Advertise

Featured Post 5

WHAT IF THE EARTH STOPPED SPINNING?

Written By mayuran on Friday, March 2, 2012 | 4:19 AM

1978 இல் வெளியான superman திரைப்படத்தை மறந்திருக்க மாட்டீர்கள் அதில்

superman  தனது காதலியை காப்பாற்ற பூமியின் சுற்றலை நிறுத்தி எதிர்த்திசையாக
சுற்ற வைத்திருந்தார் ...உண்மையில் எமது பூமி  தனது சுற்றலை நிறுத்தினால் என்னவாகும்?


நாம் எமது பூமி தனது    சுற்றலை நிறுத்திக்கொண்டுள்ளதாக கற்பனைசெய்வோம் அதாவது சடுதியாக பூமியின் வேகம் குறைகிறது இதைத்தான் விபத்து என்கிறோம் (இயற்கையான ஒழுங்குகளில் நடைபெறும் மாற்றம் )இதில் உயிர்கள்  பிழைத்துக்கொண்டால் புதிய  உலகம் எப்படி இருக்கும் ?
சாதாரணமாக ஒருநாளின் அரைவாசி நேரம் பூமி இருளாகவும் மிகுதிநேரம் ஒளியிலும்  இருக்கும் ..ஆனால் சுழற்சியை  நிறுத்தியபின்  ஒருவருடத்தின் அரைப்பகுதி நேரம் இருளிலும் அரைப்பகுதிநேரம் ஒளியிலும் இருக்கும் (ஒருவருடத்தில் பூமி சூரியனை சுற்றுவதால் ) தற்போது பூமியின் வட தென்
முனைகளில்  உள்ளது போன்ற காலநிலை காணப்படும்.
நாம் புவி மீது கற்பனையாக வரைந்திருக்கும்  கோடுகளில்(அகலக்கோடு நெடுன்கொடுகள்)  இருக்க வேண்டிய காலநிலையை  விட  மிகவும்  வித்தியாசமான காலநிலையை பூமி அனுபவிக்கும் ...அதாவது பூமியின் ரேகைகளுக்குரிய பிரதேசங்களில் காணப்படும் வெப்ப நிலையைவிட மிகவும் அதிகமான  வெப்பநிலை  காணப்படும் ...சூரியனை நோக்கி  இருக்கும் பிரதேசங்களில் வெப்பநிலை முரட்டுத்தனமாக உயர்ந்திருக்கும் அண்ணளவாக சூரியனின் வெப்பநிலைக்கு உயர்ந்திருக்கும் ...எதிர்ப் பகுதி
இருளாக காணப்படும் அத்துடன் அதிக குளிராகவும்  காணப்படும் ..இப்படியான மிகமோசமான  காலநிலையை தாவரங்களும்  விலங்குகளுக்கும்  ஏற்று   கொள்வது  மிகவும் கடினமாக  இருக்கும் .
இந்த சூழ்நிலை காரணமாக நீங்கள் வட/தென் முனைப்பிரதேசங்களுக்கு இடம் பெயரலாம் தானே  என்று நினைக்கலாம் (காரணம் வட தென் முனைகளில் சூரியனின் கதிர்கள்  அதிக அளவு சாய்வாக பூமியில் படும் இதனால் சூரியக்கதிர்களின் பாதிப்புக் குறைவு )

நீங்கள் நினைப்பது தவறு ஏன்எனில் நீங்கள் சென்று பார்க்கும்போது வட, தென் பகுதிகள் கடலிற்குள் மிக அழமாக மூழ்கி இருக்கும் .. காரணம்  பூமி சுற்றும் போது மையநீக்க விசையின் காரணமாக  பூமியின் மத்திய பகுதி சற்று வீங்கிக் காணப்படும்


 சுற்றல் எல்லை எனில் மைய  நீக்க விசை இல்லை வீக்கமும் இல்லை பூமியின் மத்திய ரேகை மீதுள்ள மேலதிக நீர் வட தென் முனைகளை நோக்கி செல்லும் ..
இதே போன்று இன்னுமொரு சம்பவமும் நடைபெறும்  ..நமது புவிக்காந்தப்புலம்   இழக்கப்படும் நமக்கு இதுவரை புவிக்கந்தப்புலம் எவ்வாறு உருவாகின்றது என தீர்க்கமாகத்தெரியாது ஆனால் எல்லோராலும் நம்பப்படும் கொள்கை ஒன்று உள்ளது அது என்னவெனில் பூமியின் மையப்பகுதி அதன் வெளிப்பகுதியை விட வேகமாக சுழலுதல்   என்பதாகும்..சுழற்சி இல்லையெனில் புவிக்காந்தப்புலம் இருக்காது ..புவிக்காந்தப்புலம் இல்லை எனில்    சூரியக் கதிர் வீசலால் பூமி நேரடியாகத் தாக்கப்படும் ..எமது வளிமண்டலத்தை(ஓசோன் உட்பட ) நாம் இழக்கவும்    நேரிடலாம் (அதிகரிக்கும் வெப்பத்தால் )...
மனிதர்களாகிய நாம் மிகவும் அறிவாளிகள் அத்துடன் பலமான தொழில்நுட்ப அறிவைக்  கொண்டவர்கள் எனினும் எப்படியான சூழலை எதிர்நோக்குவது எமக்கு பாரிய சவாலாகும் பாரிய செலவில் கூடாரங்கள் அமைத்து எம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாம் ஆனால் பல விடயங்கள் எமது கட்டுப்பாட்டை மீறி சென்றுவிடும் ஒட்டு மொத்தமான உணவுச்சங்கிலியே பாரிய அபாயத்திற்கு உட்பட்டிருக்கும்    நாம் புதிய உணவு மூலகங்களை தேட நேரிடும் இந்தப் புதிய சூழலுக்காக நாம் ஒரு நிலையான காலத்தை சார்ந்திருக்கலாம் என்பது மட்டுமே ஆறுதலான செய்தி (குளிரான பகுதி ).....
  

0 comments:

Post a Comment