Advertise

Featured Post 5

சமயங்களும் வரலாறுகளும்

Written By mayuran on Saturday, March 31, 2012 | 7:58 PM

உலகில் உள்ள சமயங்கள் பற்றிய பொதுவான விடயங்கள் ஒற்றுமைகள் அவற்றின் தோற்றங்கள் சமூகத்தில் அவற்றின் தலையீடு  வரலாற்றில் சமயத்தால் ஏற்பட்ட  யுத்தங்கள்   பற்றி அலசுவதே இப்பதிவின் நோக்கமாகும். இப்பதிவு சமயத்தைப்பற்றியது கடவுளைப்பற்றியது அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன்.



உலகில் உள்ள சகல சமயங்களும் பொதுவாக கலாச்சாரம், நம்பிக்கைகள் ,உலகை நோக்கிய வேறுபட்ட பார்வைகள் ,அனுபவங்கள் ,உள்ளுணர்வுகள் ,சில சமயங்களில் பிரபஞ்ச அறிவுகள் ,சமயங்களினூடாக அனைவரும் இணைக்கப்பட்டிருத்தலை நம்புதல் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.
மதங்களிற்கும்; அதை பின்பற்றும் மனிதர்களுக்குமிடையில் தொடர்பாடல்கள் உள்ளது. வழிபாட்டுமுறைகள் { பின்பற்றுபவர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள், பாமரமக்கள் பின்பற்ற வேண்டிய பிரார்த்தனைகள், சில விசேட நபர்கள் பின்பற்ற வேண்டிய பிரார்த்தனைகள் ( விசேட நபர்கள் பொதுவாக மதத்தலைவர்களாக,மத குருவாக இருப்பார்கள் )}, மதத்துடன் சார்பான கட்டடக்கலை, வழிபாட்டு  வசனங்கள், பாடல்கள், சொற்பொழிவுகள், கடவுள் ஊர்வலங்கள், திருமணம், மரண சடங்குகள், கலை, நடனம் இவைகள் எல்லாம் மதத்தை பின்பற்றுபவர்களின் தொடர்பாடல் முறைகள். இத்தகைய தொடர்பாடல்களின் ஊடாக மதம் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது. இவற்றுடன்  பாடசாலை ,கல்வி,அரசாங்கம்,அரசியல் என்பவற்றிலும் பாரிய செல்வாக்கை  செலுத்தி வந்துள்ளது.


 பிரபல மானிடவியலாளர் johnnmonoghan தனி மனித வாழ்வியல் பிரச்சனைகள் ,துரதிஷ்டம் பற்றிய நம்பிக்கைகள், தாங்கமுடியாத துன்பங்கள், கவலைகள், ஏன்  உலகம் இப்படி இருக்கின்றது; இதுபோன்ற விடயங்களுக்கான சமய ரீதியான விளக்கங்கள், விடைகளினூடாக எமது தனிமனித பிரச்சனைகளுக்கு  சமயம் விடை கொடுப்பதாக கூறி உள்ளார் ...


பெரும்பான்மையாக காணப்படும்  உலக சமயங்களில் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய அவதார புருஷர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்கள் கடவுள்கள் அல்லர் மனிதர்களும் அல்லர் இரண்டுக்கும் இடைப்பட்டவர்கள். இவர்கள் இறைவனின் தூதுவர்களாகவும் இறை அவதாரங்களாகவும்  நடத்தப்பட்டனர் அல்லது மதிக்கப்பட்டனர்.  இவர்களால் இவர்களது மதத்தை பின்பற்றுவோருக்கு நம்பிக்கைகள் ,செய்திகள் வழங்கப்பட்டன.
ஒரு தனிமனிதனால் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகளுக்கு இவர்கள் ஒரு தனி மனிதன் தன்  வாழ்நாளில் தொடர்ந்து நம்பிவந்த விடயங்களை விஞ்சுமளவிற்கு விளக்கமளித்திருக்கிறார்கள்; இது இவர்களை போன்றோருக்கு ஒரு பொதுவான வழமை !!



