Advertise

Featured Post 5

யாழ்ப்பாண இராஜ்ஜியம்-02

Written By mayuran on Wednesday, March 7, 2012 | 11:06 AM

விஜயன் வருகை
(இதன் முன்னைய பதிவைப் பார்ப்பதற்கு யாழ்ப்பாண இராஜ்ஜியம்-01 )

விஜயன் வருகை இலங்கை வரலாற்றில் முக்கிய பங்கு பகிப்பதால் அதையும் நாம் நோக்க வேண்டி உள்ளது.விஜயனும் அவனது தோழர்களும் மகாதித்தா என்னும் மாதோட்ட   மாபெரும் துறைமுகத்திலேயே கி.மு 5  ஆம் நூற்றாண்டு    வந்திறங்கியதாக  பலரது கருத்து. மகாதித்தா என்பது பாளி மொழி என்றால் மாபெரும் துறைமுகம் என்பது தமிழ் மொழி. [மாகாவம்சதில்  தம்பபன்னி எனக் குறிபிடப்பட்டுள்ள இவிடத்தை பலர் பல விதமாக இனம் காண்கின்றனர்  மாதோட்டதுறைமுகம்,என்றும்  வடமேற்கு கரையிலுள்ள கதம்ப  நதி அருகிலுள்ள இடம் என்றும்  தென்னிலங்கையிலுள்ள துறைமுகம் என்றும்  பல கருத்துக்கள் உள்ளன. ஆனால் பரணவிதாரண எனும் சிங்கள ஆய்வாளர் "விஜயன் வருகைக்கு முனரே முத்துக்குளித்து வந்த மக்கள் கதம்ப நதியிற்கு தம்பபன்னி  என்னும் பெயர் இட்டிருக்கலாம் "  என்று கூறியதும் முக்கியமானது எது என்னமோ விஜயன் வருகைக்கு முன்னம் பல நாட்டு வணிகம் நிகழ்ந்த துறைமுகம் மாதோட்டதுறைமுகம் என்பது உறுதி.மேலும் பூர்வ குடிகள் இலங்கையில் பெரிதும் பரவியிருந்தார்கள்.]  மேலும் வந்திறங்கிய விஜயனும் அவனது 700  தோழர்களும் இயக்கர்குலத்   தலைவியான குவேனி நூல் நூற்றுக் கொண்டிருக்கும் போது அவளை சந்தித்து பின்னர் விஜயன் அவளை மணந்து கொண்டு அவள் மூலம் இரு பிள்ளைகளை பெற்று இலங்கையில் ஆட்சியுரிமையை  அதிகாரபூர்வமாய் பெற்று கொண்டபின் இலங்கையின் முதல் அரசனாக   முடி சூடிக்கொண்டான்.
குவேனி நூல் நூற்றுக் கொண்டிருக்கும் போது விஜயனின் வருகை 

மேலும் குவேனியையும் அவள் பிள்ளைகளையும்  காட்டுக்கு துரத்திய பின்னர் பாண்டி நாட்டு இளவரசியையும் அவள் தோழிகளையும் வரவழைத்து அவனும் அவன் தோழர்களுமாய்   மணர்ந்து கொண்டனர்என்பது மகாவம்சம்.. யாழ்ப்பாண வைபவமாலையின் படி விஜயனும் அவன் பரிவாரம்களும் குடியமர்ந்த இடம் கதிரமலை எனப்படுகிறது. இக் கதிரமலையை பலர் ஆய்வின் மூலம் இலங்கையின் மத்தியில் தேடி கண்டறிய முட்படுகின்றதொடு கதிர்காமமாய் கண்டவர்களும் உள்ளனர். ஆனால் இக் கதிரமலை என்பது யாழ்ப்பாணத்திலுள்ள  கந்தரோடையையே என்பதும் கறிதிட்கொள்ளப்படும்   வாதங்கள். சுன்னாகத்தில் கதிரைமலை என்னும் ஒரு பிரதேசம் இருப்பதாக சுவாமி ஞானப் பிரகாசம் அவர்களின் கூற்று.   பின்னர் அவன் தன குடியிருப்பினை அனுராதபுரதிட்கு மாற்றியதாகவும் சொல்லபடுகிறது. விஜயன் இலங்கையை வந்தடையும்போது  இலங்கையில் காணப்பட்ட  மதம் இந்து மதம் என்றும் விஜயனும் ஓர் இந்துவாகவே வந்து தரையிறங்கினான் என்பதும் அவன் இலங்கையின் நான்கு பக்கமும் சிவாலயங்களை புதுப்பித்ததன் அல்லது கடுவித்ததன்   மூலம் தெரிவாகின்றது. திருகேதீஸ்வரத்தை அவன் புதுபித்ததாகவும் திருகோணேஸ்வரம், அழிந்துவிட்ட மாத்தறை சந்திரசேகரீசுவரம், மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் ஆரம்ப வடிவான  கதிரையாண்டவர் கோவில் போன்றவற்றை கட்டுவித்ததையும்   தெரிகின்றோம்.

