Advertise

Featured Post 5

ஏலியன்ஸ் இருக்கிறார்களா?-1

Written By mayuran on Monday, April 23, 2012 | 8:19 PM

பறக்கும் தட்டுக்கள் இருப்பது உண்மையோ இல்லையோ இவை நமது கவனத்தை வெகுவாக ஈர்த்துவந்துள்ளன பறக்கும் தட்டுக்கள் வேற்றுகிரக வாசிகள்   குறித்து விஞ்ஞானிகளிடம் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது விஞ்ஞானிகள் சிலர் இவற்றை நம்புகிறார்கள் சிலர் மறுத்துவருகிறார்கள் மீடியாக்களில் இடையிடையே இவற்றைபற்றிய செய்திகளை வெளியிட்டு ஒருவித கிளர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறார்கள் பிரபஞ்சத்தில் நமது இருக்கையைப்பற்றி சிந்தித்தோமேயானால் நாம் தனிமையாகவா  உள்ளோம் என்கின்ற உணர்வும் இதைப்பற்றிய தேடல்கள் நம்புதல்களுக்கு காரணம்..




வேற்றுகிரகவாசிகள்  பறக்கும் தட்டுக்கள் போன்றவை சாதாரண மக்கள் வரை அறியப்படுவதற்கும் நம்பப்படுவதற்கும்  இவை இவளவு பிரபலம் ஆவதற்கும்   பல திரைப்படங்கள் தமது பங்களிப்பை செய்துள்ளன  அவதார் ,ஸ்டார்வார்ஸ் ,சூப்பர்மென் ,மென் இன் ப்ளாக்போன்றவை இவை எம்மீது  செயற்கையான  Asperger Syndrome  ஐ ஏற்படுத்துமளவுக்கு தமது பணியை செலுத்தி உள்ளன .  (Asperger Syndrome -People with Asperger's Syndrome might often feel lonely and isolated ) 
வேற்றுகிரக  வாசிகள் என்றதும் எமக்கு ஒரு பொதுவான உருவ  அமைப்புக்கள் விம்பங்களை உருவாக்கி வைத்துள்ளோம் சுருக்கமாக ஒரு சிறிய தியரியையே வைத்துள்ளோம் சராசரி மனித உருவத்துடன் ஒப்பிடுகையில் வித்தியாசமான விகிதசமத்துடன் கூடிய உடற்பகுதிகளை கொண்டிருப்பதாக அவை பெரும்பாலும் இருக்கும் ஆனால் அவ்வாறு இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை வேற்றுகிரகத்தினர் ஒரு ஒளிக்கீற்றாக இருந்து விட்டல் என்ன செய்வது ?
பல விஞ்ஞான புனைகதைகள் திரைப்படங்கள் போன்றவற்றில் இவ்வாறான பல லாஜிக்குகளை பலர் முன்வைத்துள்ளறாக்கள் இவ்வாறான லாஜிக் களில் பலது நாம் நீண்டகாலமாக உயிர்கள் உடற்கூறுகள் பற்றி நம்பி வந்தவைக்கு முற்றிலும் முரணானதாக இருக்கும் ஒரு தனிக்கலமாக இருந்து தனது தேவைக்கு ஏற்றாற்போல் சூழலில் உள்ள மூலகங்களைப்பயன்படுத்தி சடுதியாக உருவத்தை பெற்று பின் தேவை முடிந்ததும் பழைய நிலைக்கு மீளல் இது போன்று பல விடயங்கள் இருக்கின்றன 
இவ்வாறான லொஜிக்களை நமபுவதற்கு சம்பிரதாய சிந்தனையாளர்களுக்கு கடினமாகத்தான் இருக்கும் 


நமது வேற்றுகிரக வாசிகள் பற்றிய கற்பனைத்திறன் நாம் இதுவரை அறிந்த பௌதிகவியல் கோட்பாடுகள் ,உயிரியல் பரிமாணவியல் போன்றவற்றுடன் மட்டுப்படுத்தப்பட்டது 
நமது பௌதிகக்கொட்படுகள் பரிமானவியல்கள் நமது ஞாயிற்று தொகுதியைக்கடந்ததும் செல்லுபடியாகும் என்று 100 % கூற முடியாது ஐன்ஸ்டீன் தியரிகள்  மட்டும் செல்லுபடியாக்கலாம் காரணம்  அவரது தியரிகளைத்தான் பிரபஞ்சத்தில் இருக்கும் எந்த ஒரு இடத்திற்கும் பிரபஞ்சமல்லாத இடத்திற்கும் செல்லுபடியாகும் 
இவ்வாறு ஞாயிற்று தொகுதியத்தாண்டியதும்  விஞ்ஞானத்தின் அடிப்படை அறிவியல் தூண்களே ஆட்டம் காணும் பொழுது சாதாரண மனிதர்களின் ஏலியன்ஸ் ஐ பற்றிய கற்பனை திறனும் வரையறைக்குட்ட்பட்டதுதான் ஆனால் இருப்பினும் இவ்வாறான தடைகளைத்தாண்டி தனது அசத்திய கட்டுப்படற்ற சிந்தனையால் அதிக தூரம் சென்று கொண்டிருப்பவர்தான் ஸ்டீபன்ஹாக்கிங்  முதலில் வேற்றுக்கிரகவாசிகள் அதாவது ஏலியன்ஸ் இருப்பதற்கு ஒரு சாதாரணமான நம்பக்கூடிய ஒரு லொஜிக் ஐ பார்ப்போம் 




