Advertise

Featured Post 5

IRAN vs UNITED STATES OF AMERICA & ISRAEL - 02

Written By mayuran on Monday, March 19, 2012 | 1:51 PM



       கடந்த பதிவில் ஈரானைத் தாக்க இஸ்ரேல் துடித்துக் கொண்டிருப்பதாகவும், ஆனாலும் இஸ்ரேலினால் ஈரானிய அணு உலைகளைத் தாக்க முடியுமா என்பதை எதிர்பாருங்கள் என்றும்   கூறியிருந்தேன் . [ கடந்த பதிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ]
        சரி , இஸ்ரேல்; ஈரானை எவ் வழிகளில் தாக்கலாம் ? அதற்கு இரண்டு வழிகள் உள்ளன .
 1>> ஏவுகணைகள் மூலம் தாக்கலாம் .
 2>> விமானங்கள் மூலம் தாக்கலாம் .
 ஏவுகணைகள் மூலம் ஈரானிய இலக்குகளைத் தாக்க முடியுமாயினும், மிக மிகப் பாதுகாப்பாக நிலத்தின் அடியில் அமைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான ஈரானிய அணு உலைகளை, அணு ஆராய்ச்சி மையங்களை ஏவுகணைகளால் தாக்கி அழிக்க முடியாது . { எனக்குத் தெரிந்தவரை ஏவுகணைகள் மூலம் நிலத்தின் மேலுள்ள இலக்குகளையே துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும் பாஸ்....}   ஆக, நிலத்தின் கீழ் அமைந்துள்ள இலக்கைத் தாக்க வேண்டுமானால் விமானத்திலிருந்து ஏவப்படும் ' ARMOR-PIERCING ' ரக குண்டுகளையே பயன்படுத்த வேண்டும் .


  
     so, ஒரேயொரு தெரிவாக இருக்கப் போவது; விமானங்கள் மூலம் தாக்குவது தான் . 
     விமானங்கள் மூலம் தாக்குவதென்றால் ஈரானிய எல்லைக்குள் ஒரே சமயத்தில் பெருமளவு விமானங்களை ( குண்டுவீச்சு விமானங்கள் + யுத்த விமானங்கள் ) அனுப்ப வேண்டியிருக்கும் . { இன்று போய், நாளை வருகிறோம் என்ற கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக பல நாட்களுக்கு தாக்க திட்டமிடப்பட்டால் ஈரான் பிரித்து மேய்ந்து விடும் பாஸ்....}  சரி, பெருமளவு என்றால் எவ்வளவு ? அதற்கு முதல் எத்தனை தாக்குதல் இலக்குகள் என்று தெரிந்தாக வேண்டும்

                          வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட ஈரானிய அணுசக்தி நிலையங்கள்  
   
   மேலுள்ள படத்தின்படி 9 இடங்களில் ஈரானிய அணுசக்தி நிலையங்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இவை தவிர மேலும் சில ரகசிய அணு சக்தி நிலையங்களையும் ஈரான் பராமரித்து வருகின்றது. { இவ் ரகசிய நிலையங்களில் fordo பகுதியில் அமைந்துள்ள யுரேனியம் செறிவூட்டும் நிலையம் தொடர்பான தகவல்கள் வெளியாகி இருந்தன }  இவ் அணு சக்தி நிலையங்களில் பெரும்பாலானவற்றில் மின் உற்பத்தி நடைபெறுகின்ற போதிலும் அதனுடன் இணைந்த வகையில் யுரேனிய சுத்திகரிப்பு , யுரேனிய செறிவூட்டல் போன்ற பணிகளும் நடைபெறுவதால் அவையும் நிச்சயமாக இஸ்ரேலிய தாக்குதல் இலக்கில் இடம்பெறும் . ஆக , குறைந்தது 8 இலக்குகளாவது தெரிவுசெய்யப்படும்; அவை ஒவ்வொன்றிற்கும் தலா 5 விமானங்களை என்றாலும் [ 3 குண்டுவீச்சு + 2 யுத்த விமானம் ] அனுப்ப வேண்டியிருக்கும் . so, குறைந்தது 40 விமானங்கள்  
     தாக்குதல் இலக்கும் ரெடி ; விமானங்களும் ரெடி ; அப்போ குண்டை  போட்டுறுவமா பாஸ் ?
                                                                                   ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத்

        அங்கேதான் பிரச்சனையே இருக்கிறது . விமானத்தில் வந்து குண்டு போடுவதென்றால் சும்மா ஜாலியாக வந்து அணுஉலைகள் மீது குண்டு வீசிவிட்டு, அகமதி நிஜாத்துக்கும் [ ஈரானிய ஜனாதிபதி ] கையசைத்து bay சொல்லிவிட்டு தளத்துக்கு திரும்பும் வேலையில்லை . சுமார் 1500 km தூரம் பறந்து வரவேண்டும் அணு உலையை நெருங்குவதற்கு ! { திரும்பிப் போக எங்கே பெற்றோல் அடிப்பார்களென்று எனக்குத் தெரியாது பாஸ்....}  அதுவும் ஈரானிய எல்லைக்குள் சுமார் 500-850 km என்றாலும் பறக்க வேண்டி இருக்கும் .


