யூதர்கள் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த  இனங்களில் இவர்களது இனமும் நிச்சயமாய் அடங்கும். ரத்தம் தோய்ந்த வரலாற்றை தமதாக்கி கொண்ட இனங்களில் இவர்களும் முக்கியம் வாய்ந்தவர்கள். யூதர்களை குறித்த வரலாற்றை முடிந்த அளவில் [என்னறிவுக்கு எட்டிய வரையில்] தருவதே இத்தொடர் கட்டுரையின் நோக்கம்.யூதர்கள் குறித்து அறியமுதல் அவர்களின் தொடக்கம் குறித்து ஆராய்வது தகும். 
பைபிள் காலத்துக்கு முந்தைய  யூதர்கள் 
தோற்றமும் பரம்பலும் 
கிறிஸ்தவர்களுக்கு முதல் தோன்றிய  யூதர்களின் தோற்றம் குறித்து நாம் அறிய யூதர்களின்  வேதநூலான தோரா,கிறிஸ்தவர்களின் வேதநூலான பைபிள்,இஸ்லாமியர்களின் வேதநூலான குர்ஆன் போன்ற நூல்கள் உதவுகின்றன. இம்மூன்று நூல்களிலும் பொதுவாக சொல்லப்படும் யூதர்களின் தோற்றம் குறித்த கதையொன்றை சுருக்கமாக பார்க்கலாம். "ஆதாம் ஏவாளின் 19 ஆம் தலைமுறைப் பேரனாக பிறந்த ஆபிரஹாமின் மனைவி சாரா என்பவளுக்கு நீண்ட காலமாக பிள்ளைபேறு கிடைக்கவில்லை. இதனால் குழப்பமுற்ற சாரா  தனது  வேலைக்காரிகளில் ஒருத்தியான ஆகார் என்பவளை ஆபிரஹாமிர்க்கு   இரண்டாம் தாரமாக மணம் முடித்து வைத்தாள். மணமான சிறிது நாட்களிலேயே ஆகார் கர்ப்பமாகி இஸ்மயீல் எனும் மகனை பெற்றெடுத்தாள்  . சிறிது காலம் கழித்து சாராவிட்க்கும் ஈஸாக் எனும் மகன் கிமு 1712 ஆம் ஆண்டு பிறந்தான். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட வாரிசு பிரச்னை காரணமாக தன மகன் இஸ்மயிலை அழைத்துக்கொண்டு வேலைகாரப்பெண் ஆகார் வீட்டை விட்டு வெளியேறி பாரான் என்ற பாலை நிலத்தில் குடியேறி தன மகனுக்கு எகிப்து நாட்டை சேர்ந்த பெண்ணை மணம் செய்து வைத்தாள்.இதே நேரம் சாராவின் மகனான ஈசாக்கிட்க்கும் ரெபேக்காவிட்க்கும் திருமணம் நடக்கிறது.   ஈஸாக்கை தொடர்ந்து வந்த அவன் சந்ததியினரே யூதர்கள் என்றும் இஸ்மயிலை தொடர்ந்து வந்த அவனது சந்ததியினர் அரேபியர்கள் என்றும் கூறப்படுகிறது" [ஆபிரஹாமின் வம்சத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் அத்தனை பேருக்கும் சுன்னத் எனப்படும் விருத்த சேனம் செய்து வைக்கப்பட்டதுடன் அது அவர்களின் மரபு . இம்மரபை யூதர்களும் இஸ்லாமியர்களும் இன்றுவரை கடைபிடிப்பது கவனிக்கத்தக்கது.]
இக்கதை பொதுவாக மேற் கூறப்பட்ட மூன்று நூல்களிலும் கூறப்பட்டவை..  இனி ஈஸாக்கின் சந்ததியை குறித்து சிறிது சுருக்கமாக நோக்கலாம். ஈசாக்கிட்க்கும் , ரெபேக்காவிட்க்கும் பிறந்த மூத்த மகன் ஏசா, அடுத்த மகன் யாக்கோபு இதன் பிறகு யாக்கோபுவின் மகனான ஜோசப் எகிப்து மன்னனின் கீழ் முக்கியமான பதவியிலிருந்த போது தன் சகோதரர்களையும் தந்தையையும் அழைத்து தன்னுடன் தங்க வைத்து கொண்டான். இவ்வாறு எகிப்தில் குடியமர்ந்த யாக்கோபுவின் சந்ததியினர் காலப்போக்கில் எகிப்தியர்களை விட பல்கி பெருகியதுடன் இஸ்ரவேலர்கள் என்று அழைக்கபட்டனர். [யாக்கோபு இஸ்ரயேல் என்றும்  அழைக்கபட்டான்]. பெருகிப்போன   இஸ்ரவேலர்களை கண்டு பயந்த எகிப்தியர்களும் எகிப்திய மன்னனும்  அவர்களுக்கு  பல துன்பங்களை விளைவித்தனர். 
