Advertise

Featured Post 5

Indigo Boy from Mars

Written By mayuran on Friday, March 2, 2012 | 4:18 AM

ஓர் இரவில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து உரையாடிக்கொண்டு இருக்கின்றீர்கள் அங்கு 7  வயது  சிறுவன் ஒருவன் வருகின்றான்...அவன் செவ்வாயில் இருந்ததாக கூறுகின்றான் அங்குள்ள தொழில்நுட்பங்களைக் கூறுகின்றான் பூமியின் ஆரம்ப வரலாறுகளில் இருந்த லேமூரியக்கண்டம் பற்றியும் அபோது வாழ்ந்த லேமூரியன்கள் பற்றியும் கூறுகின்றான் இவற்றைக்கேட்ட உங்களுக்கு எப்படி இருக்கும் ?
உண்மையில் இப்படியான சம்பவம் நடந்திருக்கின்றது அந்த சிறுவனின் பெயர் "Boris kipriyanorich" , boriska என்பது நிக் நேம் இப்படியான அசாதாரண ஆற்றல் கொண்ட சிறுவர்களை "indigo" சிறுவர்கள் என அழைப்பார்கள்.இவன்  ரஷ்யாவை  சேர்ந்த சிறுவன்  ரஷ்யாவில் பிரபலமான சிறுவன் என்றால் அது இவர்தான் ..
இவரது பிறப்பு முதல் பல சுவாரசியமான அசாதாரணமான விடயங்கள் நடந்து உள்ளன ..boriska "volzhsky " யில் பிறந்தார் ..இவரது தாயார் இவரது பிறப்பு பற்றி கூறும்பொழுது "ஒரு காலையில்தான் boriska பிறந்தான் மற்ற தாய்களைப்போல் எனக்கு மகப்பேறு கடினமாக இருக்கவில்லை சடுதியகவே எல்லாம் முடிந்துவிட்டது ..எனக்கு வலிகூட ஏற்படவில்லை வைத்தியர்கள் boriska  வைக்கொண்டுவந்து எதுதான் என் குழந்தை என்று என்னிடம் தந்தார்கள்
...அவன் பார்வை வளர்ந்த ஒருவரின் பார்வைபோல் இருந்தது ..."என்று கூறி உள்ளார் .borska பிறந்தவுடன் அழவில்லை வளரும் வரை எந்த நோய்க்கும் உட்படவில்லை ...ஆனால் சாதாரண மற்ற குழந்தைகள் போலத்தான் வளர்ந்தார் ...அவர் கதைக்கவும் வாசிக்கவும் தொடங்கியது பிறந்து 8  ஆவது மாதத்தில் இதன் பின்னர் பெற்றோர் இவரை "meccano "    விற்கு கொண்டு சென்றார்கள் அங்கு boriska கணிதரீதியான சரியான உருவங்களை தானாக உருவாக்கினான் ...அவனுக்குள் வேற்று கிரகத்தினர் யாராவது இருக்கிறர்கள என்றுகூட தான் பயந்ததாக அவனது தாயார் குறிப்பிட்டுள்ளார் ...பின்பு இவன் படங்களை வரைய   ஆரம்பித்துள்ளான்...அது விளங்குவதற்கு கடினமாக இருந்தது மனநல வைத்தியர் அந்தப்படத்தை ஆய்வு செய்தார் அவனையும் பரிசோதனைக்கு உட்படுத்தினர்  ...borska அவனை சுற்றி உள்ளவர்களைத்தான் வரைய  முயற்சி செய்திருக்கிறான் என்று மருத்துவர்  கூறினார் ...
இச்சிறுவன் ஆரம்பத்திலேயே கோள்களின் பெயர்கள் உப கோள்களின் பெயர்கள் கலாக்ஸ்சி களின் எண்ணிக்கை என பலவற்றை கூற ஆரம்பித்துள்ளான் ...இப்படியான காரணங்களால் இந்த குழந்தை  விஞ்ஞானியின்  புகழ் ஒளியின் வேகத்தில் பரவியது ..இச்சிறுவன் சிறிய ஹீரோபோல் ஆகிவிட்டான் ..இவனைப்பர்க்கவருபவர்களிடம் வேற்று கிரக வாழ்க்கை பற்றியும் அங்குதான் வாழ்ந்தது பற்றியும் கூறினான் ..பலருக்கு
இவன் எவ்வாறு எவளவு சிறிய வயதில் எவ்வளவு விடயங்களைத்தேரிந்து வைத்திருக்கின்றான் என்பது ஆச்சரியமாக இருந்தது ..ஏனெனில் boriska வின் உரையாடல்  அவனது வயதை ஒத்த  சிறுவர்களின் உரையடளைப்போல் இல்லை terminology வார்த்தைகளையும் சேர்த்து உரையாடினான் இதுவே கரணம் ...


