ஈழத்து சிவாலயங்களில் முன்னிலை வகிப்பதும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததும் நாயன்மார்களால் பாடல் பெற்றதுமான இத் திருத்தலத்தைப் பற்றி அறியாதவர் யாருமே இலர்.இத் தலம் மாதோட்டம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. கோவில்கள் என்பது வெறும் வழிபாட்டுதலமாக மட்டும் நோக்கப்படுபவை அல்ல மாறாக ஒரு இனத்தின் அடையாளமாகவும் இருப்பாகவும் நோக்கப் படுகின்றது.அந்தவகையில் விஜயன் வருகைக்கு முற்பட்டதாக கருதப் படும் இத்தலம் இலங்கையில் தமிழர்களின் இருப்பை அறிவதில் எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பதை யாழ்ப்பான ராஜ்யத்தில் அடுத்து வரும் பாகங்களில் விரிவாக காண்போம்.
திருக்கேதீஸ்வரப் பெயர் விளக்கமும் மாதோட்ட பெயர் விளக்கமும்
தொன்மையில் கேதுவினால் பூஜிக்கப்பட்ட காரணத்தினால் தான் கேது வழிபட்ட ஈஸ்வரம் என்பது கேதீஸ்வரம் என்று திரிபுற்றது என்பது கர்ண பரம்பரைக் கதை. மேலும் இத்தல உறை சிவனை மகாதுவட்டா என்னும் தேவ தச்சன் வழிபட்டதால் மகாதுவட்டாபுரம் எனப் பெயர் பெற்ற இத்தலம் காலப் போக்கில் மாதோட்டம் என்று மாறிற்று என்பர்.
திருகேதீஸ்வரம் 1930
வரலாற்று ஆய்வாளரின் வாதங்கள்
மகாதுவட்டாவால் மாதோட்டம் எனும் பெயர் பெற்றது உண்மையாகக் கருதினால் திருக்கேதீஸ்வரமானது ,இராமேஸ்வரத்திட்க்கு முற்பட்டது என்பது நூலாய்வாளர்களின் வாதம் எப்படிஎன்றால் மகாதுவட்டாவின் காலம் இராமன் காலத்திற்கும் இராமாயண காலத்திற்கும் முற்பட்டது என்பது அவர்களின் சான்று. மேலும் கோனேஸ்வர காலத்திற்கு முற்ப்பட்டது திருக்கேதீஸ்வரம் என்பது தெளிவு.ஆகையால் 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமூலர் தன் திருமூல நூலில் ஈழத்தை சிவபூமி என்று வர்ணித்தபடியால் இத்தலம் திருமூலர் காலத்திற்க்கும் முற்பட்டது எனலாம் என்கின்றனர் ஒரு பகுதியினர். "திருக்கேதீஸ்வரம் தோற்றம் பழமை சரித்திரதிட்கோ, அகழ்வாராச்சிகளாலோ அறியமுடியாதது புராண இதிகாசங்கள் மூலமே அறியத்தக்கது" என்னும் பண்டிதமணி ஐயா அவர்களின் கருத்து ஏற்கத்தக்கது.
அகழ்வாராச்சியில் கிடைத்த சிவலிங்கம்
அகழ்வாராச்சியின் போது கிடைக்கப் பெற்ற மகாலிங்கத்தையும் நந்தி சிலையையும் அவற்றின் பெரிய தோற்றத்தையும் வைத்து சிந்தித்தால் புராதன திருக்கேதீஸ்வரம் இந்தியச் சிவன் கோவில்கள் போன்று பெரிய சுற்று பிரகாரத்தையும் , கோபுரத்தையும் கொண்டிருக்க வேண்டும் என்பது இக் கோவில் சோழ மன்னர்களின் செல்வாக்கையும் அவர்கள் காலத்தில் கும்பாவிசேகம் செய்யப்பட்டமையும் உறுதியாவதில் இருந்து தெளிவாகின்றது.
தொடர்ந்து பார்போம் அடுத்த பதிவில்................

0 comments:
Post a Comment