துன்பம் வரும்போதும் கெக்கெபிக்கே என்று சிரியுங்கள் என்கிறார் வள்ளுவர். சாவு வரும்போதும் ஆவ்வாறே. சாவு வருவதற்கான நிகழ்தகவுகளை பார்த்திருப்பீர்கள்.(பார்க்காதோர் கிளிக்கவும்.) நிகழ்தகவின் – சாவுக்கும்கூட – சுவாரஷ்யாமான பக்கங்களை பார்ப்போம்.
# மனதுக்குப் பிடித்த நடிகையுடன் ஒரு பகலைகழித்தல் (dating) : 1/88 000
(அதாவது இவ்வாறு நடப்பதற்கான நிகழ்தகவு 88000 இல் 1, 88,000 பேரில் ஒருவருக்குத்தான் நடக்கும். ம்.... (இதற்குப் பெயர் பெருமூச்சு.))
# விண்வெளி வீரராதல் : 1/13 200 000
# ஒலிம்பிக் பத்க்கம் வெல்லுதல் : 1/662 000
# ஜனாதிபதி ஆதல் : 1/10 000 000
# கிரிக்கெட்/உதைபந்து போட்டியொன்றை பார்த்துக்கொண்டிருக்கும்போது பந்து உங்கள் முகத்துக்கு நேரே வருதல் : 1/563
# பஸ்ஸில் 8km பயணித்தால் மரணித்தல் : 1/500 000 000
# அடுத்த வருடமே வீதி விபத்தில் செத்துப்போதல் : 1/77
# 120 வயதுக்கு மேல் வாழ்வதில் ஆசையின்மை : 1/1.5
# பட்டாசுகளால் தீக்காயம் : 1/19556
# முகச்சவரத்தின்போது முகம் கிழிபடல் : 1/6585
# இயந்திர வாளால் அரியும்போது வெட்டுப்படல் : 1/4464
# குளிக்கும்போது (வழுக்கி, மரண அடிபட)விழுதல் : 1/2232 (கூடியளவு குளிப்பதை தவிர்க்கவும்.)
# மின்னலில் தாக்கப்படல் : 1/576 000
# ஏதாவது ஒரு காயத்தால் அடுத்த வருடமே நீங்கள் செத்துப்போதல் : 1/1820
# யாராலாவது கொலை செய்யப்படல் : 1/18 000
# கொலை முயற்சியிலிருந்து தப்புதல் : 1/2
# எப்போதாவது ஏதாவது குற்ற வன்செயலால் தாக்கப்படல் : 1/20
# பீரங்கியால் சுடப்படல் : 1/20 000 000
# படுகொலை ஒன்றால் இறத்தல் : 1/16421
# குண்டுவெடிப்பில் அகப்படல் : 1/107 787
# உங்களுக்கு பிசாசு பிடித்ததாக மக்கள் நம்புதல் : 1/7000
# தினமும் செய்தித்தாள் படிப்பதில் சோம்பல்படல் : 1/3
# உங்கள் திருமணம் விவாகரத்திலிருந்து தப்புதல் : 1/1.23
# ஒரு நடிகர்/ நடிகையின் திருமணம் விவாகரத்தில் முடிதல் : 1/1.5
# உங்களுக்கு ஒரு புத்திசாலி (genius) குழந்தையாக பிறத்தல் : 1/250
# விண்வெளியில் ஏதாவது விசித்திர வஸ்துக்களை பார்த்தல் : 1/3 000 000
# சரியாக ஒரு விண்கல் வந்து உங்கள் வீட்டுக்கு மேலே விழுதல் : 1/182 138 880 000 000
# அடுத்த 100 வருடங்களுக்குள் பூமியுடன் ஒரு பெரிய விண்கல் மோதி அழிவு ஏற்படல் : 1/5000
0 comments:
Post a Comment