பிரபஞ்சத்தில் அண்ணளவாக 170 பில்லியன் கலாக்ஸ்சிகள் உள்ளன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் சாதாரணமாக ஒரு கலாக்ஸ்சியின் விட்டம் 100,000 இல் இருந்து 120,000 ஒளி வருடங்கள்  அதாவது ஒரு கலாக்ஸ்சி ஐ ஒளி 300,000,000 m/s நில் கடந்து செல்ல 100,000 இல் இருந்து 120,000 வருடங்கள் தேவை  ஒரு கல்க்ஸ்சிஐ 100 m  கோடாக வரைந்தோமே ஆனால் எமது ஞாயிற்றுதொகுதியை 1mm இக்கு குறைவான கோடாகவே வரைய முடியும் அப்படியாயின் 170 பில்லியன் கலாக்ஸ்சிஐக்கொண்ட  பிரபஞ்சத்தில் நமது உலகத்தில் மட்டும்தான் ஜீவராசிகள் இருக்கின்றார்கள் என்று நம்புவோமாயின் அதுதான் மிகப்பெரும் அபத்தமாக இருக்க முடியும் 
stephen hawking


வேற்றுகிரக  வாசிகள் பறக்கும்தட்டுக்கள் பற்றிய விடயங்களில் அதிக பிரபலமான கருத்துக்களையும் எதிர்வுகூறல்களையும் தெரிவித்தவர் ஸ்டீபன்  ஹாக்கிங் என்ற விஞ்ஞானி வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுக்கள் போன்றவற்றை மிகவும் நம்புகின்றவர்களில் இவரும் ஒருவர் 
ஐன்ஸ்டீன்னுக்கு அடுத்தபடியாக தற்பொழுது புகழின் உச்சியில் இருப்பவர் 
இவர் வேற்றுக்கிரக வாசிகளைப்பற்றி குறிப்பிடும் போது ஈர்ப்பு விசை காலநிலை வேறுபாடுகள் சூழல் கிடைக்கும் சத்தி முதல்கள் போன்றவை உயிரின் பரிமான வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும் என்று கூறி உள்ளார் வேற்றுக்கிரக வாசிகளுக்கு நாம் பயன்படுத்தும் புலனுறுப்புக்கள் இல்லாமல் இருக்கலாம் அதற்கு மாற்றீடான வேறு உறுப்புக்களை அவை பயன்படுத்திக்கொல்ள்ளலாம் நாம் நமது சத்திதேவைக்குப்பயன்படுத்தும்
முதல்களை விட மிகவும் மாறுபட்ட முதல்களை பயன்படுத்தலாம் அவர்கள் பாரிய விண்வெளிகப்பல்களில் பிரயாணம் செய்துகொண்டிருக்கலாம் 


அவர் மேலும் கூறியது...
ஏலியன்ஸ் இருக்கிறார்கள் என்பது எனது கணித மூளைக்கு பகுத்தறிவிற்கு சத்தியமாகவே படுகின்றது 
அவர்கள் தமது கிரகத்தில் ஏற்கனவே இருந்த வளங்களை பயன்படுத்தி முடித்துவிட்டு பின் அவற்றிற்காக நடோடிபோல் திரிந்து நமது பூமியை வந்தடையலாம்  எனவே அவர்களை வரவேற்க ஊக்கப்பட வேண்டாம் 
அவர்கள் நமக்கு நேசக்கரம் நீட்டி உறவடுவர்கள் என்று என்ன வேண்டாம் 
என கூறி உள்ளார் அவர் பயப்படும் படியான ஒரு விடயத்தையும் கூறி உள்ளார்
"If aliens ever visit us, I think the outcome would be much as when Christopher Columbus first landed in America, which didn't turn out very well for the Native Americans."
ஒரு வேளைஅவர்கள் பூமியில் காலடி வைக்கும்போது கொலம்பஸ் அமெரிக்காவில் காலடி வைக்கும் போது அங்கு வாழ்ந்த பழங்குடியினருக்கு ஏற்பட்ட   நிலை நமக்கும் ஏற்படலாம் 
வேற்றுகிரகத்தவர் கண்களில் படாமல் இருப்பதற்கு நாம் முடிந்த அளவில் முயற்சி செய்ய வேண்டும் என கூறி உள்ளார் (இவை discovery சனலில் into the universe with stephen hawking என்ற தொடரில் ஹாக்கிங் ஆல் கூறப்பட்டவை )