   சுமார் 40க்கு மேற்பட்ட விமானங்கள் பெருமெடுப்பில் ஒய்யாரமாகப் பறந்து வர ஈரான் என்ன பூவா பறித்துக் கொண்டிருக்கப்போகிறது ? { ஈரானிய விமான எதிர்ப்பு  ஏவுகணைப் படையினரும், விமானப் படையினரும் வேட்டிய (?) மடிச்சுக் கட்டிக்கிட்டு களத்தில இறங்கிடுவாங்க பாஸ்....}  ஈரானிடம் s-300 ரக ரஷ்யத் தயாரிப்பு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கைவசம் உள்ளன . [ விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் அமெரிக்க ஏவுகணைகளை விடவும் s-300 ரக ஏவுகணைகளே கூடியளவு துல்லியமாக செயற்படுவதாக ராணுவ வட்டாரங்களில் ஒரு கதையுண்டு ]   

                                                   s-300 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள்
  
 இந்த s-300 ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை தற்போது ஈரானுக்கு விற்பனை செய்வதற்கு ஐ.நா சபை தடைவிதித்துள்ளது . எனினும் முன்பு விற்கப்பட்ட ஏவுகணைகளை copy யடித்து ஈரான் தற்போது புதிய ஏவுகணைகளை உருவாக்கி வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன . எது எப்படியோ, ஈரானிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் நல்ல நிலையிலேயே உள்ளன என்பதற்கு சான்று அண்மையில் 2011 ஜூலையிலும் , டிசம்பர் 4 ந் தேதியும் ஈரானினால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க உளவு விமானங்கள் !!  { இதில் ஜூலை சம்பவம் தொடர்பில் பென்டகன் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை ; டிசம்பர் 4 ந் தேதி காலநிலை சரியில்லையாம்....

                                      டிசம்பர் 4 ந் தேதி வீழ்த்தப்பட்ட அமெரிக்க உளவு விமானம்
    
     சரி , விசயத்துக்கு வருவோம் . ஈரானுக்குள் வரும் இஸ்ரேலிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டால் அது இஸ்ரேலுக்கு மாபெரும் அவமானத்தைத் தேடித்தரும் . { 40 இல் 4 ஆவது விழாதா பாஸ்....}   
1964 விமானங்களை கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு விமான எண்ணிக்கை இழப்பு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாதாயினும் இஸ்ரேல் விமானிகள் உயிருடன் பிடிபட்டால் இஸ்ரேலின் நிலைமை நகைப்புக்கிடமானதாகி விடுவதோடு அது முழுமையான இஸ்ரேல் - ஈரான் போருக்கும் வழிசமைத்து அமெரிக்காவுக்கும் பிரசரை எகிறவைத்துவிடும் . { காரணம்; அமெரிக்க பொருளாதாரம் பற்றிய கவலைகள் }
     அப்படியானால் இஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று அணுஉலைகளைத் தாக்கவே முடியாதா ?  முடியும்!!!
    அதற்கு ஒரு வழி உண்டு ! அது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் பரிச்சயமான ஒரு வழி !!

 { அந்த வழி; எந்த வழி என்பதை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்.... }

IRAN vs UNITED STATES OF AMERICA & ISRAEL - 03 ஐ  படிக்க இங்கே கிளிக் செய்யவும்


ஒரு பிழைதிருத்தம் : சென்ற பதிவில் முகமது மொசாதே ஈரான் மன்னராக இருந்தார் என்று குறிப்பிட்டிருந்த்தேன் ; அது தவறு ; முகமது மொசாதே ஈரானிய பாராளுமன்றத்தின் பிரதமராக இருந்தவர் . அப்போது மன்னராக இருந்தவர் Mohammad Reza Shah Pahlavi . இவர் 1979 ஈரானிய புரட்சியின் பின்னர் நாடு கடத்தப்பட்டார் !!

 { தொடரில் ஏதாவது பிழைகள் இருந்தால் தயவுசெய்து குறிப்பிடவும் }


0 comments:

Post a Comment