Advertise

Featured Post 5

வியட்னாம் : வெல்வது யாராயிருப்பினும் தோற்பது அமெரிக்காவாயிருக்கட்டும்.

Written By mayuran on Monday, May 7, 2012 | 11:46 PM


“ஹேலோ, அமெரிக்க ஜனாதிபதியா?

“யா, நீங்க யார் கதைக்கிறது?

“இங்க எங்கட நாட்டுல ஒரே சர்வாதிகார ஆட்சி நடக்குதையா, நீங்கதான் காப்பாத்தணும்”

“அது எங்க கடமை. சொல்லுங்க, அமெரிக்காவிண்ட லட்சியமே உங்களமதிரி கொடுமைப்படுத்தப்படுற மக்களுக்கு விடிவு கட்டுறதுதான்.. உம்ம்... உங்கட நாட்டுல பெற்றோலியம் கிடைக்குமா?

“பெற்றோலியமா? இல்லையே...”

“சீ.. வைடா ஃபோனை!!!”

* * *

உலகத்தின் நாட்டாண்மையாக இன்றுவரை இருந்துவருகிறது அமெரிக்கா. பெற்றோலியம் இருக்கும் எந்த நாட்டிலும் அமைதியை கொண்டுவருவதே அந்த நாட்டின் தலையாய கடமை. நாடுகளின் கொடுங்கோலர்களை ஒழிக்கும் உலகத்தின் கொடுங்கோலன் அமெரிக்கா. அப்படிபட்ட அமெரிக்கவுக்கே கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியது வியட்னாம் என்னும் சிறு நாடு. சூடுபட்டும் அமெரிக்கா திருந்தவில்லை என்றாலும், அமெரிக்காவுக்கு ஒரு வெட்கக்கேடாக, அவமானமாக எப்போதும் இருந்துவரும் தோல்வியைக்கொடுத்தது வரலாறு.

வரலாற்றில் நெஞ்சை கசக்கிப் பிழியும்...’, என்று ஏதோ சொல்வார்களே, அப்படிபட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தது இந்த வியட்நாம் போரில்தான். ஹோ சி மின் தலைமையிலான கெரில்லா படையினருக்கும், அமெரிக்க இராணுவத்துக்கும் இடையில் நடந்ததாக நாம் இதை நினைவு வைத்துக்கொண்டாலும், உண்மையில் கொம்மியுனிசத்தை ஆதரித்த, மற்றும் எதிர்த்த பல நாடுகளுக்கிடையில் நடந்த போர், இது. வென்றது கொம்மியுனிசமோ, தோற்றது முதலாளித்துவமோ இல்லை. வியட்நாமுக்கு கொலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை கிடைத்தது, அவ்வளவே. அதற்கு பல தரப்புக்கள் இழந்தது பலவற்றை.

காதலுக்கு அடுத்ததாக புரட்சியில் மட்டும்தான் வென்றவர், தோற்றவர் என்று இல்லை. உலகளவில் புரட்சியின் அடையாளமாக கொண்டாடப்படும், profile picture ஆகவும், t-shirt போட்டோவாகவும் நமது உணர்வுமிக்க இளைஞர்களிடம் அல்லல்படும் சே குவேராவே ஒரு கட்டத்தில் தோற்கடிக்கப்பட்டவர்தான். புரட்சிக்காரன் ஆவதே மனிதக்கணக்கில் வெற்றிதான். அப்படிபட்ட புரட்சிக்காரர்கள் வரிசையில்,வெற்றிபெற்றதோடு மட்டுமல்லாது, ஏனைய புரட்சியால் மலர்ந்து, பின்னர் கடும்போக்கான ஆட்சியால் சிதைந்துபோன நாடுகளைப்போலல்லாது, வளர்ந்ததோ, இல்லையோ நாட்டை மக்களுடையதாகப் பேணிய தலைவர் ஹோ சி மின்.

உண்மையில் நடந்தது எதுவாகவிருப்பினும்,அமெரிக்காவின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியது என்று வியட்நாம் ரலாற்றின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிட்டது. எந்தப்பெரிய நாடாகவிருப்பினும், மக்களின் ஆதரவு இல்லாமல் ஒரு போரிலும் வெல்லமுடியாது, எந்தச்சிறிய இயக்கமாகவிருப்பினும், மக்களின் ஆதரவிருப்பின் தோற்கடிக்கப்படமுடியாது என்பதை பதிவுசெய்த வரலாற்றுச்சம்பவம், இது. 

 ஏனைய போர்களைப்போலல்லாது, இந்தப் போரில் பயங்கர ஆயுதமாகப் பயன்பட்டவை புகைப்படங்கள். முக்கியமாக ஒரு படம், ஒரே படம். 

நேபாம் குண்டுத்தாக்குதலில் உடல் எரிந்துபோன 9 வயதுச் சிறுமி கிம், கதறிக்கொண்டு ஓடிவரும் காட்சி. (ஜூன் 8, 1972)



வியட்நாமியர் ஒருவரின் மண்டையோடு, வீதி சமிக்ஞையாக.


அடுத்த வினாடி எடுக்கப்படமுடியாத புகைப்படம்.

தென் வியட்நாம் சிப்பாய் ஒருவன்,கெரில்லாக்கலைபற்றி தவறான தகவல்களை தந்ததற்காக, ஒரு விவசாயியை தண்டிக்கிறான். (ஜனவரி 9, 1964)


விய்ட்நாம் தந்தை ஒருவர், எரிந்துபோன தனது குழந்தையுடன். (மார்ச் 19, 1964.)
வியட் கோங் குண்டுத்தாக்குதலிலிருந்து தப்பியோடும் மக்கள். (ஜனவரி 1, 1966)
தென் வியட்நாம் பெண் ஒருவர் தனது கணவன் இறப்புக்காக அழுகிறார். (அந்தப் பார்சலில்தான் கணவர் உள்ளார்.)(ஏப்ரல் 1969)
அமெரிக்க சிப்பாய் ஒருவரின் புகைப்படம். "யுத்தம் ஒரு நரகம்" என்று தனது தொப்பியில் எழுதியுள்ளார். (ஜூன் 18,1965)
 தென் வியட்நாம் ஜெனரல் என்.என்.லோன்,வியட் கொங் பய் லோப் என அழைக்கப்பட்டவரை சுடுகிறார்.(பெப்ரவரி 1, 1968.)

வட வியட்நாம் புரட்சிக்காரர்களின் tank, தென் வியட்நாம் தலைநகர் சைகோனில், ஜனாதிபதி இல்லத்துக்குள் நுழைகிறது. சைகோனின் வீழ்ச்சியே, புரட்சியின் வெற்றியாகும்.(ஏப்ரல் 30, 1975)
தென் வியட்நாம் அரசின் கொடுமைகளை கண்டித்து,புத்த  பிக்கு குவாங் டாக் சைக்கோன் வீதியில் தீக்குளிக்கிறார். (ஜூன் 11, 1963)






வியட்நாம் போரின் பின்னணி, வரலாறு, நடந்தது என்னென்ன என்பதையெல்லாம்......





                                   ..................பார்ப்போம்.
வியட்நாம் விடுதலைப்போர் # 1 

1 comments:

Post a Comment