Advertise

Featured Post 5

நீல்ஆம்ஸ்ட்ராங் நிலவிலிருந்து வானத்தைப் பார்த்து........ஐயோ பாவம்!!!

Written By mayuran on Sunday, May 6, 2012 | 11:41 PM

        நிலவில் பாட்டி சுட்ட வடையைத் திருடியவர்கள்-02


    1966-05-30 இல் அமெரிக்காவின் Surveyor-1 சந்திரனில் மெதுவாகத் தரையிறங்கிய கட்டத்தில் தான் அமெரிக்கா; ரஸ்யாவை over take செய்து பாட்டி சுட்ட வடையை முதலாவது ஆளாக திருடப் போகிறது என்று சென்ற பதிவில் கூறியிருந்தேன். [சென்ற பதிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்]
   Surveyor-1 ஐத் தொடர்ந்து ரஸ்யாவின் luna-13; 24-12-1966 இல் சந்திரனில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்ட போதும் 4 நாட்களின் பின்னர் அது பழுதடைந்து தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டது.
                                   luna-13
 ஏற்கனவே சந்திரனில் முதலாவதாகத் தரையிறக்கப்பட்ட luna-9 உம் 3 நாட்களின் பின்னர் அதன் பற்றரி பழுதடைந்ததன் காரணமாக தனது செயற்பாட்டை நிறுத்தியிருந்தது. இவை இரண்டுமே சந்திரனின் மண் மாதிரிகளை எடுத்துக்கொண்டு மீண்டும் பூமிக்குத் திரும்பும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டவை. இவை செயலிழந்ததால் ரஸ்யாவினால் நிலவின் மண் பற்றிய தகவல்களைப் பெற முடியாமல் இருந்தது. இந்தக் கட்டத்தில் தான் ரஷ்யா பின்தங்கியது.
   ரஷ்யாவைப் போலன்றி அமெரிக்கா; நிலவின் மண்ணை நிலவில் வைத்தே சுயமாகச் சோதிக்கும் வகையில் தனது விண்கலங்களை வடிவமைத்தது.
     Surveyor-3
ரஷ்யாவின் luna-13 இன் பின்னர் 17-04-1967 இல் அனுப்பப்பட்ட அமெரிக்காவின் Surveyor-3 நிலவின் மண் மாதிரிகளைத் தானாகச் சோதித்து, முடிவுகளைப் பூமிக்கு அனுப்பியது. அதன் பின்னர் 08-09-1967 இல் அனுப்பப்பட்ட Surveyor-5 முதன் முதல் 'Alpha துகள் சிதைவு Technique' இல் சந்திரனின் மண்ணை ரசாயன முறையில் ஆய்வு செய்து முடிவுகளைப் பூமிக்கு அனுப்பியது. மேலும் 1966-1967 ம் ஆண்டில் மட்டும் Lunar Orbiter ஐந்தை நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு ஏவி நிலவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படம் எடுத்து, அடுத்து அமெரிக்கா சந்திரனில் மனிதரை இறக்கத் தகுதியான தளங்களைத் தேர்ந்தெடுத்தது.

     இதன் தொடர்ச்சியாக 21-12-1968 இல் அமெரிக்கா; apollo 8 விண்கலத்தில் சந்திரனுக்கு முதன்முதலில் மனிதர்களை அனுப்பி வைத்தது.

    இவர்கள் சந்திரனில் தரையிறங்கவில்லை. இக் கலம் சந்திரனைச் சுற்றிவந்து ஆய்வு செய்தது. இவ் விண்கலத்தில் frank borman, james lovell, william anders ஆகிய மூன்று வீரர்கள் சந்திரனுக்குச் சென்றார்கள். புறப்பட்டு 3 நாட்களின் பின் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையை அடைந்த விண்கலம், அங்கு 20 மணித்தியாலங்கள் சந்திரனைச் சுற்றிவந்தது. அதிலிருந்தபடி அவர்கள் சந்திரனின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்தனர்.
      இதன் அடுத்தகட்டமாக சந்திரனில் இறங்கும்போது அணிந்திருக்க வேண்டிய உடை, இரண்டுபேர் செல்லக்கூடிய விண் ஓடத்தை தாய்க்கலத்தில் இருந்து பிரிப்பது போன்றவற்றுக்கான ஒத்திகைகள் apollo-9, apollo-10 ஐ புவிச் சுற்றுப்பாதைக்கு அனுப்பி நிகழ்த்தப்பட்டன.
அனைத்தும் வெற்றியடந்தன. இனி சந்திரனில் மனிதனைத் தரையிறக்க வேண்டியது தான் பாக்கி. 
     ஆனால் ரஷ்யர்களைப் பொறுத்தவரை அவர்களால் இன்னமும் நிலவின் மண் மாதிரிகளைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருந்தது. இந் நிலையில் மூன்றாவது முயற்சியாக 
                         luna-15
luna-15 ஐ 13-07-1969 அன்று சந்திரனின் மண் மாதிரியைப் பூமிக்குக் கொண்டு வருவதற்காக அனுப்பியது ரஷ்யா.
இது 17-07-1969 அன்று சந்திரனின் சுற்றுப்பாதையை அடைந்தது. இதனுடைய on-board system, control முழுமையாக செக் பண்ணப்பட்டு 21-07-1969 அன்று சந்திரனின் தரையை நோக்கித் திருப்பப்பட்டது. அடுத்த நாலாவது நிமிடம் சந்திரத் தரையிலே போய் 'தொப்' என்று விழுந்து நொறுங்கியது      luna-15 !!!
    Wait a Minute ........................  21-07-1969.................... எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ? YES,  இதே நாள் 13 மணித்தியாலத்துக்கு [12 மணி 55 நிமிடம் ] முன்னர் தான் நீல்ஆம்ஸ்ட்ராங் நிலாவில் தனது இடது காலை எடுத்து வைத்து பாட்டி சுட்ட வடையைத் திருடியிருந்தார் !!!
apollo 11 நிலவில் இருந்த போது, ரஷ்யாவின் luna -15 நிலவில் விழுந்த ஆவணப்படக் காட்சியைக் காண இங்கே கிளிக் செய்யவும்

நீல்ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த வீடியோவைக் காண இங்கே கிளிக் செய்யவும்                                                
                                                                                                                         தொடரும்....
{ தொடரில் ஏதாவது பிழை இருப்பின் தயவுசெய்து தெரிவிக்கவும் }

0 comments:

Post a Comment