விவாதங்கள்
விஜயனே நாகரிகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினான் என்பது பிழையான வாதம் என்பர் நம் ஆய்வாளர்கள் அதற்கு அவர்கள் முன்வைக்கும் சான்று நூல் நூற்கும் அளவிற்கு நெசவில் தேர்ச்சி பெற்றிருந்த ஒரு இனம் நாகரிகமற்றதாய் கருதமுடியாது என்பதுட்பட  மேலும் விஜயன் வருகையின் முன்னரே மாதோட்டத்தில் துறைமுகம் இருந்ததானது நாகரிகமுள்ள மக்கள் வசித்தனர் என்பதற்கு சான்று பகர்கிறது என்பர் அவர். விஜயனே முதல் முடி சூடிய மன்னனாக   கருதுவது  பிழை என்பது எனது வாதம் காரணம் அவன் ஆட்சி உரிமையை பெற்று கொள்ள மணந்து கொண்டது ஒரு குலத்திற்கு தலைவியை என்பதால் குலத்தின் தலைவி என்பது கூறப்படும் போதே ஆட்சி உரிமையுடன் கூடிய வாழக்கை முறை   நடைபெற்றது என்பது தெளிவு என்பது என் வாதமாகும்.[தவறிருப்பின்  மன்னித்து அருள்வதுடன் சுட்டிக் காட்டுங்கள்]. மேலும் விஜயன் வந்து திருகேதீஸ்வரத்தை   புதுப்பித்தான் என்பதிலிருந்து விஜயன் காலத்திற்கு முனரே இங்கு கோவில்களுடன் கூடிய வழிபாடுடைய நாகரிக மக்கள் வாழ்ந்தனர் என்பதும் முன்னிலை  வாதங்கள் ஆகும். மேலும் விஜயன் குவேனியை மணந்ததில் இருந்து  இயக்கரும் நாகரும் மனிதர்களே இல்லை எனும் வாதத்தின் உறுதியற்ற தன்மை உறுதிப்படுத்தப்  படுகின்றது என்பது என் வாதம். ஏனெனில் மனிதர்களால் மனிதர்களுடனேயே மணஉறவை   ஏற்படுத்தமுடியும். என்பது என் கருத்து. [தவறிருப்பின்  மன்னித்து அருள்வதுடன் சுட்டிக் காட்டுங்கள்] 

அடுத்தபதிவு யாழ்ப்பாண மன்னர்களின் ஆரம்பகாலம பற்றிய  ஆய்வாக இருக்கும்.......
                                மேலும்  இங்கு  மதம்  சம்பத்தப்பட்ட  விபரங்கள் வரலாற்றை அறியத்தரும் நோக்குடனே அன்றி பிற மதங்களை சாடுவது அல்ல. என்கருத்தாக   குறிபிட்டது முனரே யாரும் குறிப்பிட்டனரா   என்பது தெரியவில்லை பிழையிருப்பின் கூறுங்கள்.         
    [இதன்  அடுத்த பதிவிற்கு யாழ்ப்பாண இராஜ்ஜியம்-03]             

0 comments:

Post a Comment