Advertise

Featured Post 5

சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-03

Written By mayuran on Thursday, April 19, 2012 | 8:28 AM

[இதன் முந்தய பகுதிக்கு சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-02]
மருத்துவபடிப்பும்  சேயும் 
எர்னஸ்டோ குவேரா தன் சிறு வயது முதல் கொண்டு பொறியியல் துறையிலேயே ஈடுபாடு கொண்டதாக அறியவருகின்றது மட்டுமல்லாது   பொறியியட்துறையில் தன்னை பதிவு செய்திருந்தவரும் கூட அப்படியானால் எப்படி அவர் திடீரென மருத்துவத்துறையை தெரிவு செய்தார் என்பதட்க்கு ஒருசில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. சே மீது அக்கறை கொண்டிருந்த அவரது அன்பு பாட்டியாரான அனாலிஞ்  திடீர் நோய்வாய் படலும் அதால் அவரடைந்த மரணமும் சே தன் உயர் நிலை படிப்பை தொடங்கிய காலப்பகுதியிலேயே நிகழ்ந்தபடியால் தன் பாட்டியாரை போன்ற நோய்க்கு எவரும் ஆளாக கூடாது என்பதற்காக குவேரா மருத்துவத்துறையை தெரிவு  செய்தார் எனபடுகிறது. ஏனெனில் சே தன் பாட்டியார் நோய் வாய் பட்டபோது அவரை அருகிலிருந்து கவனித்ததுடன் வேண்டிய உதவிகளையும் செய்தார் இருந்தபோதும் ஏற்பட்ட பாட்டியாரின் மரணம் பெரிதும் சேயை மனதளவில் பாதித்திருந்தது எனவே தான் அவர் மருத்துவத்துறையை தெரிந்தார் என்பது பெரும் பாலரால் ஏற்கப்பட்ட கருத்து. மேலும் இன்னொரு   காரணமாக சேயின் தாயாரின் நோய்வாய்படலும் சொல்லப்படுகிறது. இதுவும் ஏற்ககூடியதே. மேலும் ஒரு சாரார் சே தன்னை பாதித்திருந்த ஆஸ்துமா நோயின் அவஸ்தையால் தான் மருத்துவதுறையைத் தெரித்தார் என்கின்றனர். மேலும் சே மேற்கொண்ட பெரும்பாலான மருத்துவ ஆய்வுகளை தோல் சம்பந்தமான மற்றும் ஒவ்வாமை சம்பந்தமானவையாகவே கொண்டிருந்தார்.எது எப்படியோ மேட் கூறப்பட்ட காரணங்கள் அத்தனையும் அவர் ஒரு சேவை மனப்பாங்கை கொண்டவர் என்பதையே காட்டி நிற்கின்றன. 

ஆனால் சே வகுப்புக்களுக்கு ஒழுங்கற்ற முறையிலேயே சென்றிருந்த போதும் பரீட்சையில் மதிபெண்கள்  பெறத்தவறுவதில்லை. ஆனால் சேவை பொறுத்தவரை அவர் தன் வாழ்கையின் இலக்கு என்பதாக மருத்துவத்துறையை தெரிந்ததில் திருப்தி கொண்டிருக்கவில்லை. இதனாலேயே தன் வாழ்கையின் திருப்தி தரக்கூடிய இலக்கு எது என்பதை   தேடி அலைந்து திரிந்தார் என்பதும் அவர் தன் காதலை கூட தடையாய் கருதினார் என்பதும் அவரது நாட்குறிப்புக்களை வாசித்தவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.
சேவின் காதலும் அதன் முறிவும்   
இயற்கையை நேசித்தவர் மட்டுமல்லாது கவிதிறனிலும் சே திறமையானவர் என்பது அவரது நாட்குறிப்புக்களை படித்தவர்களால் மறுக்கவே முடியாத உண்மை. பெரும்பாலான வரிகள் ஏன் ஒவ்வொரு வரியுமே கவிதை நயத்துடனேயே அமைந்திருந்தன. மேலும் வேடிக்கைகளிலும் கேளிக்கைகளிலும் சே ஈடுபாடுடையவர். எர்னஸ்டோ குவேரா தன் இளம் வயதில் மிக்க அழகுள்ளவராகவும் பார்ப்போரை கவரும் தோற்றமுடையவராயும் இருந்தார். இதனால் அவருக்கு பெண் நண்பர்கள் இருந்ததுடன் சே நேர்மையானவராயும் இருந்தார். 
                                             22 ஆம் வயதில் சேகுவேரா 

சேவின் காதல் வாழ்வில் மிக முக்கியமான ஒருவராக சிச்சினா என்னும் பெண் கருதப்படுகின்றார். சேயால் மிகவும் நேசிக்கப்பட்டசேயை மிகவும் நேசித்த இப்பெண் சேயை விட வசதியான குடும்பத்தை சார்ந்தவர். இவர்கள் இருவரின் முதல் சந்திப்பின் போதே ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டுவிட்டனர். முதல் சந்திப்பில் இவர்கள் இருவரும் பேசிக்கொண்டது புத்தகங்களையும் வாசிப்பையும் பற்றித்தான். சேயால் எழுதப்பட்ட மோட்டார் சைக்கிள் நாட்குறிப்பில் சே தன் பயணங்களின் ஆரம்பத்தின் போது தான் திரும்பி வருவேன் என்பதற்க்கு ஆதாரமாக இவருக்கு ஒரு நாய்க்குட்டியை பரிசளித்திருந்ததுடன் அதற்க்கு comeback எனப் பெயரும் சூட்டியிருந்தார். ஆனால் காலப் போக்கில் சே தன் இலட்சியங்களுக்கு இக் காதல் தடையாய் அமையும் எனப் பயந்திருந்தார். மேலும் தன் சுதந்திரமான பயணங்களை காதல் தடுப்பதை சே விரும்பியிருக்கவில்லை. சிச்சினாவிற்க்கு எழுதிய ஒரு கடிதத்தில் "நான் உன்னை எந்த அளவிற்க்கு நேசிகின்றேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் எனது அகச்சுதந்திரத்தை உனக்காக தியாகம் செய்யமுடியாது அது என்னையே தியாகம் செய்வதாக இருக்கும் நான் உன்னிடம் ஏற்கனவே கூறியது போல  இந்த உலகத்திலேயே மிக முக்கியமான மனிதன் நான்தான்.........." என்று குறிப்பிட்டிருந்தார். இது சே தன்னை குறித்து எவ்வளவு தூர நோக்கை கொண்டிருந்தார் என்பதற்க்கும் அவரது வாழ்வின் நோக்கம் என்ன என்று அறிவதில் ஆர்வமாய் இருந்தார் என்பதையும் எடுத்துக் காட்டுவதாக இருகின்றது. சே யை பற்றி சிச்சினா கூறும் போது அவர் இலட்சியத்தை அறிவதிலும் வீர சாகசங்கள் செய்வதையுமே பெரிதும் விரும்பினார் எனும் பொருள் பட கூறியிருந்தார். இதுவே இவர்களின் காதலுக்கு ஒரு முற்றுப்புளியையும் இட்டு வைத்தது எனலாம்.
                                        தொடரும்......................... 
தவறிருந்தால் கூறுவதுடன் கருத்துகளை பகிருங்கள்.
இப்பதிவின்  நீளம் சற்று குறை வானதே அதற்காக மன்னியுங்கள்  

[இதன் அடுத்த பதிபிட்க்கு   சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-04]             

0 comments:

Post a Comment