Advertise

Featured Post 5

போன்சாய் தாவரங்கள்

Written By mayuran on Thursday, April 12, 2012 | 7:27 PM



நாம் அண்ணார்ந்து பார்க்கும் பெரிய மரங்கள் எல்லாம் ஒரு அடி இரண்டடி உயரத்தில் ஒரு ஜாடிக்குள் இருந்தால் எப்படி இருக்கும் ? உண்மையில் அப்படி வளர்க்கமுடியும் ..ஏதோ சிறிய செடிகளைத்தான் கூறுவதாக நினைக்க வேண்டாம் ஆலமரம் அரசமரம் போன்ற நூற்றாண்டு தாவரங்களையும் இப்படி ஜாடிக்குள் வளர்க்க முடியும் இப்படியான தாவரங்களை போன்சாய் தாவரங்கள் என்று அழைப்பார்கள் இது ஒரு ஜப்பானிய கலை 

ஜப்பானிய மொழியில் போன் என்றால் ஆழமற்ற தட்டுக்கள் சாய் என்றால் செடிகள் என்று பொருள் போன்சாய் என்னும் ஜப்பானிய உச்சரிப்பு சீனாவின் penzai என்ற என்ற வார்த்தையில் இருந்து தோன்றியது 

இவற்றை அலுவலகங்களிலும் வரவேற்பறையிலும் வைக்கலாம் பார்வையாளர்களை வெகுவாக கவரக்கூடியவை  
இவற்றை உணவு,மருத்துவம் போன்ற தேவைகளுக்கு பொதுவாக பயன்படுத்துவதில்லை அழகுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் 

இக்கலை மூலம் 100 முதல் 200 ஆண்டுகள் வயது வாழும் தாவரங்களையும் வளர்க்க முடியும் அதாவது எந்த பல்லாண்டு தாவரத்தையும் இப்படி வளர்க்க முடியும் 

போன்சாய் தாவரங்கள் பரம்பரை முறையில் குள்ளமாக்கப்பட்ட  தாவரங்கள் அல்ல 
வளர்ந்து கொண்டிருக்கும் தாவரம் ஒன்றின் குருத்து இலைகள் ,வேர்கள் போன்றவற்றை கத்தரித்தல் இராசயனங்களை தூவுதல் போன்றவற்றால்  
இப்படி குள்ளமாக்கப்படுகின்றது 

ஒரு சில cm களே போன்சாய் தாவரங்கள் வளரும் என்பது பொதுவான நம்பிக்கை ஆனால் அப்படி அல்ல 25 முதல் 100 cm வரை வளரக்கூடியது 

இது தற்போது ஜப்பானிய கலையானாலும் இவை சீனாவில் இருந்துதான் ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்டன ஜப்பானிய பிக்குகள் மாணவர்கள் இம்பிரியல் அதிகாரிகள் போன்றோரால் 6 ஆம் நூற்றாண்டில் இருந்து சீனாவிற்கு மேற்கொள்ளப்பட்ட பிரயாணங்களின் போது ஜப்பானுக்கு கொண்டுவரப்பட்டது 

இதை ஆரம்பத்தில் ஜப்பானில் பயிரிட்டவர் Saigyo Monogatari Emaki  

போன்சாய் பற்றிய பழமையான ஆதார வரைபடம் இது Qianling இல் Tang dynasty யின் கல்லறையில் வரையப்பட்டது வரையப்பட்ட ஆண்டு கி.பி 706  

இம்முறையில் வளர்க்கப்படும் மரங்களின் தண்டுபாகம் தடிமனாகவும்,  கீழ்புறத்தில் அதிகமாகவும், மேற்புறத்தில் குறைந்ததாகவும் கிளைகள் கொண்டதாக இருக்க வேண்டும். கிளைகளுக்கு நடுவே இடைவெளி இருப்பது அவசியம். காய்ந்த இலைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். காலை, மாலை வேளைகளில் நீர் ஊற்ற வேண்டும். ஆனால், தண்ணீர் தேங்க கூடாது. மாதத்திற்கு ஒருமுறை தண்ணீரில் கரையும் உரங்களை இடலாம். மரங்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்த, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தொட்டியை மாற்ற வேண்டும். அப்போது, தடிமனான வேரை வெட்டிவிட வேண்டும். அலுமினிய ஒயர்களை கொண்டு விரும்பிய வடிவத்திற்கு கிளைகளை வளைக்கலாம். வீடுகளில், எல்லா தட்ப, வெப்ப நிலைகளிலும் போன்சாய் மரங்கள் வளரும். "ஆல், அரசு, வேம்பு, புளி, எலுமிச்சை, சப்போட்டா, மூங்கில், நாவல், சவுக்கு, கொன்றை போன்றவை போன்சாய் முறையில் வளர்க்க ஏற்றவை. 

பொதுவாக போன்சாய் மரங்கள் வளர்க்கப்படும் வடிவங்கள் இவை 





சில அழகான போன்சாய் மரங்கள் 































0 comments:

Post a Comment