சிலர் அவனிடன் எதோ உளவியல் கோளாறு  இருப்பதாக கருதினர் ...
boriska சற்று வளர்ந்ததும் வீதிக்கு சென்று எதிர்ப்படுபவர்களைப் பற்றி எல்லாம் கூற ஆரம்பித்தான் ...சிலரிடம் போதைப்பொருட்களைப் பாவிக்கவேண்டாம் எனவும் சிலரிடம் உங்கள் மனைவிக்கு துரோகம் செய்யாதீர்கள் எனவும் கூற ஆரம்பித்தான்...
பின்பு எதிர்ப்பட்டவர்களின் எதிர்கால நிகழ்வுகளைக்கூறி அதைப்பற்றி எச்சரிக்கைகள் வழங்கினான் .. இதனால் இவரது பெற்றோருக்கு நெருக்கடி
ஏற்ட்பட்டது ..

தனது நாடு சீராக முன்றும் என்றும் ...உலகத்திற்கு 2009 இலும் 2013 இலும் பாரிய அழிவுகள் நீரினால் ஏற்படும் எனவும் கூறியுள்ளான்


இவை ரஷ்யவிஞ்ஞானிகளின் காதுக்கு எட்டியது அவர்கள் இச்சிறுவனை "earth magnetism & radio waves of the russion academy"யில்  வைத்து  பரிசோதனை செய்தார்கள்
இதை பற்றி prof valadislav lugovenko கூறும் போது இவனைச் சுற்றி  உள்ள கதிர்வீசல்கள் (mind waves)வலிமையானதாக   காணப்படுவதாகவும் இதனால்தான் இவன் அசாத்தியமான அறிவாளியாக இருக்கின்றன் எனவும் கூறி உள்ளார் ...மனித மூளையின் நினைவாற்றல் பகுதிகளில் ஒன்றாக "work and remote memmory"காணப்படுகின்றது இதில் வழக்கமாக பசி தாகம் போன்ற உணர்சிகள்  சம்பந்தமான விடயங்களும் அனுபவம் சார்ந்த விடயங்களுமே இருக்கும் ஆனால் இப்படியான இண்டிகோ சில்டர்ன்ஸ் பிரபஞ்சம் கோள்கள் போன்ற விடயங்களையும் இந்த மேம்மொரியில் இருந்து பெற்றுவிடுகிறார்கள்
இப்படிப்பட சிறுவர்களுக்கு  AIDS  தொற்றுதல் ஈட்படாத அளவுக்கு கூட அவர்களது dna கள் சிலவேளைகளில் உதவுவதாக கூறி உள்ளார் ...
 செவ்வையைப்பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வரும்  விஞ்ஞானிகளுக்கு தெரியாத விடயம் எவ்வாறு இவருக்கு  தெரிந்தது ?


தொடரும் ........


 (பத்திரிக்கையாளருடன் boriska வின் கேள்விகள் பதில்களுடன் அடுத்த பதிவு தொடரும் ..)

1 comments:

Anonymous said...

உண்மைதான்

Post a Comment