொக்கிசங்களையும் கொள்ளை இட்டு சென்றதுடன்  கோவிலையும் அடியோடு தகர்த்தனர்.   கி பி 1585 இட்க்கு பிறகு வருடாவருடம் ஏற்படும் பருவக்காற்றாலும் இயற்கையின் மாற்றத்தாலும் மீதமிருந்த இடிபாடுகளும் மண்ணுக்குள் மறைந்து போக கோவில் இருந்த இடத்தில் காலப்போக்கில் காடுகளும் புதர்களும் உருவாகின.கோவில் இருந்த இடமும் மறைந்து போனது கிபி 1585 முதல் கிபி 1903 வரை  318 வருடங்கள் கோவில் மறைந்து போயிருந்தபடியால் காலப்போக்கில் மக்களும் இக் கோவிலை மறந்துபோயினர் அல்லது சிந்திக்கமறன்தனர்.பின்னர்  கிபி 1872  ஆம் ஆண்டு மாந்தையில் ஒரு தேன்பொந்து மறைந்து போயிருக்கிறது என்று   ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பிரசங்கம் செய்யதொடங்கியதன் மூலமும் துண்டு பிரசுரங்கள் அடித்து வெளியிட்டதன் மூலமும் திருக்கேதீஸ்வரம் மீண்டும் மக்கள் நெஞ்சில்  துளிர்பெறத் தொடங்கியது.
                                                   ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் 
பின்னர் பழைய கோவிலிருக்கும் இடத்தை ஆராயமுயன்ற போது இதுவே பழைய கோவிலிருந்த இடம் என வண்ணார் பண்ணையை சேர்ந்த வேலுப்பிள்ளை உடையார் அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது இதை ஏற்று கொண்ட நாவலாரும் கோவிலை கட்ட பேரு முயற்சியில் ஈடுபட்டும் அது கை கூடாமலேயே இறையடிசேர்ந்தார். 21  வருடங்களின் பின்னர் யாழ் இந்துக் கல்லூரியை  அமைப்பதில் பெரும் பங்கு ஆற்றிய அட்வக்கேட் நாகலிங்கம், சேர் குமாரசுவாமி ,ராம-அருபழனியப்பச்செட்டியார் மற்றும் யாழ்ப்பான இந்து மக்களின் உதவியுடனும் கோவிலிருந்த 40  ஏக்கர்  நிலப்பகுதி கிபி 1893  ஏலத்தில் எடுக்கப்பட்டது.
                                   தற்போதைய கோவிலின் உட்பிரகார நந்தி 


 பசுபதிச் செட்டியாரின் உதவியுடன் மேட்கொள்ளப்பட்ட கோவில்த்  திருப்பணிகளின் போது கிபி 1894   பழைய கோவிலின் கற்பகிரகம்,பலிபீடம்,அர்த்தமண்டபம் உள்ளிட்ட பகுதிகள் கண்டுபிடிக்கப் பட்டதுடன் சோழர் கால கிணறும்  அதட்குளிருந்து விக்கிரகங்களும்,சிவலிங்கமும்  மற்றும் பூஜை பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. பசுபதிச் செட்டியாரின் மற்றும் யாழ் வாழ் மக்களதும் பேருதவியுடனும்  காசியிலிருந்து அழைபிக்கப்பட்ட சிவலிங்கத்தை கொண்டு பிரதிட்டை   செய்து கோவில் அமைக்கப்பட்டதுடன் கிபி 1903 ஆம் ஆண்டு  கும்பாவிசேகம் சிறப்புற நடைபெற்றது. அன்றுமுதல் இன்றுவரை பல கும்பாபிசேகமும் நடைபெற்றது மட்டும் மன்றி இன்று இவாலயம் புதுப் பொலிவுடனும் அழகிய தொடதுடனும் மிளிர்கிறது .                
                                              1958  கோவிலின் தோற்றம்    

தற்போது  உள்ள கோவிலின் தோற்றமும் சுற்றாடலும் 







                                                                                                                                           [முற்றும்]

0 comments:

Post a Comment