Advertise

Featured Post 5

கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் - 03

Written By mayuran on Sunday, April 22, 2012 | 10:44 PM



     ஹார்டி உடனே ராமானுஜனைக் கேம்பிரிட்ஜுக்கு வரும்படி கடிதம் எழுதிய போதும்; சென்னைப் பல்கலைக்கழகமும் இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், Trinity கல்லூரியும் அவருக்கு உதவி நிதி வழங்க முன்வந்த போதும் ; ராமானுஜனால் உடனே நாடு விட்டு நாடுபோக முடியவில்லை என்றும் அது ஏன் என்பதை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள் என்றும் கூறியிருந்தேன். [சென்ற பதிவைக் காண இங்கே கிளிக் செய்யவும்]



    ராமானுஜன் பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று முன்பே கூறியிருந்தேன், அதுதான் அவருக்குத் தடையாக இருந்தது. அக் காலத்திலே, பிராமணர்கள் கடலைத் தாண்டிச் செல்வதென்பது மாபெரும் பாவமாகக் கருதப்பட்டது. பழமையான பண்புகளில் ஊறியிருந்த அவரது தாயார், அவரது பயணத்தைக் கடுமையாக எதிர்த்தார். சுமார் ஒரு வருடமாக இங்கிலாந்துக்குச் செல்வதா, வேண்டாமா என்று பெரும் மனப் போராட்டம் நடத்தினார் ராமானுஜன். தனக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை அவரால் இலகுவாக உதறித்தள்ளிவிட முடியவில்லை. 

      இறுதியாக 1914ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் திகதி தன் தாயின் பலத்த எதிர்ப்பைப் புறந்தள்ளி இங்கிலாந்து செல்லக் கப்பலேறினார் ராமானுஜன். ஆனாலும் தன் தாயிடம் 'எக்காரணம் கொண்டும் மாமிசம் புசிக்க மாட்டேன்' என்ற உத்தரவாதத்தையும் வழங்கிவிட்டே கப்பலேறினார். அவர் ஏப்ரல் 14ந் தேதி லண்டனை அடைந்தார். அங்கே E.H.Neville தன் காருடன் காத்திருந்தார். நான்கு நாட்களின் பின்னர் கேம்பிரிட்ஜில் உள்ள E.H.Neville யின் வீட்டை அடைந்த ராமானுஜன் உடனடியாகவே ஹார்டியுடன் இணைந்து தன் பணியைத் தொடங்கினார். 6 வாரங்களின் பின்னர் Neville யின் வீட்டிலிருந்து வெளியேறி ஹார்டியின் room இற்கு அருகிலேயே room எடுத்து தங்கினார் ராமானுஜன்.
                                                              ஹார்டி-ராமானுஜன்

   அவர் கேம்பிரிட்ஜில் ஹார்டியுடன் பணியாற்றிய அடுத்த நான்கு ஆண்டுகளும் (1941-1918) கணித உலகுக்குப் பொன்னான ஆண்டுகள்தான். ஹார்டியின் சீரிய பொறிநுணுக்கமும் ராமானுஜனின் நூதன கணித ஞானமும் இரண்டறக்கலந்து சுமார் 3000 இற்கும் மேற்பட்ட கணிதத் தேற்றங்கள் உருவாகின. இருவரும் Arithmatic Functions பலவற்றை ஆங்கில, ஐரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். [ 27 ஆய்வுக் கட்டுரைகள் ராமானுஜனால் வெளியிடப்பட்டன, அவற்றில் 7 கட்டுரைகள் ஹார்டியுடன் கூட்டாக எழுதியவை ] அவர்கள் வெளியிட்டவற்றில் Riemann Series, Elliptical Integrals, Hyper Geometric Series, Fuctional Equations of Zeta Functions மற்றும் ராமானுஜன் தனியாக ஆக்கிய Divergent Series ஆகியவை கணிதத்துறையில் குறிப்பிடத்தக்கவை.
ராமானுஜனைப் பொறுத்தவரை எண்கள்தான் அவர் உலகம். எண்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதே அவரது பொழுதுபோக்கு. ஒரு சந்தர்ப்பத்தில் ஹார்டியும் ராமானுஜனும் உரையாடும் போது, ஹார்டி; தான் வந்த taxi இலக்கமான 1729 என்பது சுவாரஸ்யமற்ற/சாதகமற்ற இலக்கம் என்றும் 
அந்த டாக்ஸியில் தான் அலைக்கழிந்ததாகவும் கூறினார். உடனே குறுக்கிட்ட ராமானுஜன், இல்லை அவ்வெண் சுவாரஸ்யமானது என்று கூறி, அவ்வெண்ணை இரு வெவ்வேறு வழிகளில் இரு கனங்களின் கூட்டுத்தொகையாக எழுதலாமென்றார் !! ஒரு இலக்கத்தைக் கூறியவுடனேயே அந்த இலக்கத்தைப் பற்றி விலாவாரியாக விளக்குமளவுக்கு ராமானுஜனுக்கு  எண்களிடம்  பரிச்சயம் இருந்தது. இவர்களது நினைவாக 1729 என்ற இலக்கமே Hardy–Ramanujan number என்றே இன்று அழைக்கப்படுகின்றது.
     எண்களின் பண்புகளைப் பற்றிய number theory இலும் complex number இலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியல்துறை முதல் கணனித் துறையின் உயர்மட்டம் வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

{எதைக் கூறி அடுத்த பதிவில் எதிர்பாருங்கள் என்று சொல்வதென்று தெரியவில்லை. வேண்டுமானால் உங்களுக்கு ஒரு ஜோசியம் சொல்லட்டுமா? அடுத்த பதிவில் ராமானுஜன் இறக்கப்போகிறார் !! Wait and See..........}

{தொடரில் ஏதேனும் பிழைகள் இருந்தால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்}

0 comments:

Post a Comment