[இதன் முன்னைய பகுதிக்கு யாழ்ப்பாண இராஜ்ஜியம்-03]
நண்பர்களே இதுவரை கட்டுரையை வாசித்த நீங்கள் இலங்கையில் தமிழரின் தோற்றமும் இருப்பும் என இக்கட்டுரைக்கு தலைப்பிட்டிருக்கலாம் என நிச்சயம் யோசித்திருப்பீர்கள். உங்களில் தவறில்லை ஆனால் எந்த ஒரு இராட்சியமும் திடீரென முளைத்து விட முடியாது. அந்த வகையில் கிபி 13 ஆம் நூற்றாண்டு தோற்றம் பெற்றதாக கருதப்படும் ஆரிய சக்கரவர்த்திகள் தான் இலங்கை வாழ் தமிழரில் முதல் அரசர்களா என்றால் ஆம் என்றோ இல்லை என்றோ உறுதியாக கூறமுடியாதபடி தொடர்ச்சியாக நடந்த படைஎடுப்புக்களாலும் குடிப்பெயர்வுகளாலும் மன்னர் வீழ்ச்சி எழுச்சிகளாலும் எங்கள் வரலாற்று சான்றுகள் கிடைக்க பெறவில்லை அல்லது அழிக்க அல்லது மறைக்கப் பட்டு விட்டது. எனவே அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கும் சான்றுகளை ஒன்று திரட்டி என் கல்வியறிவுக்கு ஏற்ற வகையில் தர முயன்றிருகின்றேன். அந்த வகையில் தமிழர் ஆட்சி பற்றி இன்னும் நாம் பார்ப்பது தகும். இராவணனின் ஆட்ச்சியின் பின்னர் அவனது இலங்காபுரி கடல் கோளால் மூழ்கிப்போயிற்று என விட்டிபொத் என்ற சிங்கள நூல் குறிபிடுவதுடன் அது கிமு 2367 இல் நிகழ்ந்ததாய் சொல்லுகிறது. இராஜவலிஜ எனும் சிங்கள நூலும் புத்தரின் காலத்திற்க்கு 1884 ஆண்டுகளுக்கு முன்னர் அவ் நகரம் கடலால் மூழ்கி போயிற்று என கூறுகின்றது. [புத்தரின் காலம் 483 ,இக்கடல்கோள் அதற்க்கு 1884 ஆண்டுகள் முதல் நிகழ்ந்ததால் இது நிகழ்ந்த காலபகுதியும் 483+1884= கிமு 2367 எனலாம்] எனவே சிங்கள் நூல்களும் இலங்காபுரி பற்றி கூறுவதால் இலங்காபுரி என்னும் ஒரு தலைநகர் இருந்தது என்றும் அதன் தலைவனாக இராவணன் இருந்தான் என்பதிலும் ஐயுறவு இல்லை.
நாகதீபத்திட்க்கு புத்தரின் விஜயம்
இலங்கைக்கு புத்தரின் வருகை பற்றி மகா வம்சமும் மணிமேகலையும் கூறுவது யாதெனில் நாகதீபத்தில் மகோதரநாகன் ,சூலோதரநாகன் எனும் இரு நாக அரசவழியினரிடையே ஏற்பட்ட இரத்தினம் பதித்த சிம்மாசன ஆட்சி போட்டியை தீர்பதற்காக புத்தர் நாகதீபிட்க்கு விஜயம் செய்தார் என்றும் இன்நாகர்களின் உறவினர்களான கல்யாணி எனபட்ட களனியில் வசித்துவந்த நாகர்களின் வேண்டுதலுக்கு இணங்க மீண்டும் புத்தர் இலங்கைக்கு விஜயம் செய்தார் என்றும் சொல்லுகின்றன. இச்சான்றுகள் எமக்கு பகர்வது யாதெனில் இலங்கையின் பூர்வ குடிகள் பிறமத எதிர்ப்பு கொள்கையை கடைபிடிக்கவில்லை என்பதும் புத்த மதம் பால் ஈர்ப்புற்றிருந்தனர் என்பதுமாகும்.
