Advertise

Featured Post 5

Things Invented by Women

Written By mayuran on Thursday, March 8, 2012 | 5:45 AM

20 ஆம் நூற்றாண்டின்   முடிவில் 10 % ஆன பெண் கண்டுபிடிப்பாளர்கள் மட்டுமே  பரிசளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளர்கள் கடந்த சில நூற்றாண்டுகளின் புகழ் பெற்ற கண்டுபிடிப்புக்களை எடுத்துக்கொண்டால் அதில் நிச்சயமாக் பெண்களின் பெயர்கள் இருக்கும் பொதுவாக ஒருபெண் தனது கண்டுபிடிப்புக்களை வெளி கொண்டுவருவதற்கு அதிக அளவு தடைகளை தண்டவேண்டி இருக்கிறது 
1700 களில் அமெரிக்காவிலும் பெண்கள் விஞ்ஞான கற்கைகளை கற்பது விரும்பத்தகாததாக இருந்தது 1700 களில் அமெரிக்காவில் ஒரு சட்டம் இருந்தது 
பெண்களுக்கு எந்த ஒரு சொத்தும் உரிமையாக இருத்தல் கூடாது என்பதுதான் அது  இவர்கள் இக்காலத்தில் தமது கண்டுபிடிப்புக்களையோ அல்லது ஒரு உள்ளநாட்டு தயாரிப்பையோ வெளியிட நேர்ந்தால் தமது தந்தையின் பெயரிலோ அல்லது கணவரின் பெயரிலோதான் உரிமம் பெற்று வெளியிடப்படவேண்டியிருன்தது 
இவற்றை தாண்டி தனது தயாரிப்பிற்கு தனது பெயரிலேயே உரிமம் பெற்ற  முதல் அமெரிக்க பெண்  Mary  kies  1809 இல் பெற்றார்  
நடைமுறையில் நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பலவிடயங்களை பெண்கள்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் 

இங்கு சில பெண் கண்டுபிடிப்பாளர்களையும்   அவர்களது கண்டுபிடிப்புக்களையும் நோக்குவோம் 

Circular saw
18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த "Tabiththa babbitt " என்றபெண்தான் இதை கண்டுபிடித்தார் இது ஒரு வட்ட தட்டு உருவான வாள்
இவர் ஒரு நெசவாளர் 1810 இல் இவர் 2  மனிதர்கள் வாள் ஒன்றை பயன்படுத்தி மரம் அரிவதை அவதானித்தார் இருவரும் இருதிசையிலும் வாளை   இழுத்து அரிந்தார்கள் வாளின் முனை ஒருபக்கமாக சரிவாக இருந்ததால் ஒரு பக்கமாக  அரியும்போது மாத்திரமே  வாள்  வெட்டியது மற்றைய பக்கம் இழுக்கும் போது சக்திச்ச்செலவு மாத்திரமே மிஞ்சியது இதை அவதானித்து 
கண்டு பிடிக்கப்பட்டதுதன் circular  saw  


Liquid  paper 

டிபேஸ் என நாம் பயன்படுத்தும் உபகரணத்தை போன்றதுதான்   இந்த liquid paper இதைக்கண்டு பிடித்தவர்  "Bette Nesmith Graham  "  என்ற பெண் இவர் ஒரு டைபிஸ்ட்  தனது வேலையில் பல தவறுகளை செய்துவிடுவார் 1950 இல் மின்சாரத்தில் இயங்கும்  typewritter அறிமுகப்படுத்தப் பட்டது இதன்  கார்பன் ரிபனால் பதியப்பட்ட எழுத்துக்கள் திருத்துவதற்கு கடினமாக இருந்தது ஒரு நாள் grahm ஒரு பேங்க் யன்னலில் சிலர் ஓவியம் வரைவதை அவதானித்தார் அவர்கள் வரையும்போது 
தாம் செய்த தவறை சரி செய்ய அதன்மேல் வேரொரு வர்ணத்தை  தீட்டி தவறை சரி செய்தார்கள் இதுதான் grahm  ஐ இக்கண்டு பிடிப்பிற்கு தூண்டியது 
தனது சமையல் அறையில் கிரைண்டேரில் tempera பெயிண்ட் ,டை ,நீர் என்பவற்றை சேர்த்து அரைத்துத்தான்   இதை கண்டுபிடித்தார் 
தனது அலுவலகத்தில் இதை விநியோகித்தார் அலுவலகப்பணிகளை விட அதிகநேரம் தனது கண்டுபிடிப்பை விநியோகிக்க செலவிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டார் 1958 இல் தனது கண்டு பிடிப்பிற்கு காப்புரிமை பெற்றார் 
   

தொடரும் ...........


0 comments:

Post a Comment