Advertise

Featured Post 5

IRAN vs UNITED STATES OF AMERICA & ISRAEL - 03

Written By mayuran on Sunday, April 8, 2012 | 2:34 AM



            இஸ்ரேலிய விமானங்களால் பாதுகாப்பாகச் சென்று ஈரானிய அணு உலைகளைத் தாக்குவதற்கு ஒரு வழி உண்டு என்றும் , அது இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் பரிச்சயமான ஒரு வழி தான் என்றும் சென்ற பதிவில் கூறியிருந்தேன். [ சென்ற பதிவைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் ]
         அந்த வழி ; தொழில்நுட்பத்தின் மூலம் ஈரானைக் குழப்புவது ! அதாவது ஈரானிய ரார்களின் ரார் சமிக்ஞைகளைக் குழப்புவதன் மூலம் எந்தவொரு விமானமும் பறக்கவில்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடுதல் . இவ்வாறு குழப்புவதன் மூலம் விமானங்களால் ஈரானிய ஏவுகணைகளின் கண்களிலும் மண்ணைத் தூவி
விடலாம் . எனக்குத் தெரிந்தவரையில் அநேகமான விமான எதிர்ப்பு ஏவுகணைகள் ரார் மூலம் விமானத்தை 'lock' செய்த பின்பே இயக்கப்பட முடியும் . ஆகவே ராரில் இருந்து விமானத்தை மறைத்துவிட்டால் விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் தாக்க முடியாது ! ஆனாலும் இந்த வழியிலும் ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.
         வெவ்வேறு நாடுகள் வேறுபட்ட வகைகளில் ரார்களைச் செய்கின்றன. தொழில்நுட்பத்தின் மூலம் ஒருசில வகை ராடர்களை மட்டுமே ஒரே சமயத்தில் ஏமாற்றக்கூடியதாக இருக்கும் . { அமெரிக்காவின் F-117 ரக விமானத்தின் மூலம் அனைத்து வகை ரார்களையும் ஏமாற்ற முடியும். இந்த விமானம் தனது உடல் வடிவத்தின் மூலமே ராடர்களை ஏமாற்றுகிறது .
                                                     F-117 ரக குண்டுவீச்சு விமானம்       


    இந்த விமானம் இஸ்ரேலிடம் உள்ளதா என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை so, அதை விட்டுவிடுவோம்
    ஆகவே ஈரான் பல்வேறு நாடுகளிடமிருந்தும் ராடர்களைப் பெற்று கலவையாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தால் அவை அனைத்தையும் ஒரே சமயத்தில் ஏமாற்ற முடியாமல் போகலாம் . அவ்வாறு நிகழ்ந்தால் இஸ்ரேலிய விமானங்களின் கதி அதோ கதி ஆகி விடும் !
                                                                                 3-D ரார்
               ராடர் செயற்படும் முறை  

         இஸ்ரேல் ; ரஷ்ய மற்றும் ஈரானிய சொந்தத் தயாரிப்பு ராடர்களைக் குழப்புவதற்கு ஏற்பாடு செய்ய ஈரான்; இஸ்ரேலிய ராடரையே எதிர்த் தாக்குதலுக்கு உதவியாகப் பயன்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ! இதை ஏன் சொல்கிறேன் என்றால் , ஈரானியர்கள் இப்படிப்பட்ட 'தில்லாலங்கடி' வேலைக்குப் பெயர் போனவர்கள் . ஏற்கனவே இப்படிப்பட்ட சம்பவமொன்று அண்மையில் நிகழ்ந்துள்ளது! இஸ்ரேலிய தயாரிப்பு கம்பியூட்டர் புறோகிராம் ஒன்றைத்தான் ஈரான்; தனது ராணுவ ,உளவுத்துறை , அரசு கம்பியூட்டர்களில் பயன்படுத்தி வருகின்றது என்று சமீபத்தில் வெளியான தகவல் இஸ்ரேலை அதிர வைத்திருக்கின்றது. இதிலென்ன விஷயம் இருக்கிறது என்கிறீர்களா ? விஷயம் இருக்கிறது!
         இஸ்ரேலில் ; இஸ்ரேலிய தயாரிப்பு பொருட்களை அதன் எதிரி நாடுகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விற்பனை செய்வதற்கு கடுமையான தடை அமுலில் உள்ளது . தமது நாட்டு குண்டூசி கூட எதிரிகளுக்குப் போய்விடக் கூடாதென்று இஸ்ரேலிய அரசு கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றி கவனித்துக் கொண்டிருக்க சத்தமில்லாமல் சோலியை முடித்திருக்கிறது  ஈரானிய அரசு! இது எவ்வாறு நடந்தது தெரியுமா ?  ஈராக் அரசினூடாக !!     .
        அதாவது ஈராக் அரசு தமது அரசு தேவைகளுக்காகவென்று கூறி ரான்-ரெக் என்ற டென்மார்க் நிறுவனத்திடமிருந்து புறோகிராமை வாங்கியுள்ளது. இந்த டென்மார்க் நிறுவனம்; 'அலொட்' என்ற இஸ்ரேலிய நிறுவனத்திடம் இருந்து புறோகிராமை மொத்தமாக வாங்கி ஈராக்கிற்கு விற்றிருக்கிறது! இறுதியில் ஈராக் அதை திருட்டுத்தனமாக ஈரானுக்கு விற்றுவிட்டது!!
        இது தெரியவந்ததும் அந்த புறோகிராமை ரிமோட் shut-down செய்து முடக்குவதற்கு இஸ்ரேல் முயன்ற போதும் அம் முயற்சி பயனளிக்கவில்லை. வாங்கிய புறோகிராமை அப்படியே பாவிப்பதற்கு ஈரானியர்கள் என்ன அவ்(வ்)வளவு நல்லவர்களா ? அவர்கள் அதில் சில மாற்றங்களைச் செய்து விட்டார்கள். இதனால் புறோகிராம்; தயாரிப்பாளரின் எவ்வித தொடர்புமில்லாமல் தற்போதும் ஈரானில் ஜோராக இயங்கிக்கொண்டுள்ளது ! இதனால் தான் மேலே சொன்னேன், ஈரான்; இஸ்ரேலிய ராடரையே பயன்படுத்திக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று!!
        ஆகவே ஈரான் மீதான தாக்குதல் திட்டமிடப்படுவதற்கு முன்னர் ஈரானிடம் உள்ள சகல விதமான ஆயுத தளபாடங்கள், மற்றும் ராடர்கள் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் தொடர்பான முழுமையான உளவுத் தகவல்கள் திரட்டப்பட வேண்டும். தற்போது ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலின் தயாரிப்பு வேலைகள் பூர்த்தியடைந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்திருப்பதால், நிச்சயமாக இது சம்பந்தமான உளவுத் தகவல்கள் திரட்டப்பட்டிருக்கும். ஆனால் அவை எல்லாம் சரியான தகவல்களாக இருக்குமா என்பதே தற்போதைய கேள்வி . இதற்கு பதிலளிப்பதற்கு இஸ்ரேலிய உளவுத் துறையான 'மொசாத்' பற்றி தெரிந்திருக்க வேண்டும் .
{ மொசாத் தொடர்பான தகவல்களை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்....}

{ தொடரில் ஏதாவது பிழைகள் இருந்தால் தயவுசெய்து குறிப்பிடவும் }



0 comments:

Post a Comment