ஈழம் என்னும் பெயரும் அதுசார் விளக்கமும்
ஈழம் என்னும் பெயர் எவ்வாறு உருப்பெற்றது என்பதுபற்றி பலவிதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏழ்பனை நாடு என்ற தமிழக நிலப்பரப்பின் பிரிவுற்ற பகுதியே சொல்திரிவால் ஈழம் என ஆயிற்று என்பது செ.இராசநாயகம் அவர்களின் கருத்தாகும். மேலும் ஈழர் என்னும் ஆதிகுடியினர் வாழ்ந்த இடமாதலால் அவர்பெயர் கொண்டே அவ்விடமும் ஈழம் எனப் பெயர் பெற்றது என அ.செல்வநாயகம் அவர்களின் கூற்றாகும். மேலும் அனுராதபுர சிவாலயக்கல்வேட்டு ஒன்றில் சிறிசங்கபோ 3 ஆம்
மன்னனின் [கிபி 702] காலத்தில் ஒரு விளக்கிட்காக வழங்கப்பட்ட 30 ஈழத்துக் காசுகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கள மன்னர்களின் கஹவனுக் காசுகளே இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஓ.எம்.ஆர்.சிறிசேன கருதியம்பியுள்ளார். ஈழம் என்னும் பெயர் முழு இலங்கையையும் குறித்ததால் இவர் கூறிய கருத்தும் ஏற்கத்தக்கது. மேலும் தேவாரங்கள் தொடக்கி சோழர் கால கல்வெட்டுகள் வரை ஈழம்,ஈழம் கொண்ட,ஈழ மண்டலம் எனும் சொல்பிரயோகம் மூலம் முழு இலங்கையும் ஈழம் எனும் பெயர் கொண்டு குறிக்கப் படுகிறது.
அனுராதபுரத்தில் காணப்படும் சிவாலய எச்சங்கள்
இராசநாயகம் குறிபிட்டதுபோல் ஏழ்பனை நாடு என்பதிலிருந்து ஈழம் எனும் பதம் தோன்றியிருப்பின் முந்தைய இலங்கை முழுவதும் தமிழர் வசமிருந்தது என்பது சாலத் தகும். மேலும் ஈழம் என்பது தமிழ் சொல் ஆதலால் அது தமிழர் வாழ் பிரதேசத்தை குறித்திரல் வேண்டும் ஆனால் முழு இலங்கையும் தமிழர் செறிந்து வாழ்ந்ததால் முழு இலங்கையும் ஈழம் என அறியபட்டது என்பதும் ஏற்புடையவாதமே. மேலும் தொலமி எனும் கடலோடி வரைந்த இலங்கைப்படத்தில் வட மேற்க்கு வடக்கு வடகிழக்கு பகுதியூடாக தென்கிழக்கு பகுதி வரை நாகர் வாழ்ந்த இடமாக காட்டியுள்ளார்.தெற்கில் நனிகிரி, நாகதும என்ற இடங்களையும் காட்டி உளார். [நாகர்களதும் தமிழர்களதும் இனங்கள் கலந்து போனதுடன் நாகர் என்னும் பெயரால் அறியப்பட்டவர்களும் தமிழரே என்பது பலரால் ஏற்கப்பட்ட கருத்து]
தொலமியால் வரையப்பட்ட இலங்கைப் படம்
இவ்வாறு முழு இலங்கையிலும் பரவி வாழ்ந்த தமிழர் தம் வாழ்வாதார மற்றும் பொருளாதார நலன் கருதி வடக்கு நோக்கி நகர்ந்ததால் ஈழத்தின் எல்லை குறுகியது என்பதுடன் விஜயன் வருகையும் இதற்க்கு முக்கிய காரணம் ஆயிற்று. எனவே தமிழர் வாழ் பகுதிகளை இனம் கண்ட பிளினி " இலங்கையின் நடுப்பகுதிக்கும் தாய் நாட்டிற்கும் இடைபட்ட தீபகட்பமே ஈழம்" என்றதுடன் ரெனட்டும் வட குடா நாட்டை ஈழம் என்கின்றார்.
எல்லாளன் சேனன் குத்திகன் முதலிய இலங்கைவாழ் தமிழ் மன்னர்கள் பற்றியும் அவர்களின் ஆட்சி பற்றியும் விஜயன் எவ்வாறு கள்ளத்தனமாக ஆட்சியை கைப்பற்றியதை மகாவம்சமும் குறிபிடுவது பற்றியும் அடுத்த பதிப்பில் விரிவாய் பார்க்கலாம்.
தொடரும்...............................

0 comments:
Post a Comment