
இந்தோனேஷியாவின் சுமாத்திரா தீவின் வடபகுதியில் புதன்கிழமை (11 04 2012) ஏற்பட்டுள்ள நிலநடுக்கமானது தெற்கு, தென்னிழக்காசியா எங்கும்; அதிர்ச்சி அலைகளை நிலத்திலும், மக்கள் மனங்களிலும் ஏற்படுத்தியுள்ளது. முதலில் பண்டா அசேயிலிருந்து 431 கிலோமீட்டர் தூரத்தில் 8.7 றிச்டர் அளவில் ஒன்றும், (2004 ஆம் ஆண்டு 220,000 மக்களைக் காவுகொண்ட நிலநடுக்கமும் பண்டா அசே பகுதியிலேயே உருவானதை நடுக்கத்துடன் ஞாபகப்படுத்துங்கள்.) இரண்டாம் நடுக்கமாக 8.2 றிச்டர் அளவில் ஒன்றுமாக இரண்டு நடு;க்கங்கள் இந்தோனேஷியாவில் மட்டுமன்றி தாய்லாந்து, இந்தியா, மலேஷியா, மியன்மார், மற்றும் இலங்கையிலும் உணரப்பட்டுள்ளது.
முதலாவது 8.6 நடுக்கமானது கடல்மட்டத்திலிருந்து 14.2 கி.மீ ஆழத்திலும், தொடர்ந்த 8.2 நடுக்கமானது கடல்மட்டத்திலி;ருந்து 10.3 கி;.மீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்திலுள்ள 22 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனேஷியாவில் 80 சென்ரிமீற்றர்வரை உயரமான சுனாமி அலைகள் 3 முறை கரையோரத்தைத் தாக்கியுள்ளன. எவ்வாறாயினும், நடுக்கமானது நிலைக்குத்தாகவல்லாது கிடையாகவே நிகழ்ந்ததால், பெரியளவிலான சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பிரிட்டிஷ் ஜியோலொஜிக்கல் சேர்வே (british geological survey - BGS) நிறுவனம் சொல்லியுள்ளது. அதனால் கடலடித்தகட்டில் எதுவித இடப்பெயர்வும் நிகழவில்லை என்றும், ஸ்ட்ரைக் - ஸ்லிப் (strike - slip) என அன்போடு அழைக்கப்படும் இவ்வகை நிலநடுக்கங்கள் மக்களை சுனாமியால் துன்புறுத்துவதில்லை என்றும் சொல்கிறார்கள்.
இலங்கையில் நடுக்கமானது சிறியளவிலேயே தென்பகுதியில் உணரப்பட்டது. பசுபிக் சுனாமி எச்சரிப்பு மையம் தெய்வேந்திர முனை, கொழும்பு, திருகோணமலை, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் சுனாமி ஆபத்து இருபடபதாக அறிவித்திருந்தது. தெய்வேந்திர முனையில் பிற்பகல் 04.09 க்கும், கொழும்பில் பிற்பகல் 04.30 க்கும், யாழ்ப்பாணத்தில் மாலை 06 மணியளவிலும் சுனாமி அலைகள் கொந்தளிக்க வாய்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அனர்த்தத்தினால் மொத்தமாக 108 பேர் இறந்துபோயுள்ளார்கள். இதுவரை 500க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. ஏற்கெனவே இந்தோனேஷியாவின் மென்டவாய் தீவுகளில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கமானது றிச்டர் அளவில் 7.7 ஆக அளக்கப்பட்டிருந்தது.
எது எவ்வாறாக அறிவிக்கப்பட்டாலும், எல்லாம் வல்ல விநாயகர் அருளால் பெருத்த சேதங்கள் ஏதுமின்றி நம் நாடும், ஏனைய நல்லவர்களால் ஆளப்படும் நாடுகளும் தப்பின.
எது எவ்வாறாக அறிவிக்கப்பட்டாலும், எல்லாம் வல்ல விநாயகர் அருளால் பெருத்த சேதங்கள் ஏதுமின்றி நம் நாடும், ஏனைய நல்லவர்களால் ஆளப்படும் நாடுகளும் தப்பின.
0 comments:
Post a Comment