இன்றைய  உலகின் சமயப்பரம்பலுக்கு; முன்னைய காலத்தில் இருந்த ஒவ்வொரு நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ஏற்பட்ட படையெடுப்புக்கள், இராட்சியங்களின் எழுச்சிகள் வீழ்ச்சிகள் என்பவை முக்கிய காரணியாக இருக்கின்றது . வரலாற்றில்; அரசர்கள் தமது அரசாளும் திறமையால் ஆண்டார்கள் என்பதைவிட மறைமுகமாக  சமயத்தால் ஆண்டார்கள் என்று கூறுமளவுக்கு சமயம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக படை எடுக்கும் நாடு ,பிரதேசத்தில் தன்னை அங்கு; அந்தப்பிரதேசத்தை சார்ந்தவன் என்பதை அடையாளப்படுத்த சில அரசர்கள் தாங்கள் மதம் மாறினார்கள்; சில அரசர்கள் வன்முறையால் மக்களை மதம் மாற்றினார்கள் !!  சமயத்துக்காக வரலாற்றில் பாரிய யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. அன்றைய நாட்களில் சமயத்தை ஒன்று படுத்தும் கருவியாகவும், ஆட்சி செய்யும் அரசியல் ஆயுதமாகவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.  இன்றும் கூட அரேபிய நாடுகளில் தீவிரவாத இயக்கங்கள் தமது இயக்கங்களின் பலமாக பெரிதும் முன்னிலைப்படுத்தி வைத்திருப்பது சமயத்தைத்தான் ! சமயத்தைப்பயன்படுத்தி அவர்கள் தமது இயக்கங்களை வளர்த்துக்கொள்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம். ...


சமயத்திற்காக வரலாற்றில் நடைபெற்ற முக்கிய போர்களில் குறிப்பிடத்தக்கதாக இருப்பது "சிலுவை யுத்தம்"(Crusades ) இது மத்திய காலப்பகுதியில் ஐரோப்பாவில் இடம்பெற்ற முக்கிய நிகழ்ச்சியாகும்.
இயேசு கிறீஸ்துவால் ஆரம்பிக்கப்பட்ட கிறீஸ்தவ சமயம் ஐரோப்பா தொடக்கம் பல பிரதேசங்களில் பல பிரிவினரது ஆதரவுடன் பரவியது;
அதே காலத்தில் முகமது நபியால் அரேபியாவில் ஆரம்பிக்கப்பட்ட  இஸ்லாமிய சமயமும் அதிக வேகத்துடன் பரவியது. இவ்விரு மதத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட  சமயம் பரப்புகின்ற போட்டியின் முற்றுப்புள்ளியில் தொடக்கப்புள்ளியாக அமைந்ததுதான் சிலுவைப்போர் !


இப்போரில் கிறிஸ்தவ மக்கள் சிலுவை சின்னத்தை தமது மார்பில் ஏந்தியவாறு போரிட்டார்கள்; இஸ்லாமிய மக்கள் பிறை சின்னத்தை ஏந்தியவாறு  போரிட்டார்கள். இந்த மத யுத்தம் இரண்டு நூற்றண்டுகளுக்கு மேலாக இடம்பெற்றது ! பாரிய உயிரிழப்புக்களுடன் 8 சிலுவை யுத்தங்கள் வரை இடம்பெற்றுள்ளது.
இந்த யுத்தத்தின் முக்கிய காரணமாக இருப்பது கிறிஸ்தவர்களின் புனிதத்தலமாக காணப்பட்ட ஜெருசலேமையும் அதனை சார்ந்த பகுதிகளையும் முஸ்லிம்களின் பிடியில் இருந்து மீட்டுக்கொள்ளல்  ஆகும்.

இது ஆரம்பித்த  இடம் holyland.
holyland கத்தோலிக்கர்களால் இயேசு பிறந்து மரணித்து அடக்கம் செய்யப்பட இடமாக கருதப்பட்டு  புனித தேசமாக கருதப்பட்டது. இத்தகைய இடங்களுக்கு சென்றுவருவதன் மூலம் தாங்கள் செய்தபாவங்களுக்கு பரிகாரம் தேடலாம் என கிறிஸ்தவர்கள் நம்பினர் ..ஆனால் holyland  இல் ஆரம்பகாலத்தில் இருந்தே நீண்ட காலமாக அராபியர்கள் இருந்து வந்தனர் சிலுவை யுத்தம் திடிதிப் என்று முளைக்கவில்லை. ஆரம்பத்தில் இரண்டு மதத்தவர்களும் ஒற்றுமையாகத்தான்  இருந்தார்கள். அரபியர்கள் holyland க்கு கிறீஸ்தவர்கள் சென்று வருவதற்கு எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை.
சிறிது காலத்தில் விதி தன் பணியைப்புரிந்தது நிலைமையை தலை கீழாக்கி இரண்டு நூற்றாண்டுபோரை தொக்கி வைத்த மன்னன் ஜெருசலேமை கைப்பற்றினான் !!

(தொடரில் எதாவது குறைகள் இருந்தால் தயவு செய்து குறிப்பிடவும் )

தொடரும் ......












0 comments:

Post a Comment