அவர்களை மீட்டெடுத்து எகிப்தை விட்டு அழைத்து வந்த மோசஸ் அவர்களின் தலைவராயும் ஆனார் வரும்  வழியில் சீனாய் பாலை நிலத்தில் தங்கியிருந்த  போது தான் இவர்களின் மதக் கொள்கைகளும் ,தோரா எனப்படும் யூதர்களின் வேத நூலும் பிறந்தன.
இஸ்ரேலில் ஜோஷுவா தலைமையில் யூதர்கள் முதல் நுழைவு 
தொடர்ந்து மோசஸ் தன் நம்பிக்கைக்கு உரிய தளபதி ஜோஷுவா விடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்தபின் சீனாய் பகுதிகளிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர்கள் எரிக்கோ  எனப்பட்ட சுற்று மதில்களால் சூழப்பட்ட இன்றைய இஸ்ரேலை அடைந்தனர். அவர்கள் உள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் சுவர்களை தகர்த்து  உள்நுழைந்த அவர்கள் சகலரையும் கொன்று [ஒரு தேவதாசியின் குடும்பம் விதிவிலக்கு]  ஜோஷுவா தலைமையில் கிமு 1272 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்து அங்கேயே வாழத்தொடங்கினர்.
மன்னராட்சியின் ஆரம்பம் 
இவ்வாறு இஸ்ரேலில் வாழத்தொடங்கி பல ஆண்டுகளின் பின்னர் தமக்கென்று   ஒரு மன்னர் இலாத காரணத்தினால் சீலோ எனும் இடத்திலிருந்த ஆலய நிர்வாகியான சாமுவேலிடம் தமக்கு மன்னர் வேண்டும் என முறையிட்ட மக்களின் வேண்டுதலுக்கு இணங்க பெயர் குழுக்கள் முறை மூலம் தெரியபட்டவனே யூதர்களின் முதல் மன்னனான சவுல் இவனின் பின்னர் தாவிதும் அவனுக்கு அடுத்து சாலமோனும் மன்னரானார்கள்.
                                                            சவுல் மற்றும் தாவிது 
இவனது காலத்தில் தான் சாலமோன்தேவாலயம் கட்டப்பட்டது.அதன் பின்னர் ரெஹோபோம் ஆட்சிக்கு வந்தான் இவனது திறமையின்மையால் இஸ்ரேல் இரண்டாக பிரிந்ததுடன் வட பகுதியை பத்து பழங்குடியினத்தவர்  சேர்ந்து தனி ஆட்சி  புரிய ஆரம்பித்தனர் இது ஜிதேயா     எனப்பட்டது. தெற்கு   பகுதி இஸ்ரேலாகவே நீடித்தது  இதன் பின்னர் இஸ்ரேலை கைப்பற்றிய பாபிலோனியர்கள்  அதாவது கிரேக்கர்கள்  அண்ணளவாக 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி புரிந்தனர். இதன் போது இடிக்கப்பட்ட சாலமோன் தேவாலயம் இவர்கள் காலத்திலேயே மீண்டும் இரண்டாம் முறையாய் கட்டப்பட்டது.    
                                                            தொடரும்.................... 
[இங்கு மன்னர்களின் காலப்பகுதிகள் குறித்த குழப்பம் காரணமாய் தரவில்லை தெளிவாக அறிந்தவர்கள் அறியத்தரவும் மற்றும் இங்கு வரலாறுகள் முடிந்தவரை சுருக்கப் பட்டுள்ளது அதற்காக  மன்னிக்கவும் குறைகள் இருப்பின் அறியத்தரவும்]  



0 comments:
Post a Comment