Advertise

Featured Post 5

சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-02

Written By mayuran on Tuesday, March 27, 2012 | 1:34 AM

[இதன் முன்னைய பகுதிக்கு சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-01]

சேகுவேரா பிறப்பில் மேட்டுக்குடியை சேர்ந்தவராக இருப்பினும் பன்முக மக்களுடனும் பழக்கம் கொண்டிருந்ததுடன் தன்னை விட வசதியில் குறைந்தவர்களுடன் இயல்பிலேயே இரக்கமும் அனுதாபமும் கொண்டிருந்தார்.

பாடசாலைப் பருவம். 
கல்வியை  பொறுத்தவரையில் சிறந்து விளங்கிய எர்னஸ்டோ இசையிலும் ஓவியத்திலும் குறைந்த மதிப்பெண்களையே பெற்றுவந்தார். மேலும் ஆங்கிலத்திலும் அவருக்கு பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை என்று தெரிகிறது. இவரது சிறுவயதில் அரிதாகவே குளிக்கும் பழக்கம் உடையவராக இருந்ததால் பண்டி எனும் பொருள்படும் வகையில் சாங்கோ எனும் பட்டப் பெயரும் உண்டு. பாடசாலை பருவ நண்பர்களிடையே குவேரா மட்டும் வித்தியாசமான உடைபழக்கத்தை பின்பற்றினார் என்ற போதிலும் அவருடன் ஒழுக்கத்திலும் பண்பிலும் எவருமே போட்டி போட முடிவதில்லை பாடசாலைப் பருவத்தில் நீச்சல்,குதிரை ஏற்றம் ,டென்னிஸ்,கோல்ப் , போன்ற விளையாட்டுக்களில் ஆர்வத்தை வளர்த்துக்  கொண்டிருந்தவர் சதுரங்கத்தை தன் சிறந்த பொழுதுபோக்கு விளையாட்டாக கொண்டிருந்தார்.
                                          சே சதுரங்க விளையாட்டின் போது 
   
ரக்பியும் சேயும் 
பாடசாலைக்   காலங்களில் ரக்பி என்னும் பாடசாலை விளையாட்டு   குழுவில் இணைந்துகொண்டார். ரக்பி என்பது முரடுத்தனமான விளையாட்டாகும் என்பதுடன் சிறந்த வியூகங்களையும் சிந்தனைகளையும் வளர்க்கும் விளையாட்டாகும். இவ்விளையாட்டில்  தன் தனித்துவத்தை நிலைநாட்ட  குவேரா கடும் உடட்பயிற்ச்சி செய்ய வேண்டியிருந்ததுடன் மனவலிமையையும் அதிகரிக்கவேண்டியிருந்தது. பொதுவாக உடட்பயிட்சி ஆஸ்துமா நோயை மேலும் அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது. இதனால் எர்னஸ்டோ மூச்சிழுக்கும் குழல் [inhaler], எபி நெப்டின் ஊசி மருந்துகள், மனவலிமை ஆகியவற்றின் உதவியுடன் நோய்க்கான எதிர் போராட்டத்தை  தொடர்ந்தார். இது அவர் வாழ்நாள் முழுதுமான தொடர் பழக்கமாக இருந்தது.  ரக்பியில் இவரது தனித்துவமான விளையாட்டுமுறையால் பூசெர்   எனும் பட்டப் பெயர் கொண்டும் அழைக்கப்பட்டார். ரக்பியில் பின்கள ஆட்டகாரனாகவும் விளங்கினார். பின்கள  ஆட்டக்காரர் என்பதால் அவரே தலைவராகவும் இருப்பார். இதனால் தாக்குதல் நடத்தும் ஆட்டக்காரர்களுக்கு இவர் தான் வியூகங்களையும் கட்டளைகளையும் தொடர்ந்து வழங்கியபடி இருப்பார். இந்த திறமையே பின்னாளில் அவர் போர்த்தந்திரங்களை வகுக்கும் கட்டளையாளனாகவும்  சிறந்த தலைவராகவும் மாற்றியிருந்தது என்கின்றனர் எர்னஸ்டோவின் வரலாற்றை ஆராய்ந்தவர்கள்.
                           இடது பக்கத்தில் சே தன் சிறுவயதில் குடும்பத்துடன்  
எர்னஸ்டோ இசைத்துறையில் பெரிதாக அக்கறை கொண்டிறாதபடியால் நடனத்திலும் பெரிதாக ஈடுபாடுறவில்லை. "டாங்கோ" எனும் நடனத்தை மட்டும் கற்றிருந்தார். 1943 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களில் ஏற்பட்ட இராணுவத்திற்கு எதிரான மாணவர் போராட்டத்தின் போது "அடித்து துவைக்கப் படுவதற்காக நாங்கள் போராட வேண்டுமா ?? முடியாது [துப்பாக்கி] ஒன்றில்லாமல் என்னால் போராடமுடியாது" என  கைதுசெய்யப்பட்ட நண்பரான கிரனாடோவிட்க்கு பதிலளித்தார். இது உன்னால் முடியாவிட்டால் போராடாதே என்னும் சேவின் கொள்கைக்கு ஆதாரமாக காணப்பட்ட போதிலும் அவரது வாழ்நாட்களில் அவர் மேற்கொண்ட தொடர் போராட்டங்களில் இக்கொள்கையை அவர் தொடர்ந்து மீறினார் என்பது  பொதுவான கருத்து.

தொடரும்................... 
[இதன் அடுத்த பகுதிக்கு சேகுவேரா இறந்தும் வாழ்பவன்-03]

0 comments:

Post a Comment