நீங்கள் I.Q கூடியவரா?
அசாத்திய நினைவாற்றல் உடையவரா ? அப்படியானால் இதோ 
MEMORY MATRIX
இது உங்கள் நினைவாற்றலை பரீட்சிக்கும் விளையாட்டு ....திரிரையில் தோன்றும் ஒழுங்கின்றிய உருவங்களை மீதும் நீங்கள் நினைவு படுத்தவேண்டும் முதல் இரண்டு லேவேல்கள் பருவாயில்லை பின்புதான் ஆப்பு இருக்கிறது .....memory matrix 
SPEED MATCH
ஒரு உருவம் திரையில் தோன்றும் அடுத்தடுத்து பல உருவங்கள் தோன்றும் ...அது முன்னைய உருவத்துடன் மேட்ச் ஆகுதா என்பதை குறித்த நேரத்திற்குள் விடையை கொடுத்துவிடவேண்டும் ...இல்லையெனில் அவுட் ...speed match 
WORD BUBBLES
பகுதியான வார்த்தைகள் தரப்படும் மிகுதியை நீங்கள் தான் நிரப்பவேண்டும் ...அதுவும் குறித்த நேரத்திற்குள் ...word bubbles 
COLOR MATCH
இவற்றுள் மிகவும் கடினமானது இதுதான் ...இரண்டு பாக்ஸ் இனுள் வேறு வேறு நிறங்களின் பெயர்கள் தெரியும் ....வேறு வேறு நிறங்களில் தெரியும் 
எழுத்துக்களின் நிறங்களைத்தான் நீங்கள் அவதானிக்க வேண்டும் ...எழுத்துக்களின் கருத்தை அல்ல ....உதாரணமாக 
கலர் என்பதற்கு கீழே  RED  என்று இருக்கும் மீனிங்என்பதற்கு கீழே    BLACK  என்று தோன்றும் கலர் மேட்ச்  என்பதை குறித்த நேரத்திற்குள்  அழுத்திவிடவேண்டும்...இதில் மட்டும் நீங்கள் அதிக  புள்ளிகளை பெற்றால் நீங்கள் பலே ஆசாமிதான் ......color match 
கீழே காட்டப்பட்டுள்ள வார்த்தைகளின்  நிறங்களை விரைவாக வாசிக்க வேண்டும் எழுத்துக்களின் அர்த்தங்களை வாசிக்கக்கூடாது..உதாரணமாக முதலாவதாக ..காணப்படும் வார்த்தையின் நிறம்  கிரீன்  அடுத்தது ரெட் ...முதலாவது எல்லோ இரண்டாவது ரெட் என்று வாசிக்கக்கூடாது ....இது கடினமாக இருப்பதற்கு காரணம் எமது மூளையின் வலது பாகம் நிறத்தை அடையாளம் காணும் இடது பாகம் வார்த்தையின் அர்த்தத்தை இனம் காணும் இரண்டுக்கு மிடையில் ஏற்படும்  குழப்பத்தின் காரணமாக இதை விரைவாக அடையாளம் கண்டு வசித்தல் கடினமாகின்றது ...
LOST IN MIGRATION
இது சற்று சுலபமானது பறவைகளுக்கு சரியான வழிகாட்டினால் போதும்
உங்களது மூளையின் செயற்பாட்டினையும் ஆரோக்கியத்தையும் அதிகரித்துக்கொள்ள ஒரு தளம் உதவி செய்கிறது இத்தளம் மூளையின் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறான விளையாட்டுக்கள் கேள்விகள் மூலம் எமது மூளையின் செயற்பாடுகளை ஊக்குவிக்க உதவுகின்றது....umosity 

0 comments:
Post a Comment