அதாவது எமது பூமியில் உள்ள அவர்களுக்கு தேவையான வளங்களுக்காக ஒட்டுமொத்தமாக எம்மை போட்டுத்தள்ளிவிட்டு அவர்கள் தமக்கு தேவையானவற்றை எடுத்து செல்லலாம் எமது தொழில்நுட்பங்கள் அவர்கள் முன் பயனற்றுப் போகக்கூடும் ஒட்டு மொத்த பூமியையும் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவதற்கு அவர்களுக்கு சிலமணிநேரங்கள்  மட்டுமே தேவைப்படலாம் 


ஆனால் மற்றுமொரு பார்வையும் உள்ளது  வேற்றுக்கிரகத்தினர் எம்மை விட அதிக தொழில்நுட்பம் வாய்ந்தவர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை எம்மை விட குறைந்த தொழில்நுட்ப அறிவினராயோ எமக்கு சமனான அறிவினராயோ நாம் தேடுவது போன்று அவர்களும் வேறு உயிர்கள் இருக்கின்றதா என தேடுபவர்களாக இருக்கக்கூடும் ஆனால் துரதிஷ்டவசமாக அதற்கான சாத்தியக்கூறுகள் மிகக்குறைவு 


அப்படியானால் ஸ்டீபன் ஹாக்கிங் என்ன சொல்ல வருகிறார் அவர்கள் வரும் முன்பதாகவே நமது பூமியில் இருக்கும் வளங்களை தீர்த்துவிடவேண்டும் என்கிறாரா?
நமக்கு நாம் எனென்ன வளங்களை பயன்படுத்துகின்றோம் என்பது மட்டுமே தெரியும் ஏலியன்ஸ்களின்  பார்வையில் எது அவர்களுக்கு தேவையான வளங்களாக இருக்கும் என்று எமக்கு தெரியாது ஏனெனில் அது ஏலியன்டெக்னாலஜி ஒரு வேளை அவர்களுக்கு தேவைப்படும் வளமாக கடல் இருந்துவிட்டால் ஜோலி முடிஞ்சுது ...(கடலை எப்படி தீர்த்துக்கட்டுவது ?)


ஏலியன்ஸ் தொடர்பான ஸ்டீபன் ஹாக்கிங்கின் கருத்துக்களுக்கு மறுப்புத்தெரிவிக்கும் விஞ்ஞானிகளும் உள்ளனர் அவர்களுள் ஒருவர்தான் pauldavies  இவர் இயல்பியல் துறை வல்லுநர் 
Paul Charles William Davies
இவரது வாதங்கள் பின்வருமாறு அமைகின்றன 
நமது பூமி தோன்றி 4.5 பில்லியன் வருடங்கள் ஆகின்றன ஆனால் பிரபஞ்சம் தோன்றி 13.75 பில்லியன் வருடங்கள் ஆகின்றன அதாவது நமது பூமி தோன்றுவதற்கு முன்பே பிரபஞ்சத்தில் பல நட்சத்திரங்கள் கோள்கள் நாம் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் ஏலியன்ஸ்கூட்டங்கள் என்பன தோன்றி இருக்கும் அப்படித்தோன்றி தமக்கென பிரத்தியேகமான விண்வெளி ஓடங்களை தயாரித்திருக்கும் ஏலியன்ஸ் கூட்டம் நாம் தோன்றி (5 பில்லியன் வருடங்கள் )இவ்வளவு தொழில்நுட்பத்துடன் வளருவதற்கு முன்பாகவே அவர்கள் அவர்களுக்கு தேவையான வளங்களை எடுத்து சென்றிருக்க முடியும் 


நாம் இவ்வளவு அறிவுள்ள மனிதர்களாக வளர்ந்தபின்னர்தான் அவர்கள் வந்து எம்மை அழித்து வளங்களை  எடுத்துசெல்ல வேண்டும் என்று என்ன அவசியம் ? 
ஸ்டீபன் ஹாக்கிங் கூறுவது போல் அலியான்ஸ் விண்வெளி ஓடங்களில் இங்கு வருவார்கள் என்பதை நம்ப முடியாதுள்ளது ஏனெனில் நமது அண்டை நட்சத்திரமே 4.5 லைட் இயர் தூரத்தில் உள்ளது எனவே அவர்களும் ரேடியோ அலைகளிநூடகவே தொடர்புகொள்ள முயற்சி செய்வார்கள் 



அப்படியே அவர்கள் இங்கு வந்தாலும்  அவர்கள் நம்மை சூரயடுவர்கள் என்று எண்ணுவது மனித சிந்தனையை ஒத்தது அவர்களும் எம்மைபோன்ற குணமுள்ளவர்களாக இருப்பின் எப்பொழுதோ தம்மை தாமே அழித்துக்கொண்டிருப்பார்கள் 
இவ்வாறு அவரது வாதம் செல்கிறது 


இவர்கள் தமக்கிடையே எதிர்வாதம் புரியும்போது எச்சரிக்கையுடனேயே கருத்துக்ககளை வெளியிடுகின்றார்கள் 


ஏலியன்ஸ் இருக்கிறார்கள் என்று நிரூபிக்கும் டிரேக் சமன்பாடு டன் அடுத்தபதிவு 


தொடரும் ...................





0 comments:

Post a Comment